புரட்சித் தலைவன் பிரின்ஸ்



க்ரனாடா தீவின் செல்வந்தரான பிரான்ஜென் பணபலம், படைபலம் என அனைத்தையும் கொண்ட ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறான். அங்கு வசிக்கும் ஏழை விவசாயிகளின் நிலங்களை தன்னுடைய ஏற்றுமதி தொழிலுக்காக சொற்ப விலை கொடுத்து பறித்துக் கொள்கிறான்.



பிரான்ஜென்னால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் எமிலியோ என்ற நபரின் தலைமையில் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கி அவனை எதிர்கின்றார்கள். புரட்சிப் படை தலைவன் எமிலியோவை தந்திரமாக சிறை பிடிக்கிறான் ப்ரான்ஜென்.

இந்த சூழ்நிலையில் கழுகு கப்பல் பழுதடைந்த காரணத்தினால் க்ரனாடா தீவிற்கு வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் எதிர்பாராத விதமாக புரட்சிப் படை முகாமிற்கு வந்து சேர்கின்றார்கள்.



ப்ரான்ஜென்னுக்கு எதிராக போராடும் அவர்களின் உண்மைநிலையை கண்டு புரட்சிப் படைக்கு தலைமை ஏற்று எதிரிகளோடு மோதுகிறார் பிரின்ஸ்.

பிரின்ஸின் சாதுர்யத்தால் எதிரிகளின் படைகளையும் ப்ரான்ஜென்னின் சூழ்ச்சியையும் முறியடித்து அவனிடம் இழந்த அனைத்து மக்களின் நிலங்களையும் இறுதியில் மீட்டு தருவதே கதை.



பிரின்ஸ் கதைகளில் சற்று மாறுபட்ட விதத்தில் கௌபாய் பாணியில் இந்த சித்திரக் கதையை உருவாக்கி இருக்கின்றார்கள் கதாசிரியர் க்ரேக் மற்றும் ஒவியர் ஹெர்மான்.

Comments

  1. ப்ரூனோ நண்பரே,

    வழக்கம் போல பதிவு அதற்கு பின் அப்டேட் என்ற தங்கள் பாணியினால், இந்த பதிவை கவனிக்கவே இல்லை.

    புரட்சி தலைவன் பிரின்ஸ் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் சாகஸம் என்ற ஒரே காரணத்தால் என்னிடம் தப்பி பிழைத்திருக்கிறது. அருமையான கதையோட்டம், நீங்கள் கூறியது போல, சற்று வெஸ்டர்ன் பாணி கலந்த கலவை.

    ஹெர்மன் ஒவ்வொரு சித்திரத்திலும் எவ்வளவு நுண்ணிய விடயங்களுக்கு அக்கறை காட்டுகிறார் என்று பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. பிரின்ஸ் தொடரை மேற்கே யாரேனும் திரும்பவும் தயாரித்தால் தேவலம்.

    ReplyDelete
  2. நண்பரே,

    நீண்ட நாட்களிற்கு பின்பு உங்களிடமிருந்து வந்திருக்கும் பதிவு. இக்கதையை நான் படித்ததில்லை. தேடிப் பார்க்க வேண்டும். நண்பர் ரஃபிக் கூறியது போல் நவீன கதையமைப்புடன் பிரின்ஸ் சாகசங்களை யாரேனும் தொடர்ந்தால் மகிழ்ச்சிதான். சிறப்பான பதிவு.

    ReplyDelete
  3. நல்ல பதிவு நண்பரே.பிரின்ஸ் குழுவினரின் அருமையான கதைகளில் இதுவும் ஒன்று.தாங்கள் அடிக்கடி எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

    ReplyDelete
  4. ஒரு சிறப்பான கதையை பற்றி நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே. வித்தியாசமான ஸ்டைலில்(பாதி கலர், பாதி கருப்பு வெள்ளை) அமைந்த இந்த அட்டைபடம் லயனில் வெளிவந்த சிறந்த அட்டை படங்களுள் ஒன்று என்பது என் கருத்து. நல்ல வரவேற்ப்பை பெற்ற அட்டை கூட..

    ReplyDelete
  5. அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே ;)

    ReplyDelete
  6. ப்ரின்ஸ் கதைகள் அனைத்துமே அருமையாக இருக்கும். இதுவும் விதிவிலக்கில்லை.

    ReplyDelete
  7. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    Visit our website for more information http://www.thalaivan.com

    Latest tamil blogs news

    ReplyDelete
  8. அன்புடையீர்,

    அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

    கிசு கிசு கார்னர் 7 வலையேற்றப்பட்டுள்ளது.


    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  9. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

    நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஸ்டார்ட் மியூசிக்................................................................................................

    ReplyDelete
  11. Hi dear, My wishes for you to succeed and continue your Comics Journey..

    ReplyDelete
  12. Hi friend.A new post has been upped.Please do visit and spread the word..

    சிறை மீட்டிய சித்திரக் கதை.......

    http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html

    kindly delete this comment after reading...

    ReplyDelete
  13. From The Desk Of Rebel Ravi:

    bruno,

    why no posts for long time? are you busy or what?

    kindly continue your wonderful postings.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  14. நண்பரே,

    வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.

    http://007intamil.blogspot.com/2010/06/x.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்