நியுயார்க்கில் மாயாவி

1970- களில் சித்திரக் கதைகளை வாசித்த அனைத்து சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் இரும்புக்கை மாயாவி நன்கு பரிச்சயமானவர். மாயாவியின் இரும்புக் கரம் மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் முழுவதும் மறைந்து, இரும்புக்கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இந்த அபூர்வ சக்தியைக் கொண்டு, பல விசித்திர ஜந்துக்களையும், பல விசித்திர வில்லன்களையும் அழித்து, நாட்டை பல முறை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். ஆனால்? ஆரம்பக் காலத்தில் இரும்புக் கை மாயாவியே நாட்டிற்கே பெரும் அச்சுருத்தலாக விளங்கியுள்ளார். அதன் கதை தான் இந்த நியுயார்க்கில் மாயாவி ... புரபஸர் பாரின்ஜரின் ஆய்வுக் கூட, விபத்தொன்றில் சிக்கிக் கொள்ளும், அவரது உதவியாளர் கிராண்டேலுக்கு(மாயாவி) எதிர்பாராத விதமாக அரூரபமாகும் சக்தி கிடைக்கப் பெறுகிறது. அதன் சக்தியைக் கொண்டு, உலகை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, முதலில் ஒரு வங்கியை கொள்ளையடித்தும், பின்னர் தொடர் விபத்துக்களை, நிகழச் செய்தும், அதன் மூலமாக பொது மக்களையும், அரசாங்கத்தையும் அதிர்ச்சியடையச் செய்கிறார் மாயாவி. இறுதியாக தனது அற்புத ஆற்றலை உலகிற்கு நிரூபிப்பதற்காக, ந...