காமிக்ஸ் கிளாசிக்ஸ் லிஸ்ட்

லயன் & முத்து காமிக்ஸில் வெளிவந்திருந்த சிறந்த ( கிளாசிக் ) கதைகளை தேர்ந்தெடுத்து காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிட்டு வந்தனர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர். 1999 முதல் 2012 வரை தொடர்ந்து வெளிவந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் 2012 க்கு பிறகு நிறுத்தப்பட்டது, அதன் பிறகு ( 2013 ) மறுபதிப்பு (கிளாசிக்) கதைகளை முழு வண்ணத்தில் சன்ஷைன் லைப்ரரி என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். 1999 முதல் 2012 வரை வெளிவந்துள்ள காமிக்ஸ் கிளாசிக்ஸ் பட்டியலை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. 1. டாக்டர் டக்கர் & பாதாள நகரம் (ஸ்பைடர் & மாயாவி) 1999 2. சதிகாரர் சங்கம் & சிறைப்பறவைகள் (ஜானி நீரோ& லாரன்ஸ்) 1999 3. பாம்புத் தீவு & கடத்தல் குமிழிகள் (மாயாவி & ஸ்பைடர்) 1999 4. பழிவாங்கும் பாவை & கொல...