கம்பேக் ஸ்பெஷல் முதல்...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ! 2012 முதல் நமது லயன் & முத்து காமிக்ஸ்களில் தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றி பலரும் அவ்வப்போது வினா எழுப்பி வருகின்றனர் ! இது எப்போ வந்தது அது எப்போ வந்தது என்றும் கதைகள் ஹூரோக்களைப் பற்றிய விவரங்கள் என கேட்டு வருகின்றனர் . அவர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் உதவக்கூடும் என்பதற்காகவே இப்பதிவை பதிவு செய்கிறேன் ! 2012 முதல் 2021 வரை வெளிவந்த புத்தகங்களைப் பற்றிய முழு விவரத்தையும் ( முடிந்தளவுக்கு ) கொடுத்ததோடு நில்லாமல் , இனி தொடர்ந்து வெளிவரும் இதழ்களைப் பற்றியும் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! இப்பதிவைப் பற்றிய கருத்துக்கள் ( நிறை & குறைகள் ) ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும் ! நன்றி ! 2012 ஜனவரி 1. லயன் கம்பேக் ஸ்பெஷல் ( லயன் காமிக்ஸ் ) ( லக்கிலுக் + பிரின்ஸ் + இரும்புக்கை மாயாவி + காரிகன் ) 2. கொலைகாரக் கலைஞன் ( காமிக்ஸ் கிளாசிக்ஸ் ) (ஜா னி நீரோ வின் மறுபதிப்பு ) 3. விண்ணில்...