இரத்தப்படலம் - ஜம்போ ஸ்பெஷல் -


கதாசிரியர் வான் ஹோம், ஓவியர் வில்லியம் வான்ஸ் இருவர் உருவாக்கிய இரத்தப்படலம் 1984-ம் வருடத்தில் ப்ரென்ஞ் மொழியில் முழு வண்ணத்தில் (ஹும்!) வெளிவந்தது. இதன் தொடர்ச்சி கடந்த 23 ஆண்டுகளாக 19 புத்தகங்களாக வெளிவந்து 2007-ம் வருடத்துடன் கதைத்தொடர் முடிவடைந்துள்ளது.

வித்தியாசமான கதையமைப்பும், பிரமிக்க வைக்கும் ஒவியங்களும் இத்தொடர் வெற்றியடைய முக்கிய காரணங்கள். ப்ரென்ஞ் மொழியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடரை திரு எஸ் விஜயன் அவர்கள் முதன் முதலாக தமிழில் 1986-வருடம் திகில் காமிக்ஸில் (அட்டகாசமான காமிக்ஸ், ஏன் நிறுத்திட்டிங்க, சார்?) அறிமுகப்படுத்தினார். (இதன் ருசிகர பின்னணி இத்தொகுப்பிலே கொடுக்கப்பட்டுள்ளது).

கடந்த 24 வருடங்களில் 10 புத்தகங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு 2010-ல் 1 முதல் 18 பாகங்கள் வரை ஒரே புத்தகமாக வெளியிட்டு இச்சித்திரத் தொடரை நிறைவு செய்துள்ளார். பிரன்ஞ் மொழியில் சாதனை செய்தது போல தமிழிலும் இரத்தப்படலம் சாதனை படைக்க முதலைப்பட்டாளம் சார்பாக வாழ்த்துக்கள்!

ப்ரென்ஞ் மொழியில் வெளிவந்த ஆல்பங்களின் அட்டைப்படங்கள் சில உங்களின் பார்வைக்கு







பின் குறிப்பு ப்ரென்ஞ் மொழியில் 19 புத்தகங்களாக வெளிவந்த இச்சித்திரத் தொடரை தமிழில் 18 புத்தகங்களை மட்டுமே முழுத் தொகுப்பில் எடிட்டர் வெளியிட்டுள்ளார். 13-ம் பாகமாக வந்த The XIII Mystery (குற்றம் நடந்தது என்ன?) என்ற பாகத்தை ஒரு புலன்விசாரணை என்ற தலைப்பில் தனியாக வெளியிடவிருக்கிறார்.

பாகங்கள் 18 மற்றும் 19-ம் ஆல்பங்கள் ஒரே நேரத்தில் வெளிவரவேண்டி இருந்ததால் 18-ம் பாகத்திற்கு கேப்டன் டைகர் புகழ் க்ரௌட் சித்திரங்களை வரைந்துள்ளார்.


  1. The Day of The Black Sun, 1984 (Le jour du soleil noir) கருப்பு சூரியனின் நாள்
  2. Where the Indian Goes, 1985 (Là où va l'Indien) செவ்விந்தியன் போகுமிடம்
  3. All the Tears of Hell, 1986 (Toutes les Larmes de l'Enfer) பூலோக நரகம்
  4. SPADS, 1987 (SPADS) அதிரடி படை
  5. Red Alert, 1988 (Rouge Total, "Full Red Alert") சிகப்பு எச்சரிக்கை
  6. The Jason Fly File, 1989 (Le Dossier Jason Fly) ஜேஸன் ப்ளையின் நினைவலைகள்
  7. The Night of 3rd August, 1990 (La Nuit du 3 Août)
  8. Thirteen Against One, 1991 (Treize Contre Un)
  9. For Maria, 1992 (Pour Maria)
  10. El Cascador, 1994 (El Cascador)
  11. Three Silver Watches, 1995 (Trois Montres d'Argent)
  12. The Verdict, 1997 (Le Jugement)
  13. The XIII Mystery: The Inquiry, 1999 (L'Enquête)
  14. Danger to the State, 2000 (Secret Défense, "Top Secret")
  15. Unleash the Dogs!, 2002 (Lâchez les Chiens !)
  16. Operation Montechristo, 2004 (Opération Montechristo)
  17. Maximilian's Gold, 2005 (L'or de Maximilien)
  18. The Irish Version (La Version Irlandaise),2007
  19. The Last Round, November 2007 (Le Dernier Round).
இச்சித்திரத் தொடர் முடிவடைந்த போதிலும், இதில் பங்கேற்ற முக்கிய பாத்திரங்களை மையமாக வைத்து மேலும் சில ஆல்பங்கள் வெளிவந்தன. அதில் மங்கூஸ் - கொலைகாரன் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Comments

  1. முதலை பட்டாளத்தின் தூக்கத்தையும் லயன் ஜம்போ ஸ்பெஷல் தட்டி எழுப்பி விட்டது போலவே. பலே பலே.

    இந்த புத்தகம் பற்றி கண்டுக்காமல் கமெண்ட் அடித்து கொண்டிருந்த பாண்டி மைனரை, பட்டாளத்தினர் நேரில் சந்தித்து நெய்யபுடைத்தாக தகவல்கள் கசிவது உண்மையா...

    உங்களுக்கு போட்டியாக தனது வலைதளத்தில் கும்போ ஆர்டினரி என்று அவர் பதிவிட போவதாகவும் பட்சி சேதி சொல்லுகிறது. தேவைபட்டால் கூறுங்கள் சென்னையில் இருந்து சில பட்டாளத்தாரை துணைக்கு அனுப்பி வைக்கிறோம்.


    பி.கு.: அட்டை படங்களை ஸ்கான் செய்தது போல இருக்கிறதே.... அப்போது மொத்த ப்ரெஞ்சு பாகங்களும் முதலை பட்டாளத்தின் பட்டறையில் இருக்கிறது என்று தெரிகிறது... அடுத்த தேட்டை போட இடம் முடிவாயிடுச்சு டோய்.

    ReplyDelete
  2. அருமை! தகவல் பெட்டகமாக இருக்கிறது இப்பதிவு. தொடரட்டும் உங்கள் பணி....

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :))
    .

    ReplyDelete
  4. Execellent post .. congrats for your best efforts..

    ReplyDelete
  5. DEAR FRIEND,
    HATS OFF FOR UR WONDERFUL POST.KEEP GOING.

    ReplyDelete
  6. சார்,

    //இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.//

    என்று முத்து விசிறி அவர்கள் கூறியது உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.

    உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007

    ReplyDelete
  7. நல்ல தகவல் தொகுப்பு.. நன்றி நண்பரே..

    ReplyDelete
  8. புதிய பொலிவுடன், புதிய பகுதிகளுடன் - காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல்


    இனி, ஒவ்வொரு வெள்ளியும் - உங்கள் பேவரிட் இணையதளத்தில். படிக்க தவறாதீர்கள்.

    ReplyDelete
  9. from cyprus krieshna

    20 /06 /11 அன்று அனுப்பப்பட்ட கிங் விஸ்வா பற்றிய தகவலுக்கான பதில் பெறப்பட்டதால் அத் தகவலை மீள பெற்று கொள்கிறேன் . அத் தகவலை அனுப்பியதற்கு வருந்துகிறேன் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ் லிஸ்ட்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்