முகமற்ற கண்கள்

வில்லியம் வான்ஸின் சித்திரங்களில் க்ரெக் (லுயி அல்பர் என்ற புனைப்பெயரில்)அவரின் கதையுடன் 1970-களில் வெளிவந்த ஒரு சித்திரத் தொடர் முதலைப்படை. தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஒரு இரகசிய பிரிவின் அதிரடி படை: முதலைப் படை. இந்த படையின் தலைவர் கலோனல் எல் (காமெடி கர்னல் இல்லீங்க!). கமாண்டர் ப்ரூனோ ப்ரேசில். படையின் உறுப்பினர்கள் பற்றி சிறிய அறிமுகம். ப்ரூனோ ப்ரேசில் கமாண்டர். மின்னல் வேக செயல்திறன் கொண்டவர் (என்னை போலவே) கௌச்சோ மோரல்ஸ் முன்னாள் ரௌடி. சிறைச்சாலையின் வெளிப்புறம் மட்டுமின்றி உள்புறமும் நல்ல பழக்கம் அண்ணாச்சிக்கு. விப் ரபேல் (அல்லது) ஜுடி சாட்டையடி வீராங்கனை. சர்க்கஸில் காட்டு மிருகங்களை சாட்டையை வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தவர் இப்போது நாட்டு மிருகங்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவர். டெக்ஸாஸ் அண்ணாச்சி ஒரு கௌபாய். டமால் டூமில் பேர்வழி. பில்லி ப்ரேசில் இவரும் அதிரடி படை காரர். கமாண்டர் ப்ரூனோவின் தம்பி. நாடோடி ஆள் பார்க்க ஜிப்சி அடிச்சா எதிரிகள் கப்சிப். இந்த சித்திர தொடர்கள் வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கதையே மு...