Sunday, May 29, 2011

இரகசிய உளவாளி பிலிப் காரிகன்

1934-ம் வருடம் டேனியல் ஹம்மட் என்பவர் பிலிப் காரிகன் என்கிற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். பல தலை சிறந்த உளவாளிகளில் இவரும் ஒருவர். இரு நபர்களுக்கான நேருக்கு நேர் சண்டையிலும், துப்பாக்கி சண்டையிலும் சிறந்து விளங்குபவர். இவரது மனைவியின் பெயர் வில்டா காரிகன்.

ஆரம்ப காலங்களில் இரகசிய உளவாளி X-9 என்கிற பெயரில் பெயரிடப்படாத ஒரு உளவு நிறுவனத்திற்காக வேலை பார்த்துள்ளார். 1940-க்கு பிறகு இரகசிய உளவாளி X-9 என்ற பெயரை மாற்றி பிலிப் காரிகனாக அழைக்கப்பட்டுள்ளார்.அதன் பிறகு F.B.I. உளவாளியாக மாறி பல சிக்கலான விசித்திரமான பலவழக்குகளை தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1975-ம் வருடம் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு பிலிப் காரிகன் அறிமுகமானார்.
முத்து காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மேகலா காமிக்ஸ் ராணி காமிக்ஸ் மற்றும் தினத்தந்தி நாளேடுகளில் (தொடர்) மூலமாகவும் பிலிப் காரிகனின் சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழில்வந்துள்ள காரிகனின் கதைகளின் தலைப்புகள்
மேகலா காமிக்ஸ்
 • 1) எங்கே அந்த வைரம்
 • 2) கழுகு பார்வை
 • 3) ஆயுதப் புதையல்
 • 4) மனித குண்டு
 • 5) மாய விமானம்
 • 6) ப்ளாக் மெயில்
முத்து காமிக்ஸ்

 • 1) மடலாய மர்மம்
 • 2) வைரஸ் X
 • 3) காணாமல் போன கலைப் பொக்கிஷம்
 • 4) கடலில் தூங்கிய பூதம்
 • 5) பில்லி சூனியமா? பித்தலாட்டமா?
 • 6) தீ விபத்தில் திரைப்படச் சுருள்
 • 7) பழி வாங்கும் பாவை
 • 8) பனித்தீவின் தேவதைகள்
 • 9) வான்வெளி சர்க்கஸ்
 • 10) பனிமலைபூதம்
 • 11) முகமூடிக் கொள்ளைக்காரி
 • 12) மிஸ்டர் பயங்கரம்
 • 13) மரண வலை
 • 14) விசித்திர மண்டலம்
 • 15) பறக்கும் தட்டு மர்மம்
 • 16) இராணுவ இரகசியம்
 • 17) பயங்கரவாதி டாக்டர் செவன்
 • 18) தலைநகரா? கொலைநகரா?

லயன் காமிக்ஸ்

 • 1) சிலந்தி வலையில் காரிகன்
 • 2) மர்ம மூகமூடி
 • 3) பனிமலைபயங்கரம்
 • 4) மனைவி X மரணம்
 • 5) இரத்தமில்லாத யுத்தம்
 • 6) ஏரியில் ஒரு எரிமலை
 • 7) எதிரிக்கு எதிரி
 • 8) பிணம் காத்த புதையல்
 • 9) மீண்டும் டாக்டர் செவன்
 • 10) மாண்டவன் மீண்டான்
 • ராஜ்யத்திற்கு ஒரு ராணி

மாலைமதி காமிக்ஸ்

 • 1) மரண வலை
 • 2) ராக்கெட் ராட்சஸர்கள்
 • 3) மொராக்கோ மர்மம்
 • 4) மூழ்கிய கப்பலில்
 • 5) கடத்தல் மன்னர்கள்
 • 6) நம்பிக்கை துரோகி டாக்டர் செவன்
 • 7) கொள்ளைக்காரன் தீவு

இந்திரஜால் காமிக்ஸ்

 • 1) நெளிந்த சுருக்கு
 • 2) பனித்துயில்
 • 3) ஆழ்கடல்அனர்த்தம்
 • 4) என் காளி
 • 5) மாறாட்டப் போராட்டம்
 • 6) நிலவு கன்னி
 • 7) சதியின் கதி
 • 8) பெட்டிப் பாம்பு
 • 9) கொள்ளிப் பாம்புராணி காமிக்ஸ்

1) மரணத் தீவு

7 comments:

 1. நண்பரே,

  தலைநகரா கொலை நகரா அட்டைப்படம் அசத்தல். காரிகனை எனக்கு பிடிக்கும் ஆனால் ரிப் கிர்பி அளவிற்கு பிடிக்காது.

  ReplyDelete
 2. வரிசை பட்டியல் அருமை.

  ஏனோ சீக்ரெட் ஏஜன்ட் காரிகன் கதைகள் எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாமல் போயிற்று. தொடர்ந்து வாசிக்காத தொடர் கதைகள் என்பதால் இருக்குமோ என்னவோ... வாய்ப்பு கிடைக்கும் போது அனைத்தையும் ஒரு சேர படிக்க முயல்கிறேன்... கொஞ்சம் கொஞ்சமாக.

  ஆனால் அப்போதும் எண்ணம் மாறுமா என்பது சந்தேகமே, தோழா.

  ReplyDelete
 3. நண்பரே, காரிகன் கதைகள் பெரும்பாலானவையை படித்திருக்கிறேன் என்றாலும் "பனிமலைப் பயங்கரம்" கதையை தவிர்த்து மற்ற எதுவும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.பனிமலைப் பயங்கரம் எனக்கு மிகப் பிடித்த கதைகளில் ஒன்று.

  ReplyDelete
 4. தோழரே !! எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகர்களில் 'காரிகனும்' ஒருவர். அவருடைய துப்பறியும் திறனும், சமயோசிதமும், அசத்தலான அடிதடியும் என்றைக்கும் எனக்கு பிடித்தமானவை, எனக்கு மட்டுமல்ல
  எனது நண்பர்கள் அனைவருக்கும் காரிகனின் வீர சாகசங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. காரிகனின் எந்த கதையும் சோடை போனதில்லை, அப்படி இருக்க காரிகனை சிலருக்கு பிடிக்கவில்லைஎன்றால் அது அவர்களின் மன நிலையை பொருத்தது

  எனக்கும் சாகசங்கள் மிகுந்த காமிக்ஸ்கள் மட்டுமே!! பிடிக்கும் கார்டூன் காமடி காமிக்ஸ்களை நான் அவ்வளவாக விரும்புவதுமில்லை சேர்பதுமில்லை

  காரிகனின் காமிக்ஸ்களில் " Al Willamson " அவர்களின் ஓவியத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு, இவர் வரைந்த போதுதான் காரிகனுக்கு சரியான ஒரு உருவம் கிடைத்ததாக நான் எண்ணுகிறேன். இதில் " Al Willamson " தன உருவத்தையே!! காரிகனாக வரைந்ததாக சொல்லபடுகிறது

  அன்புடன்
  ஹாஜா இஸ்மாயில்.

  ReplyDelete
 5. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல எளிமையான பதிவு என்றாலும் போதுமான தகவல்களை கொண்டுள்ளது. நண்பர் ஹாஜா இஸ்மாயில் கொடுத்துள்ள தகவல்கள் புதியவை!

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. காரிகன் பற்றிய தகவல் பெட்டகமாக இருக்கிறது உங்கள் பதிவு.
  ஜேம்ஸ்பாண்டுக்கு போட்டியாக அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் காரிகன் என்று கூறி கேட்டிருக்கிறேன்.
  அடுத்த லயன் கூட காரிகன் சாகஸம் என்று தான் எண்ணுகிறேன்.

  ReplyDelete