1900-ல் சீனாவில் நடந்த ஆட்சி மாறல் கலவரத்தின்போது அரண்மனையில் உள்ள விலையுயர்ந்த வைரங்கள் (அட்றா சக்கை!) ஒரு சீன சிப்பாயால் கொள்ளையடிக்கப்படுகிறது. கலவரம் முடிந்தபின் கொள்ளை போன வைரங்களை கண்டுபிடிக்க முயல்கிறது சீன அரசாங்கம். (எங்கேய்யா கதாநாயகன்) சீனாவிலிருந்து ஏழு பாதிரியார்கள் நியூகினி தீவுகளில் வசிக்கும் பப்பூஸ் என்கிற காட்டுவாசிகளை மனம் திருப்ப செல்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அச்சிப்பாய் கொள்ளையடித்த வைரங்களை ஏழு ஈயச் சிலுவைகளுக்குள் மறைத்து அவர்களிடம் கொடுத்து விடுகிறான். பப்பூஸ் இனத்தவர் தீவிற்கு சென்ற பாதிரியார்களை கடவுள் அளித்த உணவு என நினைத்து அதன்படி நடந்துக் கொள்கின்றார்கள். நூறாண்டுகளுக்கு பிறகு ஜேக் என்ற நபருக்கு புதையல் இருக்கும் இடம் தற்செயலாக தெரியவருகிறது. தன்னால் மட்டும் புதையலை அடைய முடியாது என்பதால் கேப்டன் சொல்டான் என்பவனின் உதவியை நாடுகிறான். பேராசை குணம் படைத்த சொல்டானோ புதையல் ரகசியத்தை தெரிந்துக் கொண்டு அதை முழுவதையும் தானே அடைய பார்க்கிறேன். (அதுதானே நியாயம்!) இதற்கிடையே சொல்டானின் அள்ளக்கை மூலமாக இந்...