பயங்கர புயல் - இயற்கையின் சீற்றத்தை துல்லியமாக காட்டியிருக்கும் ஒரு மகத்தான சித்திரக் கதை

டாகோ-டாகோ என்னும் அழகிய தீவில் இந்த கதை தொடங்குகிறது. அங்கு ஓய்வெடுக்க வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் பார்னேயின் பழைய அடிதடி நண்பர் லோபோவை சந்திக்க நேர்கிறது. லோபோ ஒரு தீவை சூதாட்டத்தில் ஜெயித்த விவரத்தை சொல்லி அந்த தீவிற்கு அழைத்து செல்கிறார்.
அந்த தீவினை உரிமை கொண்டாடும் அண்ணன்-தங்கை டெட்டி மற்றும் கிறிஸ்டி இருவரும் அங்கு வசிக்கும் கானக வாசிகளை துணையாக வைத்துக் கொண்டு தீவில் வசிக்கிறார்கள். பிரின்ஸ் குழு மற்றும் லோபோவினை அந்நியர்களாக நினைத்து அவர்களை விரட்டியடிக்க நினைக்கும்போது, டெட்டி தவறி கடலில் விழுந்து விடுகிறான். அந்த தீவின் கரையோரத்தில் வசிக்கும் ஒரு ராட்சஸ ஜந்து ஒன்று அவனை துரத்துகிறது. அதிலிருந்து பிரின்ஸ் அவரை காப்பாற்றுகிறார். தன் உயிரை காத்த நன்றிக் கடனாக சமாதானமாகும் டெட்டி அவர்களுடன் சேர்ந்து தொல்லை கொடுத்து வரும் அந்த ராட்சஸ ஜந்துவை கொல்ல ஆயத்தமாகிறார்கள்.
அந்த ஜந்துக்கு நிறைய கடல் மீன்களை உணவாக போட்டு அது அரை மயக்க நிலையில் இருக்கும்போது வேட்டையடலாம் என்ற திட்டத்துடன் இருக்கும்போது, அந்த தீவில் வசிக்கும் காட்டுவாசிகளின் தலைவன் இவர்களின் குறுக்கீட்டினை விரும்பாமல் அந்த மீன்களில் ஒருவித வெறியை ஊட்டும் மருந்தினை கலந்து விடுகிறான்.
இரவு கடலில் உலவ போகும் பார்னேவை கொல்ல ஆட்களையும் அனுப்புகிறான். அந்த போராட்டத்தில் டெட்டி இறந்து விடுகிறான். இவனின் சதித் திட்டம் தெரியாமல் பிரின்ஸ் குழுவினர் கடலுக்கு வேட்டையாட செல்கின்றனர். இதற்கிடையில் கடலில் ஒரு பயங்கர புயல் ஒன்று உருவாகி வருவது யாருக்குமே தெரியவில்லை.
மருந்து கலந்த மீன்களை உண்ட ராட்சஸ ஜந்து வெறிக் கொண்டு இவர்களை தாக்குகிறது. அதனுடன் அவர்கள் கடலுக்கடியில் போராடிக் கொண்டிருகையில், மேலே பயங்கர புயல் ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கை மற்றும் செயற்கை சதிகளிலிருந்து பிரின்ஸ் குழுவினர் எவ்வாறு தப்புகின்றனர் என்பது தான் இந்த சித்திர கதை.
தனியாக கடற்கரையில் உலவப் போகும் பார்னேவை கொல்ல எதிரிகள் கத்தியுடன் வருவார்கள். அச்சயமத்தில் பார்னே தன் கையில் வைத்திருக்கும் துப்பாக்கியை காட்டி அவர்களை சுட முயல்வார். அவர்களுக்கு துப்பாக்கி என்றால் என்னவென்ற தெரியாத நிலையில் துப்பாக்கியை உதறி கையால் தாக்குவார். இதுவே என் மனதை கவர்ந்த இடம்.



Comments

  1. படம் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா அந்த விபரங்கள் தான் வரவே மாட்டேங்குது.

    ReplyDelete
  2. நண்பரே,

    விபரங்கள் விரைவில் என்று கூறி விட்டு எங்களை தலையைப் பிய்க்க வைக்கிறீர்களே இது நியாயமா.

    உற்சாகத்துடன் விபரங்களை விரையுங்கள்.

    ReplyDelete
  3. From The Desk Of Rebel Ravi:

    Bruno brasil,

    your coming soon posts are now the fad in the comics blogs. kindly post with the details soon.

    Rebel Ravi,

    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  4. இந்த பதிவை பார்த்து விட்டு நான் முதலை கண்ணீர்விட்டேன். உங்க கிட்டே இல்லாத புத்தகமே இல்லை போல இருக்கிறதே?

    ReplyDelete
  5. அருமையான கதை கரு. பிரின்ஸ் கதைகளுக்கு நான் என்றுமே ரசிகன். கடல் சார் கதைப்பாங்கு சித்திரங்கள் அவர் கதைகளில் மிக திறம்பட கையாண்டு இருப்பார்கள். இந்த கதையை படிக்க வாய்ப்பு இன்று வரை கிட்டவில்லை. வாய்ப்பு கிடைப்பின் படித்து விட்டு மீண்டும் கருத்து பதிகிறேன்.

    முதலை பட்டாளத்திடம் இன்னும் எவ்வளவு அரிய காமிக்ஸ்கள் இருக்கின்றன என்று ஒரு பட்டியல் கிடைக்குமா ? :)

    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  6. நண்பரே,

    இக்கதையின் கதாநாயகனான, கடல் குகையில் வசிக்கும் ராட்சத விலாங்கு வகையைச் சேர்ந்த மீனினம் கதையில் வரும் கட்டங்களில் திகில் கிடுகிடுவென உயரும், அதுவும் கிளைமாக்ஸ் கட்டம் உச்சமாக இருக்கும்.பார்னே கதாபாத்திரம் பற்றி கூற நீங்கள் தந்துள்ள உம் அருமை.

    வருங்காலங்களில் பதிவைத்தனியே இடுங்கள், இல்லாவிடின் பதிவு வலைப்பூ சைட் பாரில் முன்னோட்டம் வெளிவந்த நிலையிலேயே இருப்பதால் அன்பர்கள் அதனைக் கவனிக்க தவறும் வாய்புகள் உண்டு.

    சுருக்கமான, சுவையான பதிவு.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  7. கதை போலவே விறு விறு என செல்லும் பதிவு. தற்போது ஏன் பிரின்சின் கதைகள் lion இல் வருவது இல்லை? என்னை பொறுத்தவரை நமது lion & muthu வில் கேப்டன் டைகர், இரத்தபடலம் கதைகளுக்கு அடுத்தபடியாக பிரின்சின் கதைகளை தரமானவை என கூறலாம். பிரின்சின் கதைகளை மீண்டும் தமிழில் படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். விஜயன் சார் கவனிப்பாரா?

    ReplyDelete
  8. திரு புருனோ பிரேசில் அவர்களே,

    அடுத்த பதிவு எப்போது? இந்த கதையை நான் சமீபத்தில் தான் வாங்கி படித்தேன். வேறு ஏதோ ஒரு பதிப்பகம் கூட இந்த கதையை வெளியிட்டதாக நினைவு. சரியா?

    இதற்கிடையில் என்னுடைய வலைப்பூவில் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) தோன்றும் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் கதை ஆகிய அறுந்த நரம்புகள் என்ற புத்தகத்தை அப்லோட் செய்து இருக்கிறேன்.

    நேரம் கிடைக்கின் படித்து மகிழவும்.

    புலா சுலாகி.
    தமிழ் இந்திரஜால் காமிக்ஸ்.

    ReplyDelete
  9. நண்பர் புருனோ, வணக்கம்.

    இந்த அற்புதமான கதையை கருப்பு வெள்ளையில் படித்து ரசித்தேன். ஆனால் உங்களிடம் இந்த கதை கலரில் உள்ளதே? வண்ணத்தில் ஒரு கதையை படித்தால் அதன் மதிப்பு பன்மடங்கு உயர்கின்றது.

    நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக பதிவுகளும், கமெண்ட்'களும் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதனை சரி செய்ய, சுஸ்கி-விஸ்கி மினி லயன் மூலம் அறிமுகம் ஆன அற்புத தொடர் பற்றிய திரைப்பட பதிவை இட்டு இருக்கிறேன்.

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  10. தோழர் புருனோ,

    பாராட்டுக்கள். சிறப்பான விமர்சனம். குறிப்பாக நீங்கள் எழுதும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வைரங்கள். இதன் மூலமே உங்களின் தேர்ந்தெடுக்கும் திறனை உணரலாம் (என்னை நண்பராக தேர்ந்தெடுத்ததில் இருந்த அது மற்றவர்களுக்கு விளங்கும்). அடுத்த கதை என்ன?

    நீண்ட இடைவெளிக்கு பிறகு காமிக்ஸ் வலையுலகிற்கு வருகிறேன். இடைப் பட்ட காலங்களில் சில பல காரணங்களால் கமெண்ட் இட இயலவிலலை. மீண்டு வந்து, மீண்டும் வந்து இருக்கிறேன். இனிமேல் தங்கு தடையின்றி என்னை நீங்கள் காணலாம்.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  11. லெட் த கும்மி ஸ்டார்ட்.

    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  12. முதலை பட்டாள நண்பரே.

    அற்புதமாக இருந்த இந்த பதிவு, இதுவரை உங்கள் பதிவுகளிலேயே சிறந்த பதிவு என்று கூறலாம்.

    செழி.

    ReplyDelete
  13. கீழே விழுகிறான் வியாபாரி,
    கீழ்தர மிட்டாய் வியாபாரி.
    மோசடி மிட்டாய் விற்குமவன்
    மோசடி இனிமேல் பலிக்காது.

    என்னுடைய அடுத்த பதிவின் முன்னோட்டம் இது.

    கெஸ் செய்ய முடிகிறதா? இது காமிக்ஸ் சம்பந்தப் பட்ட பதிவு தான், சந்தேகமில்லை.

    இன்னுமொரு Clue வேண்டுமானால் கொடுக்கிறேன்:

    ஒட்டி விளையாடு கண்மணியே,
    கை தட்டி விளையாடு கண்மணியே.
    ஒட்டிடு, ஒட்டிடு சிந்தித்து ஒட்டிடு.
    சிறப்புடன் ஒட்டிடு, சீக்கிரம் ஒட்டிடு.

    செழி.

    ReplyDelete
  14. நண்பரே,

    பல நாட்களாக உங்களை காணவில்லையே?

    என்ன ஆயிற்று?

    அடுத்த பதிவு எப்போது? ஆவலுடன் காத்து இருக்கிறோம்.

    ReplyDelete
  15. காமிக்ஸ் வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இந்த வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கொழிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல், அதற்காக உழைக்கவும் முயல்வோம். உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. .

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  16. காமிக்ஸ் வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இந்த வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கொழிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல், அதற்காக உழைக்கவும் முயல்வோம். உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. .

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்