இரும்புக் கை மாயாவி

1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல்.

மாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானியங்கி முறையில் இயங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.


சாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.


மாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் பலவித குற்றச் செயல்களைல் புரிந்தார். பின்னர் புரபஸர் பாரிங்டனின் முயற்சியால் மனம் திருந்தி பிரிட்டிஷ் உளவுத் துறையில் ஓர் அங்கமான நிழற்படையின் ரகசிய உளவாளியாக மாறினார். ஏராளமான பல விசித்திர வில்லன்களையும் பலவித விண்வெளி ஜந்துகளையும், தனது சாகஸங்களால் முறியடித்துள்ளார். இரும்பு கை மாயாவியின் இரும்புக் கரத்தினில் பலவித ஆயுதங்களையும் உபகரணங்களையும் நிழற்படையினர் பொருந்தியுள்ளனர். உதாரணத்திற்கு, ஒரு விரலில் துப்பாக்கி, ஒரு விரலில் நவீன ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் மற்றொரு விரலில் நச்சுப் புகை, ஒரு விரலில் எல்லாவித பூட்டுகளையும் திறக்கும் சாவி, உள்ளங்கையில் நவீன ரேடியோ ரீஸிவர் என உள்ளன.


1972-ம் வருடம் முதல் முத்து காமிக்ஸ் மூலமாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு இரும்பு கை மாயாவி அறிமுகமானார். அதன் பின்னர் முத்து காமிக்ஸ் வார மலரில், ஒற்றைக் கண் மர்மம் என்ற சித்திரக் கதை தொடராகவும் வெளிவந்துள்ளது.


தமிழில் வெளிவந்துள்ள இரும்பு கை மாயாவியின சித்திரக் கதைகளின் தலைப்புகள்.

1, இரும்புக் கை மாயாவி 2. உறைபனி மர்மம் 3, நாச அலைகள் 4. பாம்புத் தீவு 5. பாதாள நகரம் 6 இமயத்தில் மாயாவி 7 நடுநிசிக் கள்வன் 8. மர்மத் தீவில் மாயாவி 9. கொள்ளைக் கார மாயாவி 10. நயகராவில் மாயாவி 11 இயந்திரத் தலை மனிதர்கள் 12 கொரில்லா சாம்ராஜ்யம் 13 கொள்ளைக்கார பிசாசு 14. தலையில்லாக் கொலையாளி 15 யார் அந்த மாயாவி 16 ஆழ்கடலில் மாயாவி 17 விபத்தில் சிக்கிய விமானம் 18 மந்திர வித்தை 19 விண்வெளி விபத்து 20 விண்வெளி ஒற்றர்கள் 21 தவளை மனிதர்கள் 22 கொலைகார குள்ளநரி 23 களிமணி மனிதர்கள் 24 பறக்கும் பிசாசு 25 ப்ளாக் மெயில் 26 விண்வெளி கொள்ளையர் 27 நியூயார்க்கில் மாயாவி 28 மாயாவிக்கோர் மாயாவி 29 இயந்திரப் படை 30 சதி வலையில் மாயாவி 31 ஸ்விட்சர்லாந்தில் மாயாவி 32 மாயாவிக்கொரு சவால் 33 சைத்தான் சிறுவர்கள் 34 மர்மப் பனி 35 மாயாவியுடன் ஒரு மினி (ஆழ்கடல் அதிரடி) 36 கண்ணீர்த் தீவில் மாயாவி

லயன் காமிக்ஸில் வெளிவந்தவை

1 பூமியிலோர் படையெடுப்பு (மெகா ட்ரீம் ஸ்பெஷல்) 2 மின்சாரத் திருடர்கள் (கௌபாய் ஸ்பெஷல்)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மாயாவியின் சித்திரக் கதைகள் மறுபதிப்பாக முத்து காமிக்ஸ்/காமிக்ஸ் க்ளாஸிக்-ல் வெளிவந்துள்ளன.

Comments

  1. நண்பரே,

    மாயாவியை பிடிக்காத ஆரம்பகால வாசகர்கள் அரிதே. மாயாவி இன்றும் எம் மனதில் இருக்கிறார். சிறப்பான பதிவு.

    ReplyDelete
  2. ப்ரேசில் நண்பரே, இரும்புக்கைக்கு அச்சிறுவயது நண்பர்கள் யார்தான் ரசிகர்களாக இருந்திருக்க மாட்டார்கள். வளர்ந்த பின்பு அது கொஞ்சம் காமடியாக தெரிந்தாலும், ஆரம்ப கால கதைகள் ஏ1 ரகம் என்பதில் சந்தேகம் இல்லை.

    என்ன இப்போது, இப்படிபட்ட கதைகளை தேடி வெளியிடாமல், மாயாவி சூப்பர் ஹீரோ என்ற மொக்கைகளை தான் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுகின்றனர்.... இரும்புக்கை க்கே அது ஒரு அவமானம்

    கிளாசிக் அட்டைகள் டாப் டக்கர்

    ReplyDelete
  3. அருமையான பதிவு! வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி....

    ReplyDelete
  4. சிறந்த பதிவு. உங்கள் பணி தொய்வின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அதென்னமோ, ஸ்பைடர், மாயாவி, கதைகள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை, காரணம் பெரும்பாலும் கம்யூனிஸ, ஜெர்மானிய விஞ்ஞானிகளே கெட்டவர்கள் என்றும், இங்கிலாந்து, அமெரிக்காவே உலகை காக்கும் ரட்சகர்களாகவும் காட்டபடுவதாலயே!

    ReplyDelete
  6. வலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_2439.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ் லிஸ்ட்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்