தவளை மனிதனின் முத்திரை

மர்ம திரைப்பட இயக்குநர் ஹிட்காக் பாணியில்அமைந்திருக்கும் மர்மக் கதை இது. சாகச வீரர்கள் ரோஜர், பில் ஆகிய இருவரும் ஆள் அரவமற்ற காட்டுப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு மர்ம பெண் அவர்களுடைய வழியில் குறுக்கிடுகிறாள். தன்னிலை மறந்து செல்லும் அவளை, இருவரும் பின்தொடர்ந்து செல்கின்றனர். சதுப்பு நில குட்டையில் நடுவில் தவளை மனித உருவம் கொண்ட நபரை நோக்கி அப்பெண் செல்வதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். அந்த மர்ம பெண்ணை தவளை மனிதனிடமிருந்து மீட்டு, அருகிலிருக்கும் கிராமத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அந்த மர்ம பெண்? புதிதாய் அங்கு குடி வந்த வக்கீலின் மகள் ஜென்வியா என்றும், அவளது தந்தையோ நீண்ட ஆயுளோடு வாழும் மருந்தை கண்டுபிடிக்க முயல்கிறார் என்பதையும் தெரிந்து கொள்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த தவளை முகத்தோற்றம் கொண்ட மச்சலேவ் என்ற கொடியவன் அந்த ஊரையே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று குவித்தான். கொலை, கொள்ளை என அராஜகம் புரிந்து கொண்டிருந்தவனை, சில ஞானிகள் திருத்தி அவனை நல்வழிக்கு கொண்டு வந்தனர். அதன் விளை...