இரத்தத் தீவு (அ) ஏழு ஈய சிலுவைகள்



1900-ல் சீனாவில் நடந்த ஆட்சி மாறல் கலவரத்தின்போது அரண்மனையில் உள்ள விலையுயர்ந்த வைரங்கள் (அட்றா சக்கை!) ஒரு சீன சிப்பாயால் கொள்ளையடிக்கப்படுகிறது. கலவரம் முடிந்தபின் கொள்ளை போன வைரங்களை கண்டுபிடிக்க முயல்கிறது சீன அரசாங்கம். (எங்கேய்யா கதாநாயகன்)

சீனாவிலிருந்து ஏழு பாதிரியார்கள் நியூகினி தீவுகளில் வசிக்கும் பப்பூஸ் என்கிற காட்டுவாசிகளை மனம் திருப்ப செல்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அச்சிப்பாய் கொள்ளையடித்த வைரங்களை ஏழு ஈயச் சிலுவைகளுக்குள் மறைத்து அவர்களிடம் கொடுத்து விடுகிறான். பப்பூஸ் இனத்தவர் தீவிற்கு சென்ற பாதிரியார்களை கடவுள் அளித்த உணவு என நினைத்து அதன்படி நடந்துக் கொள்கின்றார்கள்.





நூறாண்டுகளுக்கு பிறகு ஜேக் என்ற நபருக்கு புதையல் இருக்கும் இடம் தற்செயலாக தெரியவருகிறது. தன்னால் மட்டும் புதையலை அடைய முடியாது என்பதால் கேப்டன் சொல்டான் என்பவனின் உதவியை நாடுகிறான். பேராசை குணம் படைத்த சொல்டானோ புதையல் ரகசியத்தை தெரிந்துக் கொண்டு அதை முழுவதையும் தானே அடைய பார்க்கிறேன். (அதுதானே நியாயம்!)

இதற்கிடையே சொல்டானின் அள்ளக்கை மூலமாக இந்த இரகசியத்தை ஒரு சீன கொள்ளைக்காரி லீ பின் ஸிங் தானும் களத்தில் இறங்குகிறாள். டொட்டடாய்ங்! நம் கதாநாயகர்கள் ரோஜர் மற்றும் பில் இதில் எதிர்பாராதவிதமாக மாட்டிக் கொண்டு, இரு கும்பல்களையும் சமாளித்து, பப்பூஸ் இனத்தாரை கடந்து சென்று தீவில் உள்ள சிலுவைகளை மீட்டார்களா என்பதுதான் கதை.





ஆயிரத்தில் ஒருவனை நினைவுபடுத்தினாலும், அதைவிட சிறப்பான சித்திரக்கதை இது. இந்த கதைக்கு சித்திரம் வரைந்தவர் வில்லியம் வான்ஸ் (இந்த பேர கேட்டாலே தமிழ் சித்திரக்கதை நேயர்கள் விசிலடிப்பார்கள்) கதாசிரியர் ஹென்றி வெர்ன்.

சில தேர்ந்தெடுத்த சித்திரங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

Comments

  1. தூங்கி கொண்டிருந்த முதலை பட்டாளம் மீண்டும் துயிர்த்தெழுந்து விட்டது போலிருக்கே... பேஷ் பேஷ்... பதிவை சீக்கிரம் இடுங்கள்.

    ReplyDelete
  2. மீண்டு வந்த முதலைப் பட்டாளத்திற்கு என் வாழ்த்துக்கள்! :)
    சீக்கிரம் நிறைய பதிவு போடுங்க..

    ReplyDelete
  3. கதையில் ஏழு ஈய சிலுவைகளின் நிலை என்ன ஆனது[ அட்டகாசமான மொழிபெயர்ப்பு] :)

    கிண்டலும், விறுவிறுப்பும் ஒருங்கிணைந்த பதிவு.

    ReplyDelete
  4. //பப்பூஸ் இனத்தவர் தீவிற்கு சென்ற பாதிரியார்களை கடவுள் அளித்த உணவு என நினைத்து அதன்படி நடந்துக் கொள்கின்றார்கள்//

    yennaaa villathanam???! :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்