சித்திர நினைவலைகள்



காமிக்ஸ் புத்தகங்கள் பற்றிய கருத்து கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும்தான் நிறைந்திருக்கும். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1970-ம் வருடம் முதல் வெளிவந்து கொண்டிருந்தாலும் 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரைதான் காமிக்ஸ்களுக்கு பொற்காலமாக விளங்கியது.

இந்த காலக்கட்டத்தில்தான் ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அவற்றில் முத்து காமிக்ஸ், இந்திரஜால், மாலைமதி, லயன், ராணி, அசோக், திகில், முத்து மினி காமிக்ஸ், சக்தி, மினி லயன், ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ், டார்ஜான் காமிக்ஸ், பார்வதி, மதி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், மலர் காமிக்ஸ் ரேகா காமிக்ஸ், கஸ்துரரி காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ் என பல காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்த காலமும் கூட.

எதை வாங்குவது எதை படிப்பது என்று திக்குமுக்காடிய காலகட்டமும் கூட. 1995-ம் வருடத்திற்கு பிறகு இதன் நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. புயலில் சிக்கி காணாமல் போன மாதிரி நிறைய புத்தகங்கள் காணாமல் போய்விட்டன. தற்போது லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் என்ற இரு இதழ்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வருடத்திற்கு ஆறு பிரதிகள் வருவதே அபூர்வமாக உள்ள நிலை. இந்த நிலைக்கு புத்தகங்கள் குறைந்தது பற்றி பார்ப்போமேயானால் கீழ்க்கண்ட காரணங்கள் காணக்கிடைக்கின்றன

பதிப்பாளர்களிடம் சரியான திட்டமிடுதல் இல்லாதது. விளம்பரங்கள் இல்லாததது. சரியான தேதிகளில் புத்தகங்கள் கடைகளில் கிடைப்பதில்லை. புதிய முயற்சிகள் அறவே இல்லை. புதிய வாசகர்களும் இல்லை. நிறைய வாசகர்கள் சரியான நேரத்தில் புத்தகங்கள் கிடைக்காத ஏமாற்றத்தில் படிப்பதையே குறைத்து விட்டனர்.

மீண்டும் புத்தக பதிப்பாளர்கள் புதிய முயற்சிகளுடன் தரமான கதைகளை மாதம் தவறாமல் வெளியிட்டு கடைகளில் கிடைக்க வைத்து புத்தகத்திற்கென்று கூடுதல் கவனம் செலுத்தினால் இந்த துறையில் மீண்டும் பழையபடி முத்திரை பதிக்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவோ பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் சித்திரக் கதைகளுக்கு என்றென்றும் தனி மவுசு உண்டு என்பதை பதிப்பாளர்கள் உணர வேண்டும். உதாரணத்திற்கு, சென்னையில் ஜனவரி 2009 -ல் நடந்த புத்தக கண்காட்சியில் சித்திரக் கதை புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டன. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அனைத்து புத்தகங்களும் விற்று தீர்ந்தன. சிறுவர்களும் பெரியவர்களும் ஆவலுடன் புத்தகங்களை அள்ளிச் சென்றனர். முன்பு போல் தமிழில் சித்திரக் கதைகள் நிறைய வெளிவராதா என ஏங்கிக் கொண்டிருக்கும் வாசகர்கள் இன்னும் பலர் உள்ளனர். சித்திரக் கதை புத்தகங்கள் என்றுமே நசிந்து விடாமல் இன்னும் ஏராளமான புதிய புத்தகங்கள் முன்புபோல் வெளிவர வேண்டுமென்பதே அனைவரது ஆவலாகவும் உள்ளது.


Comments

  1. முதலை பட்டாளத்தாரே, உங்கள் மனதில் எழும் இந்த கேள்வி மற்றும் எண்ணம் எல்லா தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களிடமும் உண்டு என்பதில் எந்த ஐயமுமில்லை.

    கொடுமை என்னவென்றால், இக்காமிக்ஸ்கள் சராமாரியாக வெளிவந்து கொண்டிருந்த போது அவற்றை வாங்க (பழைய கடைகளிள் கூட) கை வசம் காசு இல்லை. நாம் வாங்க முடியும் தற்காலத்தில் அவைகள் வெளிவருவதில்லை. இதே நிலைமை தானே மற்ற காமிக்ஸ் ஆர்வலர்களுக்கும் ஆரம்ப காலத்தில் ஏற்பட்டிருக்கும். முன்பை போல பல காமிக்ஸ்கள் வெளிவராமல், 2 அல்ல மூன்று பதிப்பகங்கள் சந்தையில் இருந்தாலே போதும் என்ற நிலை, ஆனால் இருக்கும் ஒரு ஆபத்பாந்தவனான லயன், முத்து கூட சரிவர வெளிவராமல் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருக்கும் நிலைமையில் தான் நாம் இருக்கிறோம்.

    நிலைமை மாறும் என்று உங்களுடன் சேர்ந்து நானும் பிராத்திப்பதை தவிர என்ன செய்ய முடியும். பார்ப்போம், காலம் பதில் சொல்லட்டும்.

    ÇómícólógÝபி.கு.: கண்கவர் அட்டை படங்கள் பல பதிப்பகங்களில் இருந்து வெளியிட்டு மீண்டும் ஒரு முறை உங்கள் காமிக்ஸ் பொக்கிஷத்தை பிரகடனபடுத்தி இருக்கிறீர்கள்... பாண்டியில் கொள்ளை என்று செய்திதாளில் தகவல் வந்தால் நான் பொறுப்பில்லை... அவ்ளோதான் சொல்லிட்டேன்.

    ReplyDelete
  2. நண்பரே,

    உங்கள் ஆசை தான் என் ஆசையும் கூட,ஆனால் அது நிறைவேறுமா என்பதற்கு உத்தரவாதமில்லை.

    வாசிப்பு என்பது முன்பை விட குறைந்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கு வேறு ஊடகங்களின் மீதான மயக்கம் மட்டுமன்றி, வாசகனின் ரசனையும் காலத்திற்கு காலம் மாறுபடுவதும் காரணமாக அமையலாம். அவனின் எதிர்பார்ப்பை ஒர் காமிக்ஸ் வெளியீடு தொடர்ந்து முடக்கும் பட்சத்தில் காமிக்ஸ் மீதான அவன் காதல் வேறு திசையில் செல்லும் வாய்ப்புகள் பெருமளவில் உண்டு.

    காமிக்ஸ்களை விநியோகம் செய்தலும் முக்கியமான ஒன்று. இங்கு சில வருடங்களின் முன் ராணி காமிக்ஸ் மட்டும் கிடைத்தது. லயன், முத்து வரவழைத்த்து தாருங்கள் என்றால் அவர்கள் முகவர்களுடன் தொடர்பு கொண்டு விட்டு அப்படி எதுவும் வெளிவருவதில்லை என்பார்கள்!!

    ஓநாய்க் கோட்டை எனக்கு மிகவும் பிடித்த கதை, கல்கியில் தொடராக வெளிவந்த பக்கங்களை என் அப்பா வழி பாட்டி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் எடுத்துப் படிப்பேன். சிறு வயதில் படித்த திகில் கதைகளில் அதுவும் ஒன்று.

    சூரப்புலி சுந்தர் படத்தில் நிற்பவரை பார்த்தால் அசப்பில் என் இனிய நண்பர் ஜோஸ் போலவே உள்ளது. என்ன ஒரு போஸ். அதிருதில்ல.

    உற்சாகத்துடன் தொடருங்கள்

    ReplyDelete
  3. உங்கள் ஆதங்கம் உண்மையே.
    ஒட்டு மொத்தமாகவே காமிக்ஸ் காண முக்கியத்துவம் தமிழ் பத்திரிகைகளால் குறைக்கப்பட்டு உள்ளது என்றே சொல்ல வேண்டும். முன்பெல்லாம் எல்லா வார பத்திரிகைகளிலும் ஒரு படக்கதை தொடர்கதையாக வந்து கொண்டு இருக்கும். ஆனால் தற்போது சிறுவர் பத்திரிக்கைகளில் கூட தரமான சித்திரகதைகளை பார்க்க முடிவதில்லை. தினசரிகளில் தினத்தந்தி மட்டுமே தொடர் சித்திரகதைகளை வெளியிடுகிறது. அதுவும் தரமற்ற சிந்துபாத் கதை. வாண்டுமாமா, செல்லம், ரமணி ஆகியோரின் ஓய்விற்கு பிறகு யாரும் தமிழ் சித்ரகதைகளில் கவனம் செலுத்துவதில்லை.
    தமிழ் காமிக்ஸ் ஐ பாதிக்கும் மற்றொரு விஷயம் இருகும் லயன் & முத்துவும் ஒழுங்காக கிடைப்பதில்லை.
    லயன் & முத்து நிறுவனம் தனது நடப்பில் உள்ள sales & distribution system ஐ மறுபரிசிலனை செய்து தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். ஒரு வருடத்திற்கு முன் சென்னை ல் சில கடைகளில் கிடைத்த லயன் முத்து காமிக்ஸ் தற்போது எங்குமே கிடைக்கவில்லை. T NAGAR மாதிரியான பகுதிகளில் கூட கிடைப்பதில்லை. (நொறுங்கிய நாணல் மர்மம் - இன்னும் என்னால் வாங்க முடியவில்லை). இதையெல்லாம் விஜயன் சார் சற்று கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.

    //1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரைதான் காமிக்ஸ்களுக்கு பொற்காலமாக விளங்கியது.

    இந்த காலக்கட்டத்தில்தான் ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அவற்றில் முத்து காமிக்ஸ், இந்திரஜால், மாலைமதி, லயன், ராணி, அசோக், திகில், முத்து மினி காமிக்ஸ், சக்தி, மினி லயன், ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ், டார்ஜான் காமிக்ஸ், பார்வதி, மதி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், மலர் காமிக்ஸ் ரேகா காமிக்ஸ், கஸ்துரரி காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ் என பல காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து//

    மன்னிக்கவும். எனக்கு தெரிந்தவரை மாலைமதி காமிக்ஸ் எண்பதுக்கு முன்னரே வார நாவலாக மாறி காமிக்ஸ் இதழ் நின்று விட்டது.

    சக்தி காமிக்ஸ் - 1983ல இதுவும் நின்று விட்டது. இது நின்ற பின்னரே முல்லை தங்கராசன் மேதா காமிக்ஸ் ஆரம்பித்தார்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  6. //உதாரணத்திற்கு, சென்னையில் ஜனவரி 2009 -ல் நடந்த புத்தக கண்காட்சியில் சித்திரக் கதை புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டன. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அனைத்து புத்தகங்களும் விற்று தீர்ந்தன//

    இதில் உள்ள PARADOX உங்களுக்கு புரியவில்லையா? in the first place, these books should not be available in the exhibition had everything been hunky dory. unfortunately, it is not so.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  7. முதலை பட்டாளம்,

    உங்களின் பதிவுகளிலேயே இதுதான் நல்ல பதிவு. இதனைப் போலவே தொடர்ந்து பதிவிடுங்கள்.

    ReplyDelete
  8. புலா சுலாகி,

    //சக்தி காமிக்ஸ் - 1983ல இதுவும் நின்று விட்டது. இது நின்ற பின்னரே முல்லை தங்கராசன் மேதா காமிக்ஸ் ஆரம்பித்தார்.// இல்லை. சக்தி காமிக்ஸ் 1984ல் தான் வந்தது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. உருப்படியான ஒரு பதிவு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. சக்தி காமிக்ஸ் மொத்தம் ஏழு (?!?) புத்தகங்கள் வெளிவந்தன. கடைசி புத்தகம் 1984 நவம்பர் மாதம் வந்தது. அதற்க்கு பிறகு வர வில்லை.

    இந்த சக்தி காமிக்ஸ் பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு. அனேகமாக அதனை பற்றி பதிவிடும்போது (டாக்டர் செவன் / விஸ்வா / அய்யம்பாளையம் வெங்கி சார்) கூறுவார்கள் என்றே நம்புகிறேன். பின்னுட்டத்தில் கூறும் விஷயமல்ல அது.

    ReplyDelete
  11. அன்புடையீர்,

    கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  12. FROM SPIDER,
    SUPER POST BOSS JUST KEEP GOING.

    ReplyDelete
  13. அருமை...!
    இப்போது நடுத்தரவர்க்க மக்கள் அதிக பணம் கொடுத்து புத்தகங்களை வாங்கத் தயாராக இருக்கின்றார்கள். இதை எமது தமிழ் காமிக்ஸ் வெளியீட்டாளர்களும் பயன்படுத்த வேண்டும்.

    மாதா மாதம் வெளியிடுவதற்கு மேலதிகமாக ஸ்பெஷல் பதிவுகளை டின் டின் போன்ற புத்தகங்களாக வெளியிடலாம். வெளியிடும் போது அட்டை, பக்கங்களின் தரம் ஒரிஜினல் புத்தகத்தைப் போல இருக்கவேண்டும்.

    இதுவே இந்த அடியேனின் ஆசை

    நன்றி
    Mr. J

    Mr J Comics

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்