பனிமண்டலக் கோட்டை - பனியில் ஒரு சாகசம்



கேப்டன் பிரின்ஸ்-ன் எதிரியான வாங்-ஓ-வின் அழகிய மகளை மூக் மாஞ்ச் என்ற இன்னொரு பிரபல கடத்தல்காரன் கடத்தி ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள வைரங்களை கேட்கிறான். பேரத்திற்கு உடன்படும் வாங்-ஓ தன் மகளை மீட்டு வர தன்னுடன் இருப்பவர்களை நம்பாமல் தன்னுடைய பரம வைரியான பிரின்ஸ்-ன் உதவியை நாடுகிறான். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பிரின்ஸ்-ம் அவனுக்கு உதவி செய்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் சம்மதிக்கிறான். வைரத்துடன் புறப்படும் பிரின்ஸ் மற்றும் பார்னே செங்குத்தான மலைகள், குறுகலான பாதைகள், கந்தகம் நிறைந்த பிரதேசங்கள், வழிப்பறி திருடர்களின் அபாயங்கள், மனித இரத்தத்தை ருசி பார்க்கும் ராட்சத வவ்வால்கள் என பல ஆபத்துகளை கடந்து மூக் மாஞ்சுவிடம் வைரங்களை ஒப்படைத்து வாங்-ஓவின் மகளை மீட்டார்களா என்பதுதான் கதை.


வித்தியாசமான கதை சூழல். பிரமிப்பான ஒவியங்கள். கடைசியில் மிரள வைக்கம் சஸ்பென்ஸ். ஓவியர் மற்றும் கதாசிரியர் ஹெர்மான் மற்றும் க்ரேக்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்திரப் புதையலை நமது லயன் மற்றும் முத்து வாசகர்களில் ஒருவரான திரு ராகுலன் என்பவர் பிரெனஞ் (மூலம்) மொழியில், பெரிய அளவில், முழு வண்ணத்தில் படித்தவர். நம்மைப் போல் அனைத்து தமிழ் காமிக்ஸ் வாசகர்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவருடைய சுய முயற்சியால் பெரிய அளவில் முழு வண்ணத்தில் அயல்நாட்டு தரத்துடன் ஸ்டார் காமிக்ஸ் என்ற பெயரில் மிகச் சிறப்பான முறையில் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.



அவருக்கு இக்கதையை பற்றி எழுதும் தருணத்தில் என் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

  1. நண்பரே,

    இக்கதைதான் நான் படித்த முதல் பிரின்ஸ் சாகஸம். வெளவால்கள் நிறைந்த குகையில் பிரின்ஸ் கோஷ்டி கடந்து செல்லும் காட்சிகள் மனதிற்கு விருந்து.

    இக்கதையை திகிலில் தான் முதலில் படித்தேன். அந்த அனுபவமே ஒர் சாகசம் தான். பிரின்ஸின் தலை முடி கலைந்திருக்கும் விதம் எனக்கு மிகப்பிடித்தமான ஒன்று.

    சிறப்பான பதிவு.

    ReplyDelete
  2. நண்பரே,
    இக்கதை(star comics) எங்கே கிடைக்கிறது என கூற முடியுமா. எனக்கும் பிரின்ஸ் கதைகளை படிக்க ஆர்வமாக உள்ளது .
    Lovingly,
    Limat

    ReplyDelete
  3. எனக்கும் Limat கேட்கும் அதே கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகின்றது.

    சித்திரங்கள் அருமையாக உள்ளது. கனவுகளின் காதலர் பிரஞ்சு மொழியில் சூரன் என்பதால் இந்த மூலப் புத்தகங்களை வாசிப்பதில் அவ்வளவு பிரைச்சனை இருக்காது அவருக்கு ;)

    நன்றி
    Mr. J Comics

    ReplyDelete
  4. நமது காமிக்கியல் ரபீக் இது பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஒரு பதிவிட்டிருக்கின்றார்

    http://www.comicology.in/2007/08/star-1-captain-prince-april.html

    அதன்படி ஸ்டார் காமிக்ஸின் கடைசியும் முதலுமான இதழ் இதுதான். கெட்ட காலம் ;(

    ReplyDelete
  5. நண்பர் லிமட் மற்றும் மிஸ்டர் ஜெ அவர்களே,

    இந்த புத்தகம் சென்னையில் உள்ள லேண்ட்மார்க் புத்தகக் கடை போன்று நிறைய புத்தக விற்பனை நிலையங்களில் கொடுக்கப்பட்டது.

    வேறு யாரிடமாவது தனி பிரதிகள் இருக்குமா என கேட்டுப் பார்க்கிறேன். நல்ல மொழி பெயர்ப்புடன் அட்டகாசமாக ப்ரென்ஞ்சில் எவ்வாறு வந்ததோ அவ்வடிவத்திலேயே வந்தது. இதற்காகவே திரு ராகுலனை பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  6. ப்ரேசில் அண்ணாத்தே.. என்ன பதிவை இவ்வளவு சுருக்கமாக முடித்து விட்டீர்கள். உங்கள் வழக்கமான பாணியில் பக்கங்களில் இருந்து சில காட்சிகளுடன் ஆழ்ந்து விமர்சித்திருக்கலாமே. கூடவே உங்களுக்கு பிடித்த கட்டம் எது என்று கூறியிருக்கலாம்.

    பிரின்ஸ் அந்த மலைமுகடுகளில் பயணம் செய்யும் அந்த காட்சிகள் என்றும் மறக்க இயலாத ஒன்று. இத்தனை கஷ்டங்களிடையும் அவர் கூடவே பிரயாணம் செய்யும் நம்ம பார்னேவின் நகைச்சுவை வசனங்கள் டாப் டக்கர். பிரஞ்சு மொழியிலும் பார்னே இவ்வளவு நகைச்சுவைகாராக இருப்பாரா ?

    இந்த கதையை நான் முதலில் படித்தது, ஸ்டார் காமிக்ஸ் அதை வெளியிட்ட பிறகுதான். அதன் பின்பே திகலில் வெளிவந்த இதழையும் படித்தேன். இரண்டு மொழிபெயர்ப்பில் எதை சிறந்தது என்று கூற முடியாத அளவிற்கு லயன் எடிட்டரும், லயன் வாசகரும் பின்னி பெடலெடுத்திருப்பார்கள். முக்கியமாக ராகுலனின் அந்த 'என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே' என்ற கட்டம் அருமையிலும் அருமை.

    நண்பர் ஜே, அந்த ஸ்டார் காமிக்ஸ் பற்றி வெளிவந்த வந்த அந்த பதிவுதான், புதிய பரிமாணத்தில் காமிக்கியலில் வெளிவந்த முதல் பதிவு. அந்த புத்தகம் கையில் கிடைத்தவுடன் அதற்கு உரிய அங்கீகாரத்தை எப்படியாவது பரைசாற்றி விட வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் நான் அந்த பதிவை இட்ட போது, இதற்கு பிறகு இனி இன்னொரு இதழ் வெளிவராமலே போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

    தமிழ் காமிக்ஸ்களுக்கே உண்டான தீராத சாபக்கேடு, அது சர்வதேச தரத்தில் வெளிவர முடியாததே என்பது போல. :(

    ReplyDelete
  7. CAPTAIN PRINCE ROCKS SO TOO OUR BRUNO.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்