சதுப்புநில காட்டு சாகசங்கள்
மான்டெனவானா என்ற கற்பனை நாட்டின் ஜனாதிபதி வாக்கரை கொன்றுவிட்டு அந்நாட்டை கைப்பற்ற துடிக்கின்றான் ஜெனரல் மன்டோஸா. மன்டோஸாவின் கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் ஜனாதிபதியை பிரின்ஸ் குழுவினர் காப்பாற்றுகின்றார்கள்.
தன்னாட்டு மக்களுக்கு தான் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்து சதிகார ஜெனரல் மன்டோஸாவின் பிடியிலிருந்து தன் நாட்டை பிரின்ஸ் குழுவுடன் எப்படி மீட்க போராடுகின்றார்கள் என்பதுதான் கதைஇந்த கதையில் சதுப்பு நிலக் காடும் ஒருகதாபாத்திரமாக அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அங்கே நடைபெறும் மரணப் போராட்டம் தான் ஹைலைட். கானக வாசிகளின் தீடீர் தாக்குதல்கள். சதிகார படையினரின் கண்களில் படாமல் தப்பி செல்லும் முயற்சிகள் என கதையை நடத்தி செல்லும் கதாசிரியரின் திறமையையும், சதுப்புநிலக் காட்டை கண்முன்னே கொண்டுவந்திருக்கும் ஒவியரின் திறமையும் இணைந்து இந்த சித்திர கதையின் தரத்தை எங்கோ கொண்டு சென்று விட்டன.
மனதை கவர்ந்த கட்டம் என்று உள்ளதல்லவா? கானகவாசிகளின் பிடியில் சிக்கிக் கொள்ளும் பார்னே-வை தனி ஆளாக மீட்க முடியாத காரணத்தினால் மனம் வருந்தி திரும்பிச் செல்லும் பிரின்ஸ், பார்னே-வின் மரண ஓலத்தை கேட்டு கானகவாசிகளின் மத்தியில் சுட்டுக் கொண்டே ஆவேசமாக புகுந்து தாக்குவார். முடிந்தவரை தன் உயிர் கிழ நண்பனை காப்பாற்ற முயற்சி செய்து, தானும் மடிவது என முடிவு செய்து இறங்கும் இந்த கட்டமே என் மனதை கவர்ந்த கட்டம்.
Comments

 1. அடடா பார்னே மற்றும் பிரின்ஸின் நட்பை பறைசாற்றும் கதையா... ஆவலுடன் காத்திருக்கிறேன்... ப்ரூனோ நண்பரே.

  ReplyDelete
 2. நண்பரே,

  உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 3. நண்பரே,

  உங்கள் பாணியில் சுருக்கமான, ஆனால் சிறப்பான பதிவு.

  உற்சாகமாக தொடருங்கள் உங்கள் அதிரடியை

  ReplyDelete
 4. என்னிடம் இருக்கும் மிக சொற்ப பிரின்ஸ் கதைகளில் தப்பி பிழைத்து இருக்கும் புத்தகம் இதுவே. வித்தியாசமான அமைப்பில் அருமையான கதையை தாங்கி வந்த இதழ் இன்றும் நியாபகத்திலும் தங்குகிறது.

  சதுப்பு நிலத்தின் கொடுமைகள் மற்றும் நட்பின் ஆழத்தை இக்கதையில் கண் முன் கொண்டு வந்திருப்பார்கள்... அதே கட்டம் உங்களையும் கவர்ந்ததில் ஆச்சர்யமே இல்லை.

  அடுத்த பிரின்ஸ் தாக்குதல் எப்போது, ப்ரூனோ?

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

  ReplyDelete
 5. murugansaid,
  BOSS I DONT HAVE WORDS TO EXPLAIN MY FEELINGS AS UR FAVOURITE SCENE IS ALSO MINE'S' TOO."UNN MARANAOOLAM ENNAI VERI KOLLA SEIKIRATHU BARNEY" WHAT A DIALOGUE TO EXPLAIN THE DEPTH OF THE FRIENDSHIP BETWEEN PRINCE AND BARNEY.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்

vagam comics list (வகம் காமிக்ஸ்)