2013 ஒரு கண்ணோட்டம்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவராதா என்றிருந்த காலம் மாறி, படிக்கக் கூட அவகாசம் தராமல் அடுத்தடுத்து நிறைய புத்தகங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளது. இது வரவேற்கத்தக்க சூழல்தான், இருந்தாலும், எண்ணிக்கையால் மட்டும் வாசகர்களை திருப்தி படுத்த முடியாது. அவர்களின் ரசனையறிந்து. தரத்துடன் புத்தகங்கள் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஜனவரியில் வெளிவந்த நெவர் பிஃபோர் ஸ்பெஷலில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் டிசம்பரில் நான்கு இதழ்களுடன் நிறைவு பெற்றுள்ளது. அதன் விவரங் கள்... 1. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் ( முத்து காமிக்ஸ் ) ஜனவரி - 2013 முத்து காமிக்ஸின் 40- ம் ஆண்டு சிறப்பு மலர். லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன், டைகர், சிக்பில், ஜில் ஜோர்டான், ஜான் ஸ்டீல், மாடஸ்டி, மாயாவி போன்ற நாயகர்களுடன் வெளிவந்து மிகவும் வரவேற்பைப் பெற்ற இதழ். 2. சிகப்பாய் ஒரு சொப்பனம் ( லயன் காமிக்ஸ் ) ஜனவரி - 2013 . டெக்ஸ் வில்லரின் வித்தியாசம...