Posts

Showing posts from April, 2021

வாசு காமிக்ஸ்

Image
  1974-ல் சென்னையிலிருந்து வெளியிடப்பட்ட சித்திரக்கதை இதழாகும். வாசு காமிக்ஸ் நிறுவனம் தமிழிலேயே (தமிழகத்தில்) உருவாக்கப்பட்ட சித்திரக்கதைகளை மட்டுமே வெளியிடத் தொடங்கி னர் . இருப்பினும், இவற்றில் வெளியிடப்பட்ட கதைகள் யாவும் வெளிநாட்டுக் கதைகளின் தாக்கத்தினால் தமிழில் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன. மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த கதைகளையும், மாயாவிக் கதைகளையும், பேய் ஆவி தொடர்பான கதைகளையும், துப்பறியும் கதைகளையும் இவர்கள் வெளியிட்டனர்.   நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் இவ்விதழில் வெளிவந் திருக்கலாம் என கூறப்படுகிறது .   எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலே வாசு பிரசுரம் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியலை கீழே தொகுத்துள்ளேன். அதில் சிலது தவறாகவும் அல்லது இடம் மாறியும் வந்திருக்கலாம். அதே போல இன்னும் முழுமையான பட்டியல் கிடைக்கவில்லை! கிடைத்த வரையிலும் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு புத்தகங்களின் பெயர்கள் கிடைக்க கிடைக்க இங்கே மறுகணமே தொகுக்கப்படும்! இதில் வெளியிடப்பட்ட பெரும்பான்மையான கதைகளையும் ஓவியங்களையும் துளசி என்பவர் வரைந்துள்ளார். பேய்க்கதைகளை எழுத...