சாகச வீரர் சார்லி சாயர்

1943- ம் வருடம் ராய் கிரேன் என்பவர். சார்லி சாயர் என்கிற சித்திரக்கதை பாத்திரத்தை உருவாக்கினார். சார்லி சாயரின் இயற்பெயர்- ஜான் பஸ் சாயர் என்பதாகும். இவருக்கு கிறிஸ்டி ஜேம்சன் என்கிற மனைவியும், பெப்பர் சாயர் என்கிற மகனும், ராஸ்கோ ஸ்வீனே என்கிற நண்பரும் உள்ளனர். யதார்த்தமான சித்திரக் கதைகள் மூலமாக பல வாசகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். மிகச் சிறந்த சாகச வீரரான சார்லி சாயர். இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், கடற்படை விமானியாக, பசிபிக் பெருங்கடலில் நடந்த யுத்தத்தில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு எண்ணைய் நிறுவனத்தில் பழுது பார்க்கும் நிபுணராக பணியாற்றினார். 1950 –ல் மீண்டும் கப்பற்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, 1960-ம் ஆண்டில் நடந்த வியட்நாம் போரில் கலந்து கொண்டவர். போருக்குப் பின்னர் தனியார் துப்பறிவாளராக மாறி, பல வழக்குகளை, தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1974- ம் வருடம் முதல், முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு சார்லி சாயர் அறிமுகமானார். அதன் பின்னர் இந்திரஜால் காமிக்ஸ்,ராணி காமிக்ஸ், மேகலா...