காணாமல் போன கழுகு - பிரின்ஸ் சாகசம்

சர்வதேச கடத்தல் மன்னன் ட்யூக் செபாஸ்டியானை கொல்லத் திட்டம் போடுகிறது ஒரு கொலைகார கும்பல். இதற்கிடையே அடுத்த பணிக்கான வேலைகளில் தயாராகிக் கொண்டிருக்கும் பிரின்ஸ் குழுவினரையும் கழுகு கப்பலையும் தங்களுடைய கொலைத் திட்டத்திற்காக தந்திரமாக சிறை பிடிக்கின்றனர் கொலைகார கும்பல்.




கமன்சினி என்கிற பயங்கரவாதியின் தலைமையில் கொலைகாரகும்பல் இயங்குவதையும் செபாஸ்டியன் என்ற முக்கிய நபரை நூதன முறையில் கொல்ல இருப்பதையும் தெரிந்துக் கொள்ளும் பிரின்ஸ் தனது நண்பர்களையும் செபாஸ்தியனையும் காப்பாற்றுவதற்காக எதிரிகளிடமிருந்து தப்பித்து செபாஸ்தியனை தேடிச் செல்கிறார்.




வழியெங்கும் கம்சினி கும்பலால் ஏற்படும் ஆபத்துகளை வெற்றிகரமாக சமாளித்து பலத்த பாதுகாப்புடனும் அடியாட்களுடனும் வாழும் செபாஸ்டியனை நேரில் சந்திக்கிறார். தனது நிலைமையையும் கமன்சினி கும்பலால் அவருக்கு ஏற்பட போகும் ஆபத்துகளையும் எடுத்துக் கூறி செபாஸ்டியானை காப்பாற்ற முயற்சிக்கிறார்.
கமன்சினியின் கொலைத் திட்டத்தை தெரிந்துக் கொள்ளும் செபாஸ்டியன் கமன்சினி கும்பலையும் தனது இரகசியங்களை தெரிந்துக் கொண்ட பிரின்ஸ் குழுவினரையும் அழிக்க திட்டம் போடுகிறான். குரூர எண்ணம் கொண்ட செபாஸ்டியனின் சூழ்ச்சியை அறியாத பிரின்ஸ் அவனிடமிருந்து உயிர் தப்பினாரா? தனது நண்பர்களையும் கப்பலையும் மீட்டாரா? என்பதே கதை
இச்சித்திரக் கதையை உருவாக்கியவர்கள் ஹர்மான் மற்றம் க்ரேக்.
இந்த அட்டைப்படம் கிளறும் நினைவுகள் அனைத்தும் அருமை. அந்த காலத்தில் இந்த புத்தகங்களை பாதுகாக்க தவறிவிட்டேன். இப்பொழுது உறைக்கிறது.
ReplyDeleteகருப்பு வெள்ளையில் மட்டுமே பார்த்து ரசித்த பிரின்ஸ் சாகசங்களை, கண்கவர் வண்ண சித்திரங்களுடன் தமிழில் படிப்பது சிராத்தி தான். ஒரிஜினல் அட்டையை விட பண்மடங்கு நேர்த்தியுடன் திகில் இதழ் ஜொலிக்கிறது.
ReplyDeleteநண்பர் பின்னோக்கி, நீங்கள் மட்டுமா... அந்த லிஸ்டில் நானும் ஐக்கியம். நான் லயன் முத்து இதரவைகளை மூல விலைக்கே வாங்க ஆரம்பித்த சமயத்தில் வெளிவந்தவை, ஆனால் இப்போது கைவசம் இல்லாத பல புத்தகங்களில் இதுவும் ஒன்று, என்பது ஒரு கவலைக்குறிய விடயம்.
சிறந்த பதிவு. வாழ்த்துக்கள். மேலும் பல வித்தியாசமான பதிவுகளை தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் நண்பா!
ReplyDeleteoriginal copy ungalukku mattum enga kidaikkuthu.
ReplyDeleteதோழரே!! மிக அற்புதமான பதிவு அதிலும் கலரில் படங்கள் மிக அழகு, அதிலும் மலையோரத்தில் நம்முடைய கழுகு படகு நிற்ப்பது கொள்ளை அழகு
ReplyDeleteமிகுந்த ஈடுபாடுடன் வரையப்பட்டுள்ளது .மிக விரைவிலேயே இதுபோல் நம்முடைய லயன், முத்து வண்ண கலரில் வரவிருப்பது மிகுந்த சந்தோசத்தை தருகிறது!
!
அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்