முத்துக்கள் மூன்று

இம் மாதம் ( பிப்ரவரி) வெளிவந்துள்ள மூன்று சித்திரக்கதைகளும் ஒருவித மன நிறைவைத் தருகின்றன. அதுவும் பல காலமாக கிடப்பில் கிடந்த சாகஸ வீரர் ரோஜரின் வரவும் ஒருவித மகிழ்ச்சியைத் தருகின்றன. இவருடன் வந்துள்ள ரிப்போட்டர் ஜானி & ஜில் ஜோர்டானும் அனைவரது எதிர் பார்ப்பையும் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். அதே போல் இரத்தப் படலம் தொடரை வாசிக்காதவர்கள் இருப்பது மிகவும் அரிது. பல காலமாக நீண்டுச் செல்லும் இத்தொடர்களை சற்றும் விறு விறுப்பு குறையாமல் கொண்டு செல்லும் கதாசிரியர்களின் சாமர்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். விரைவில் வெளிவரப் போகும் காலனின் கைக்கூலி (ஸ்டீவ் ரோலாண்ட்) & விரியனின் விரோதி (மங்கூஸ்) ஆகிய இரண்டு கதைகளும் இப்போதே ஆவலைத் தூண்டுகின்றன. இத் தொடர்களில் (one shot story) எஞ்சியிருக்கும் கர்னல் அமோஸ், ஜோன்ஸ், இரினா போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். விரைவில் வரவிருக்கும் புத்தகங்கள் பின் குறிப்பு : இந்த மாதம் வெளிவந்துள்ள மூன்று ...