தலை வாங்கிய குரங்கு - டெக்ஸ் வில்லர் சாகஸம்
துப்பாக்கி வீரரான டெக்ஸ் வில்லர், ரேஞ்சர் உளவுப் பிரிவில் தலை சிறந்த ஏஜெண்டாக திகழ்பவர் . செவ்விந்திய இனத்தில் உள்ள ஒரு பிரிவான நவஜோ என்ற இனத்தின் தலைவர். வெள்ளையரான இவர் லிலித் என்ற செவ்விந்திய பெண்ணை மணந்து, சில வெள்ளையர்களின் சூழ்ச்சி காரணமாக மனைவியை பறிகொடுத்தவர். செவ்விந்திய இனத்தையும், அடிமைகளாக அழைத்து வரப்பட்ட ஆப்பிரிக்கர்களையும் வெள்ளையர்கள் வெறுத்தனர். டெக்ஸ் வில்லர் இவ்விரு இனங்களுக்காக தொடர்ந்து போராடுபவர். நவஜோ இனத்தவர் இவரை இரவுக் கழுகு என்றும் அழைப்பார்கள்
டெக்ஸ் வில்லரின் உற்ற தோழனும், சக ரேஞ்சருமான கிட் கார்ஸன் நகைச்சுவை உணர்வு கொண்டவர். டெக்ஸ் வில்லருடன் பல சாகஸங்களில் பங்கேற்று உயிர் காப்பான் தோழன் என்பதற்கேற்ப திகழ்பவர். துப்பாக்கி சுடுவதிலும் வல்லமை பெற்றவர்.
டெக்ஸ் வில்லரின் வாரிசான சின்னக் கழுகு கிட் தந்தையை போலவே சாகஸ வீரர். டைகர் ஜாக் ஆபத்தான தருணங்களில் டெக்ஸ்-க்கு உதவும் செவ்விந்திய தோழன். தன்னுடைய பலங்களாக டெக்ஸ் கருதுவது இவர்கள் மற்றும் தன்னுடைய குதிரை டைனமைட் மற்றும் வின்சென்ஸ்டர். இவரின் சாகஸங்கள் இத்தாலி. ப்ரென்ஞ், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழில் வெளிவந்த டெக்ஸ் வில்லரின் முதல் கதையே இந்த தலைவாங்கிக் குரங்கு!
மால்பைஸ் என்ற கணவாய் பகுதியில் இரவு நேரங்களில் தனியே செல்லும் வழிப்போக்கர்கள் வினோதமான முரசொலி சத்தத்தை கேட்டதை தொடர்ந்து மர்மமான முறையில் தலை வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அப்பகுதியில் மக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றார்கள்.
மால்பைஸ் என்ற கணவாய் பகுதியில் இரவு நேரங்களில் தனியே செல்லும் வழிப்போக்கர்கள் வினோதமான முரசொலி சத்தத்தை கேட்டதை தொடர்ந்து மர்மமான முறையில் தலை வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அப்பகுதியில் மக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றார்கள்.
தற்செயலாக இப்பகுதிக்கு வரும் துணிச்சல் மிக்க ரேஞ்சரான டெக்ஸ் வில்லர் ஆபத்து நிறைந்த கணவாய் பகுதிக்கு தனியாக சென்று தொடர்
கொலைகளுக்கான காரணத்தையும், மர்ம கொலைகாரன் யார்
என்பதையும் துப்பறிய முயற்சிக்கிறார்.
குரங்கு வேடமணிந்த ஒரு வேடதாரியின் இரத்த வெறியினால் நிகழும் படுகொலைகள் என்பதை கண்டறிந்து இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்ம கொலைகாரனை அழித்து தொடர் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார்.
சஸ்பென்ஸ் நிறைந்த இச்சித்திர தொடர் தலைவாங்கி குரங்கு என்ற பெயரில் லயன் காமிக்ஸில் முதன் முதலாக டெக்ஸ் வில்லர் சாகஸமாக வெளிவந்தது.
சிறப்பான பதிவு. நீங்கள் வழங்கியிருக்கும் வண்ணப்படங்களும் அருமை நண்பரே.
ReplyDeleteமிகவும் பரபரப்பான கதை.., எதிர்பாரா முடிவு..,
ReplyDeleteஇன்றும் நியாபகத்தில் தங்கும் ஒரு டெக்ஸ் வில்லர் சாகஸம்.... குதிரை மீது அந்த கொரில்லா குரங்கின் ஆக்ரோஷமான போஸ் ஒன்றே போதுமே, கிலியை ஏற்படுத்த...
ReplyDeleteஅருமையான ஸ்கான் பக்கங்கள், நிறைவான பதிவு. கலக்குங்கள் பட்டாளத்தாரே.
I would like to appreciate your effort in selecting nice pictures. Your style of writing is also really very impressive. To be frank I stopped reading Comics. But after visiting your 'Mudhalaipattalam' I decided to start reading comics. You writings are inducing me to read it. I wish you from my heart to achieve bigger goals in the near future.
ReplyDeleteபலபலக்கும் வார்தைகளும் ஜொலிக்கும் படங்களுமான பதிவு. டெக்ஸின் முதல் கதை அட்டைபடத்தில் டெக்ஸ், கார்ஸன் என யாருமே இல்லை... குரங்கு மட்டுமே இருக்கிறது
ReplyDeleteWhat happend to you why there is no publications for the past 4 months
ReplyDelete