Thursday, September 3, 2009

கொலைகார கானகம்


கடலோரம் அமைந்த காட்டினால் சூழப்பட்ட தீவு ஒன்றில் தீடீரென காட்டுத் தீ ஏற்படுகிறது. தீயை அணைக்க முடியாதபடி காற்று பலமாக வீசி தீயை மேலும் வேகமாக பரவசெய்கிறது. தீவில் உள்ள மக்கள் தீவின் நடுவில் சிக்கிக் கொள்ள அவர்களை மீட்பதற்காக அருகிலுள்ள அனைத்து கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்து வந்தடையும் சிறு கப்பல்களால் கூட தீவை நெருங்க முடியாத அளவு கடலெங்கும் ஊசி போன்ற பாறைகள் அரணாக அமைந்துள்ளது. மீறி செல்வோருக்கு கப்பலும், உயிரும் மீஞ்சாத நிலைமை. காப்பீடு நிறுவனங்களும் கைவிரித்து விட்ட சூழ்நிலையில், பிரின்ஸ் குழுவினரின் கழுகு கப்பலும், மேலும் இரு கப்பல்களும் துணிச்சலாக தீவு மக்களை மீட்பதற்காக செல்கின்றன.


தீவில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் உபயோகமற்ற நிலையில் தீவு மக்களுக்கு உதவி வந்து கொண்டிருப்பதை தெரிவித்து, அவர்களை ஒன்று திரட்டுவதற்காக காட்டுத் தீக்குள் நுழைந்து செல்ல தயாராகிறார் கேப்டன் பிரின்ஸ்.


பல ஆபத்துகளை எதிர்நோக்கி செல்லும் பிரின்ஸ் தீவு மக்களிடம் பத்திரமாக சென்றடைந்தாரா? பார்னே தலைமையில் சென்ற மூன்று கப்பல்களும் விபத்தில் சிக்காமல் தீவிலிலுள்ள மக்களை மீட்டனரா? என்பதை இக்கதையின் முடிவு.ஒரு பிரின்ஸ் கதைக்குரிய அனைத்து தகுதிகளும் இக்கதைக்கும் உண்டு.


பின்குறிப்பு 1

மூல சித்திரங்களில் ஒரு கரடி காட்டுத் தீயில் சிக்கி தன்னுடைய குட்டியை காப்பாற்ற கேப்டன் பிரின்ஸை தாக்க முயற்சிக்கும். வேறு வழியில்லாமல் அதை கொல்லும் பிரின்ஸ் அநாதையான கரடிக்குட்டியை தன்னுடன் அழைத்து செல்வார். பிரின்ஸ் குழுவில் கரடிக்குட்டி இணைந்த கதை இதுதான். திகில் காமிக்ஸில் வந்த சித்திரங்களில் எடிட்டர் இதனை கதையின் சுவை கெடாதவாறு வெட்டியிருப்பார். கேப்டன் பிரின்ஸ் ஒரு ஆதரவற்ற விலங்கினை கொல்வது அவரின் இரசிகர்களான நம்மிடைய ஒரு சலனத்தை உருவாக்கும் என.

பின்குறிப்பு 2

சில தவிர்க்க முடியாத காரணங்களால் படங்களை முன்னதாகவும் பதிவினை சிறிது காலதாமதமாகவும் போட வேண்டியுள்ளது. அதை பொருட்படுத்தாது தொடர்ந்து வருகைபுரியும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு 3

என் பெயருக்கேற்ற வகையில் ப்ரூனோ ப்ரேசில் கதைகளையும் விமர்சனம் செய்ய உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

13 comments:

 1. ஆவலுடன் காத்து இருக்கிறேன் நண்பரே. அந்த குட்டி கரடியின் சாகசங்கள் இன்னமும் மறக்க வில்லை.

  ReplyDelete
 2. நண்பரே,

  நண்பர் ஜாலிஜம்ப்பரைப் போலவே அக்குட்டிக் கரடிக்கு நானும் ஒர் ரசிகன். பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. நண்பர் ப்ரூனோ,

  இந்த புத்தகம் இன்று கைவசம் இல்லையென்றாலும், இன்றும் நினைவில் தங்கும் ஒரு பிரின்ஸ் சாகஸம். பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. நண்பரே,

  நீங்கள் பேசாமல் உங்கள் பெயரை கேப்டன் பிரின்ஸ் என்றே வைத்துக் கொண்டு இருக்கலாம். இதுவரையில் ஒரு புருனோ பிரேசில் கதையை கூட இடவில்லை. ஆனால் அடுத்து அடுத்து கேப்டன் பிரின்ஸ் கதைகளை போட்டு எங்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகிறீர்கள். நன்றி.

  அடுத்ததாக ஒரு சிறிய விளம்பரம் - நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்?

  காமிக்ஸ் காதலன்
  பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
  யார் இந்த மரண அடி மல்லப்பா?

  ReplyDelete
 5. பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

  அன்புடன் ,
  லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

  ReplyDelete
 6. நண்பரே,

  பிரின்ஸின் ரசிகர்களிடம் எதிர்மறையான சலனங்களை ஏற்படுத்தும் என ஆசிரியர் எடிட் செய்த காட்சி பற்றிய தகவலிற்கு நன்றி.

  இருப்பினும் அக்காட்சி முழுமையாக இடம் பெற்றிருந்தால் மட்டுமே கதையின் முழுமை கெடாது இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

  பிரின்ஸை இயல்பான உணர்வுகள் கொண்ட பாத்திரமாகவே கதாசிரியர் ஹெர்மான் தன் கதைகளில் காட்டி வந்திருக்கிறார், அதனையும் தாண்டி பிரின்ஸிற்கு மேலான ஹீரோ அந்தஸ்து தர விரும்பியிருக்கிறாரா திகில் ஆசிரியர் என்ற கேள்வி எழாமலில்லை.

  சுருக்கமான சுவையான பதிவு.

  ReplyDelete
 7. அருமையான பிரின்ஸ் சித்திர கதையை பற்றி உங்கள் பாணியில் கச்சிதமாக பதிந்திருக்கிறீர்கள். இந்த கதையை திகிலில் படித்த போது, அந்த சின்ன கரடியின் அன்னியோன்யம் புலப்படவில்லை. இப்போது புரிகிறது, அது எப்படி பிரின்ஸ் குழுவினரிடம் ஐக்கியமாகி கொண்டது என்று. கேப்டன் பிரின்ஸ் கதைகளை மீண்டும் கிளாசிக் காமிக்ஸில் திரு.விஜயன் பதிவார் என்று கனா காண்கிறேன். பார்ப்போம்.

  இந்த கதை வெளிவந்த சமயத்தில் வாசகர் கடிதங்களில் யாரோ ஒருவர், ஏன் காடுகளில் இப்படி அலைந்து திரிந்து காப்பாற்ற வேண்டும். தீ அணைந்த பிறகு ஹெலிகாப்டரில் சுலபமாக காப்பாற்றியிருக்கலாமே என்று வினவும், ஆசிரியரும் அது சாத்தியம் தான், நம் வாசகர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் என்று பறைசாற்றியதாக படித்த நியாபகம்... உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா ?

  அடுத்த தாக்குதல் ப்ரூனோ பிரேசிலா... அமர்க்களபடுத்துங்கள் :)

  ReplyDelete
 8. நண்பரே இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் கிடைக்குமா??? என்ன பெயர்.

  அருமையான அதிரடிப் பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. என் அபிமான ஹீரோ ப்ரூனோ ப்ரேசில் பற்றிய பதிவுக்காக ஆவலுடன் காத்துஇருக்கிறேன்.
  ரஃபிக் குறிப்பிட்ட வாசகர் கடிதம் "பிரின்ஸ் in ஆப்பிரிக்கா" இதழுக்கு வந்தது என் எண்னுகிறேன்

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. BOSS UR STYLE OF WRITING IS REALLY REFRESHING KEEP POSTING.

  ReplyDelete