Posts

Showing posts from October, 2011

தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்

Image
தமிழ் காமிக்ஸ் பற்றிய கருத்துக்கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் நிறைந்திருக்கும். மேலைநாடுகளில் 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட காமிக்ஸ் ( சித்திரக்கதை ) புத்தகங்களின் பதிப்பக உரிமைகளைப் பெற்று, குமுதம், கல்கி, ராணி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன் ஆகிய நாளிதழ்களில் முதன்முதலாக தமிழில் தொடர்கதைகளாகச் சித்திரக்கதைகள் வெளிவரத் தொடங்கின.  அதன் பின்னர் 1965-ம் வருடத்திற்குப் பின் ஃபால்கன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், வித்தயார்த்தி மித்ரம் ஆகிய புத்தக நிறுவனங்கள் முழுநீள சித்திரக்கதைகளாக வெளியிட்டுள்ளனர்.                தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1965-ம் வருடம் முதல் வெளிவந்துகொண்டிருந்தாலும், 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரை தான் காமிக்ஸ்களுக்குப் பொற்காலமாக விளங்கியது.   இந்த காலகட்டத்தில் தான் புற்றீசல் போல ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன.  லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ்...