வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவி


வேதாளர் 1936-ம் ஆண்டில் உலகப்போருக்கிடையில், மோசமான பொருளாதார சூழ்நிலையில், லீ ஃபாக்-என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கதாநாயகன். ஆப்பிரிக்க கானகத்தில் உள்ள பெங்காலியா எனும் இடத்தில் வசிக்கும் பழங்குடி மக்களையும் வன விலங்குகளையும் பலதலைமுறைகளாக காத்து வரும் பாதுகாவலர்.

1600-களில் கடற்கொள்ளையரால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து பெங்காலியா காட்டில் ஒதுங்கிய கிறிஸ்டோபர் வாக்கர், பின்னர் கடற்கொள்ளையருக்கு எதிராக முதல் வேதாளராக மாறியவர். அவர் சந்ததியினரும் அவரை போலவே தீமைகளை எதிர்த்து போராட உறுதிமொழி எடுத்தவர்கள். தற்போதைய வேதாளர் செந்தாடி என்பவனை தலைமையையாய் கொண்டு இயங்கி வரும் கடற்கொள்ளையரை அடக்கி அவர்களை கொண்டே கடலோர காவற் படையை அமைத்தவர்.
அடர்ந்த கானகத்தில் மண்டை ஓடு குகையில் வசித்து வரும் தற்போதைய வேதாளர் 21-ம் தலைமுறையை சார்ந்தவர். அவரது பெயர் கிட் வாக்கர், மனைவி டயானா பால்மர் ஐ நா சபையில் பணிபுரிபவர்.

வேதாளருடைய வலது கையிலிருக்கும் கபால முத்திரை மோதிரம் எதிரிகளின் தாடைகளுக்கு நீங்காத நினைவுச் சின்னத்தை பதிக்கும். இவருடைய குதிரை ஹீரோ ஓநாய் டெவில் இரண்டும் அவருடைய நிழல்கள். இரண்டு கைத்துப்பாக்கிகள் அடங்கிய பெல்ட். வேதாளரின் கதைக்களனில் வரும் ஈடனின் தோட்டம் மிகச் சிறப்பான ஒரு கற்பனை. ஆனால் அது சாகசங்களின் தன்மையை ஈர்த்து போக செய்கிறதாக கதாசிரியர் உணர்ந்த போது அத்தோட்டம் சார்ந்த களன் ஒரம் கட்டப்பட்டது.உலகம் முழுவதும் உள்ள பல காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் இன்றும் இவருக்கென்று அளவிட முடியாத வாசகர்கள் இருந்து கொண்டு இருக்கின்றார்கள். நாளேடுகளில் இன்றும் இவரின் சாகசங்கள் 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் சித்திரத் தொடர்களாக வெளியாகின்றன. உதாரணத்திற்கு த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். நாவலாகவும், திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் வேதாளர் அறியப்பட்டுள்ளார். ஆனால் திரையுலகம் இதுவரை வேதாளரை சரிவர காட்சிப்படுத்தவில்லை.


தமிழில் வேதாளருடைய சாகசங்கள் இந்திரஜால் காமிக்ஸ் (தமிழ் மொழிபெயர்ப்பு வேதாளர் குத்து கும்மாங்குத்து என்றிருந்தாலும், கலரில் மிகக்குறைந்த விலையில் வந்ததொரு காமிக்ஸ்), ராணி காமிக்ஸ் (குறைந்த விலையில், சுமாரான மொழிபெயர்ப்பில் மாயாவி என்றழைக்கப்பட்டார்), வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ் (சில கதைகளே வெளிவந்தது), குமுதம் பத்திரிக்கையில் (1970-களில்) தொடராகவும் வெளிவந்தாலும், பெரும் புகழ் ஈட்டி தந்தது முத்து காமிக்ஸில் மட்டுமே.ஒரு ரூபாய் விலையில் வந்த 1.முகமூடி வேதாளன், 2. விண்வெளி வீரன் எங்கே? 3. விசித்திர கடற்கொள்ளையர், 3. இராட்சத விலங்கு, 4. மூகமுடி கள்வர்கள், 5. கப்பல் கொள்ளையர், 6. பூ விலங்கு, 7. சர்வாதிகாரி, 8. கானக கள்வர்கள், 9. ஜும்போ, 10. வேதாளனின் சொர்க்கம், 11. கீழ்த்திசை சூனியம்,
12 .சூனியக்காரியின் சாம்ராஜ்யம், 13. கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி, 14. முத்திரை மோதிரம்  போன்ற சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்த வேதாளரின் சித்திரக் கதைகளில் மொழிபெயர்ப்பு மற்றும் தரத்தில் மிகவும் சிறந்த கதைகள் என அறியப்படுகிறது.


Comments

 1. இதில் மாலைமலர் (மாலை முரசு?) விடுபட்டுள்ளது........ சிறு வயதில் இதில் ஒன்றில் படித்த ஞாபகம்......

  ReplyDelete
 2. "vethala mayathma" - pattri ezhutha kandippaga 1 posting pothathu enpathu ulagarintha unmai. [eden garden mattumalla.... rex,tom,hero,devil,precident,mandai ottu kugai, pokkishangal, villages,mutthirai mothirangal,... endru posting pota niraiya vishayangal ulla hero...] iruppinum ungal pathivu ATTAKASAM.. .............r.saravanakumar.

  ReplyDelete
 3. வாவ் சூப்பர்

  வேதாளருக்கு பெரும் புகழ் ஈட்டி தந்தது முத்து காமிக்ஸ்-ல் மட்டுமே

  காரணம் மொழிபெயர்ப்பு மற்றும் தரம்

  ReplyDelete
 4. Execellent Post.. Puthagathai Pokisham pol padhukathu ariya attai padangalai Pudhiya thagavaludan yengalodu pagirndhu kondatharku Mikka Nandri..

  ReplyDelete
 5. அட முதலை பட்டாளத்தார் ஒருவழியாக பாதை மாறி தற்போது மற்ற காமிக்ஸ் கதாபாத்திரங்கள் மீதும் தங்கள் கடை கண் பார்வையை செலுத்த ஆரம்பித்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே. பேஷ் பேஷ்...

  வேதாளர் எந்த சிறுவனின் இளமை பருவத்தை தான் சிறப்பிக்கவில்லை... காட்டு வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்த அற்புத உலகம். தற்போதைய கதைகளில் அந்தளவு சுரம் இல்லை என்றாலும், பழைய கதைகள் இன்றும் அதன் தரம் போற்றி பாடுகின்றன.

  எளிய தமிழில் வேதாளரின் அறிமுகம் செம்மை. அதனுடன் கலந்து பல அறிய புத்தகங்களின் அட்டை ஸ்கான்கள் பிரமிக்க வைக்கின்றன, பட்டாளத்தாரின் பாசறை பொக்கிஷங்கள்... மண்டை ஓட்டு குகையின் பொக்கிஷ அறைக்கே சவால் விடும் போலிருக்கிறது.

  ReplyDelete
 6. @ Ramesh: அது மாலை மலர் தான். மூன்று பத்திகளுக்கு மேல் வெளிவராவிட்டாலும், தெளிவான அச்சில் பெரிய அளவில் மாயாவியை வெளியிட்ட நாளிதழ் அது ஒன்றாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  முக்கியமாக மாயாவியின் உடையின் நிறத்தை, வெறும் புள்ளிகள் கொண்டு நிரப்பும் அந்த பாணியை நான் பலமுறை காப்பி அடிக்க முணைந்து தோற்றிருக்கிறேன். :)

  ReplyDelete
 7. Very interesting details! really a good article to read! I never get a chance to read the வேதாளன் stories which comes in MUTHU.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)