Monday, January 24, 2011

தவளை மனிதனின் முத்திரை


மர்ம திரைப்பட இயக்குநர் ஹிட்காக் பாணியில்அமைந்திருக்கும் மர்மக் கதை இது. சாகச வீரர்கள் ரோஜர், பில் ஆகிய இருவரும் ஆள் அரவமற்ற காட்டுப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு மர்ம பெண் அவர்களுடைய வழியில் குறுக்கிடுகிறாள். தன்னிலை மறந்து செல்லும் அவளை, இருவரும் பின்தொடர்ந்து செல்கின்றனர். சதுப்பு நில குட்டையில் நடுவில் தவளை மனித உருவம் கொண்ட நபரை நோக்கி அப்பெண் செல்வதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். அந்த மர்ம பெண்ணை தவளை மனிதனிடமிருந்து மீட்டு, அருகிலிருக்கும் கிராமத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அந்த மர்ம பெண்? புதிதாய் அங்கு குடி வந்த வக்கீலின் மகள் ஜென்வியா என்றும், அவளது தந்தையோ நீண்ட ஆயுளோடு வாழும் மருந்தை கண்டுபிடிக்க முயல்கிறார் என்பதையும் தெரிந்து கொள்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த தவளை முகத்தோற்றம் கொண்ட மச்சலேவ் என்ற கொடியவன் அந்த ஊரையே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று குவித்தான். கொலை, கொள்ளை என அராஜகம் புரிந்து கொண்டிருந்தவனை, சில ஞானிகள் திருத்தி அவனை நல்வழிக்கு கொண்டு வந்தனர். அதன் விளைவாக அவனது மகள் அகதாவை அந்த ஊரிலே விட்டுவிட்டு அந்த ஊரை விட்டே சென்று விட்டான். மச்சலேவின் மகள் அகதாவோ தந்தையை போலவே கொலை, கொள்ளை என கிராம மக்களை துன்புறுத்த தொடங்கினாள். அவளின் அட்டூழியத்தை கண்ட ஊர் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து அகதாவை சிறை பிடித்து உயிருடன் எரித்துக் கொன்று விட்டனர். இதை கேள்விப்பட்ட மச்சலேவ் மீண்டும் கிராமத்திற்கு வந்து பலரை கொன்றான். இதனை அறிந்த அரசர் மச்சலேவை அடக்கி அவனை ஊரை விட்டே துரத்தியடித்தார். மச்சலேவ் ஊரைவிட்டு செல்லும்முன் என் சகாப்தம் முடியவில்லை என்று சாபம் விட்டு சென்று விட்டான். அன்று முதல் மச்சலேவின் மகள் ஆவியாக சதுப்பு நிலக் காட்டில் அலைவதாகவும், அங்கே சென்றவர்கள் யாருமே திரும்பியதில்லை என்பதையும் தெரிந்துக் கொள்ளும் ரோஜர் & பில்.

அகதாவின் ஆவி உண்மையிலே சதுப்பு நில காட்டில் உள்ளதா? அல்லது அது வெறும் பித்தலாட்டமா? என்பதை கண்டறிய செல்கின்றனர். சதுப்பு நிலத்திற்கு சென்றதும் அங்கே அகதாவை நேரில் கண்டு ஒருவித மயக்கதிற்கு ஆளாகி, அவளுடைய தவளை மனிதர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். அகதாவிடமிருந்து ரோஜர் மற்றும் பில் மீண்டனரா? அகதாவின் ஆவி உண்மையா? அல்லது பித்தலாட்டமா? என்பதை கண்டறிந்தனரா? என்பதே கதை.

இந்த மர்மக் கதையை உருவாக்கியவர் ஹன்றி வெர்னஸ் ஓவியம் வரைந்தவர் இரத்தப்படல புகழ் வில்லியம் வான்ஸ்.

14 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!
  பதிவை படித்து வீட்டுமீண்டும் வருகிறேன்
  அன்புடன்,
  ஹாஜா இஸ்மாயில். எம்

  ReplyDelete
 2. நண்பரே,

  வான்ஸின் சித்திரங்கள் சிறப்பாக இருக்கின்றன, தங்களின் பதிவும்தான்.

  ReplyDelete
 3. இந்த கதையின் எடிட் செய்யப்பட்ட கிளைமேக்ஸ் பற்றியும் கூறி இருக்கலாமே?

  ReplyDelete
 4. மிகவும் சுவாரசியமான கதை. பதிவை படித்ததும் க்ளைமாக்ஸை அறிய அவளாக இருக்கிறது. சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. This is a superb book. Even though we cannot get the full impact in Black and white thigil the story was great.

  Now viswa has said the ending is edited. so what is the other ending.

  Regards
  Suresh

  ReplyDelete
 6. வாவ்.. அட்டைப் படம் பார்த்த உடன் சிறு வயதில் இந்த புத்தகத்தைப் படித்த நியாபகம் வந்தது. அற்புதமான ஓவியங்கள் இருக்கும் புத்தகம் இது.

  ReplyDelete
 7. திரு. சுரேஷ் அவர்களுக்கு,
  தவளை மனிதனின் முத்திரை சித்திரக் கதையின் ஒரிஜினல் (பிரெஞ்சு) புத்தகத்தில் க்ளைமாக்ஸ் சொதப்பலாக இருந்ததால் "திகில் காமிக்ஸில்" அந்த க்ளைமாக்ஸ்சை திரு. விஜயன் அவர்கள் (ஆசிரியர்) சிறிது மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார். இந்த தகவலை தான் திரு.விஷ்வா அவர்கள் கூறியுள்ளார்.

  ReplyDelete
 8. தோழரே!!
  இந்த காமிக்ஸ் வெளிவந்த காலத்திலேயே படித்திருக்கிறேன் . இதில் என்னை மிகவும், கவர்ந்தது வில்லியம் வான்ஸ். அவர்களின் சித்திரம்தான், அவர் யாரென்றே!! தெரியாமல், ரசித்த காலம் அது . திகில் காமிக்ஸில் வெளிவந்த எல்லா காமிக்ஸ் கதைகளும் மிக அருமை, அட்டை படம் "Original Version " னை விட நமவர்கள் வரைந்தது பிரமாதம்.
  உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி
  அன்புடன்,
  ஹாஜா இஸ்மாயில். எம்

  ReplyDelete
 9. ஹாய் ப்ருனோ,
  பழைய ஞாபங்களை மீட்டும் நல்ல பதிவு. ஆனால் நான் சமிபத்தில்தான் ஒரு நண்பரிடம் வேண்டி படித்தேன். நல்ல திகில் கதை. அதிலும் முதன்முறையாக தவளை மனிதன் திரும்பி பார்க்கும் காட்சியை அபாரமாக வரைந்திருப்பார் வில்லியம் வான்ஸ்.
  இப்படிக்கு
  பா. விமலாஹரன்

  ReplyDelete
 10. இன்றும் நினைவில் தங்கும் ஒரு காமிக்ஸ் காவியம். கதை சுமார் தான் என்றாலும், ஓவியங்கள் மனதை கொள்ளை கொண்டு விடும் விதம். சிறுவயதில் ஓவியர் பெயர் தெரியாத போதிலும் அதில் லயித்திருந்த நினைவுகள் வந்து போகின்றன.

  ReplyDelete
 11. அழகான பதிவு. திரு ரபிக் கூறியது போல் கதை சுமார் ராகம் ஆனால் ஓவியம் சூப்பர்.

  ReplyDelete
 12. ரட்ஜா நண்பரே, என்னை ரபிக் என்றே அழைக்கலாம். திரு நமக்கெல்லாம் ரொம்ப ஜாஸ்தி :)

  ReplyDelete
 13. 9677142992 friend the same wrapper price
  s pls call me if u need lion comics

  ReplyDelete

2018 அட்டவணையும் சில கருத்துக்களும்

2018 அட்டவணையில் பட்டாசுகளும், புஸ்வானங்களுமாய் நிறைந்துள்ளது  பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிருப்தியையும் தந்துள்ளது  இந்த  அ...