தலை வாங்கிய குரங்கு - டெக்ஸ் வில்லர் சாகஸம்

துப்பாக்கி வீரரான டெக்ஸ் வில்லர், ரேஞ்சர் உளவுப் பிரிவில் தலை சிறந்த ஏஜெண்டாக திகழ்பவர் . செவ்விந்திய இனத்தில் உள்ள ஒரு பிரிவான நவஜோ என்ற இனத்தின் தலைவர். வெள்ளையரான இவர் லிலித் என்ற செவ்விந்திய பெண்ணை மணந்து, சில வெள்ளையர்களின் சூழ்ச்சி காரணமாக மனைவியை பறிகொடுத்தவர். செவ்விந்திய இனத்தையும், அடிமைகளாக அழைத்து வரப்பட்ட ஆப்பிரிக்கர்களையும் வெள்ளையர்கள் வெறுத்தனர். டெக்ஸ் வில்லர் இவ்விரு இனங்களுக்காக தொடர்ந்து போராடுபவர். நவஜோ இனத்தவர் இவரை இரவுக் கழுகு என்றும் அழைப்பார்கள் டெக்ஸ் வில்லரின் உற்ற தோழனும், சக ரேஞ்சருமான கிட் கார்ஸன் நகைச்சுவை உணர்வு கொண்டவர். டெக்ஸ் வில்லருடன் பல சாகஸங்களில் பங்கேற்று உயிர் காப்பான் தோழன் என்பதற்கேற்ப திகழ்பவர். துப்பாக்கி சுடுவதிலும் வல்லமை பெற்றவர். டெக்ஸ் வில்லரின் வாரிசான சின்னக் கழுகு கிட் தந்தையை போலவே சாகஸ வீரர். டைகர் ஜாக் ஆபத்தான தருணங்களில் டெக்ஸ்-க்கு உதவும் செவ்விந்திய தோழன். தன்னுடைய பலங்களாக டெக்ஸ் கருதுவது இவர்கள் மற்றும் தன்னுடைய குதிரை டைனமைட் மற்றும் வின்சென்ஸ்டர். இவரின் சாகஸங்கள் இத்தாலி. ப்ரென்ஞ், ஆங்க...