இரத்தப்படலம் - ஜம்போ ஸ்பெஷல் -

கதாசிரியர் வான் ஹோம், ஓவியர் வில்லியம் வான்ஸ் இருவர் உருவாக்கிய இரத்தப்படலம் 1984-ம் வருடத்தில் ப்ரென்ஞ் மொழியில் முழு வண்ணத்தில் (ஹும்!) வெளிவந்தது. இதன் தொடர்ச்சி கடந்த 23 ஆண்டுகளாக 19 புத்தகங்களாக வெளிவந்து 2007-ம் வருடத்துடன் கதைத்தொடர் முடிவடைந்துள்ளது. வித்தியாசமான கதையமைப்பும், பிரமிக்க வைக்கும் ஒவியங்களும் இத்தொடர் வெற்றியடைய முக்கிய காரணங்கள். ப்ரென்ஞ் மொழியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடரை திரு எஸ் விஜயன் அவர்கள் முதன் முதலாக தமிழில் 1986-வருடம் திகில் காமிக்ஸில் (அட்டகாசமான காமிக்ஸ், ஏன் நிறுத்திட்டிங்க, சார்?) அறிமுகப்படுத்தினார். (இதன் ருசிகர பின்னணி இத்தொகுப்பிலே கொடுக்கப்பட்டுள்ளது). கடந்த 24 வருடங்களில் 10 புத்தகங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு 2010-ல் 1 முதல் 18 பாகங்கள் வரை ஒரே புத்தகமாக வெளியிட்டு இச்சித்திரத் தொடரை நிறைவு செய்துள்ளார். பிரன்ஞ் மொழியில் சாதனை செய்தது போல தமிழிலும் இரத்தப்படலம் சாதனை படைக்க முதலைப்பட்டாளம் சார்பாக வாழ்த்துக்கள்! ப்ரென்ஞ் மொழியில் வெளிவந்த ஆல்பங்களின் அட்டைப்படங்கள் சில உங்களின் பார்வைக்கு பின...