The crook from outerspace எண்ணும் அயல் நாட்டு சித்திரக்கதை தமிழில், 1986- வருடம் திகில் காமிக்ஸில் தொடராக ( 18- பாகம்) வெளிவந்தது, அப்போதைய காலகட்டத்தில் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சித்திரக் கதையாகும், இச்சித்திரக் கதையை முழுப் புத்தகமாக வெளியிட்டால்? சிறப்பாக இருக்கும்- வேற்றுக் கிரகத்திலிருந்து பூமியை நோட்டமிட வந்திருந்த விண்வெளிப் பிசாசு ஒன்று, தற்செயலாக நீதிக் காவலன் ஸ்பைடர், விசித்திரன் என்கிற எத்தனோடு மோதிக் கொள்ளும் காட்சியைக் காண நேர்கிறது, அதில் ஆர்வம் கொண்ட விண்வெளிப் பிசாசு. இருவரையும் தனது விண்கலத்திற்கு கடத்திச் சென்று, இருவருடைய மனத்திரை மூலமாக. பூமியில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது. நினைத்த நேரத்தில், நினைத்த உருவத்திற்கு மாறும். அற்புத ஆற்றல் படைத்த அந்தப் பிசாசு. மேலும் பூமியில் வாழ்ந்த முன்னால் கொடியவர்களான ஜெஸ்ஸி ஜேம்ஸ்- பில்லி- ஜெங்கிஸ்கான்- ஹெர்குலஸ்- அல்-லூபரியான் போன்றவர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொண்டு- அவர்களைப் போன்ற தோற்றத்தில் தன்னை உருமாற்றிக் கொண்டு பூமியில் அட்டகாசம் புரியத் தொ...