கார்ஸனின் கடந்த காலம்

டெக்ஸ் வில்லர் கதைகள் என்றாலே டமால், டூமில் சமாச்சாரங்கள் மட்டுமே அதிகம் நிறைந்திருக்கும். கார்ஸனின் கடந்த காலம் சித்திரக் கதையில் வழக்கத்திற்கு மாறாக கார்ஸனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அன்பு, நேசம், நட்பு, வீரம் என அனைத்து சிறப்பம்சங்களும் கதையோடு கலந்து தரப்பட்டிருக்கும்.  ஆக் ஷனுக்கும், விறுவிறுப்புக்கும் குறைவே இல்லாத கதை.  இதன் வெற்றிக்கு ஒவியமும், முக்கிய காரணமாக அமைந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சித்திரக் கதை ஆகும்.  எனக்கும் பிடித்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்றாகும்.  இனி கதை.




அமெரிக்க மாநிலத்தில் உள்ள டக்ஸன் நகருக்கு வரும் கார்ஸனை ஒரு மர்ம நபர் கொல்லமுயற்சிக்கிறான்.  அவனை வீழ்த்திடும் கார்ஸன் அவனிடமிருந்து ஒரு துண்டு விளம்பரத்தை கண்டு எடுக்கிறார்.  அதில் ரே க்ளம்மன்ஸ் என்ற நபரின் சவ அடக்க ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு அப்பாவிகளுக்கு அழைப்பு இருப்பதை கண்டு, உடனே மான்டானா பகுதிக்கு விரைந்து செல்கிறார் கார்ஸன்.



    இரு தினங்களுக்கு பின் கார்ஸனை தேடி டக்ஸன் நகருக்கு வரும் டெக்ஸ் வில்லரும் அவரது மகனும் கார்ஸன் மான்டனா பகுதிக்கு சென்றிருப்பதை உள்ளூர் நகர ஷெரீப்பிடம் கேட்டறிந்து கொண்டு அவர்களும் மான்டனாவிற்கு செல்கின்றனர்.   செல்லும் வழியில் 25 வருடங்களுக்கு முன் மான்டனாவில் நடந்த கதையை தனது மகனிடம் கூறிக் கொண்டே சொல்கிறார் டெக்ஸ் வில்லர்.


அப்போதைய மான்டனாவில் நிறைய தங்கச் சுரங்கங்கள் இருந்தன. தங்கத்திற்காக நிறைய மக்கள் மான்டனாவில் குவிந்தனர்.  இதனால் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்தன  தங்கம் சேமிப்பவர்களை கண்டறிந்து அவர்களை இரக்கமே இல்லாமல் கொன்று தங்கத்தை கொள்ளையடித்தனர் அப்பாவிகள் என்றழைக்கப்படும் கொலைவெறியர்கள்.



அப்பாவிகள் கூட்டத்தை பிடிப்பதற்காக ரேஞ்சரான கார்ஸன் மான்டனாவிற்கு வந்து சேர்கிறார்.  வந்த இடத்தில் நகர ஷெரீப்பான ரே க்ளம்மன்ஸ் கார்ஸனுக்கு நெருங்கிய நண்பராகிறார்.  இதற்கிடையே கார்ஸன் ரேஞ்சர் என்ற விபரம் தெரியாத அப்பாவிகள் கூட்டத்தினர் தங்களுடைய கொள்ளை முயற்சியை தொடர்கின்றனர்.  இதற்காக காத்திருந்த கார்ஸன் அவர்களுடைய முயற்சியை முறியடித்து பலரை சிறையில் தள்ளுகிறார்.  அப்பாவிகள் கூட்டத்தின் தலைவன் தனது நெருங்கிய நண்பனும், நகர ஷெரீப்புமான ரே க்ளமன்ஸ் தான் என்பதை கண்டறிந்து அவனையும் கைது பண்ண முயற்சிக்கிறார்.  இதனை அறிந்த ரே க்ளமன்ஸ் கொள்ளையடித்த தங்கத்துடன் தப்பி விடுகிறான்.  சிறையிலிருந்த அப்பாவிகள் கூட்டத்தினரை நகர மக்கள் ஒன்றுசேர்ந்து தூக்கிலிட்டு கொன்று விடுகின்றனர்.  எஞ்சியிருக்கும் சிலர் மான்டனாவை விட்டே தப்பிச் சென்று விடுகின்றனர்.





 25 வருடங்களுக்கு பின் அப்பாவிகள் கூட்டத்தில் எஞ்சியிருக்கும் அனைவரும் ரே க்ளமன்ஸை பழி வாங்குவதற்காக பூன் என்ற கொள்ளைக் காரன் தலைமையில் மான்டானா பகுதியில் ஒன்று சேர்கின்றனர்.  இதனை அறியாத ரே க்ளமன்ஸின் மகளான டோனா எதிரிகளிடம் வந்து மாட்டிக் கொள்கிறாள்.

கொள்ளையடித்த தங்கத்தை கொண்டு வந்து தந்தால் மகளை மீட்டுச் செல்லலாம் என்று கோரிக்கை வைக்கின்றனர் எதிரிகள்.  மகளை மீட்கும் முயற்சியில் தங்கத்துடன் செல்ல துணிகிறான் ரே.  அவனுக்கு உதவ கார்ஸனும் உடன் செல்கிறார்.   இவர்களுடன் டெக்ஸ் வில்லரும், அவரது மகனும் இணைந்து கொண்டு எதிரிகளை வீழ்த்த முயற்சிக்கின்றனர்.

இவர்களுடைய அதிரடி தாக்குதலால் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டு இறுதியில் ரே க்ளமன்ஸும் எதிர்பாராத விதமாக எதிரிகளின் தோட்டாவுக்கு பலியாகி விடுகிறான்.  மீட்கப்பட்ட தங்கத்தையும், டோனாவையும் ரேயின் மனைவியான லினாவிடம் ஒப்படைத்து விட்டு தங்கள் வழியில் செல்கின்றனர் டெக்ஸ் குழுவினர்.




Comments

  1. ஹாய் ப்ருனோ,
    அருமையான பதிவு. எனக்கு மிகவும் பிடித்த அருமையான கதை. கதையில் அப்பாவிகள் பயன்படுத்தும் சைகைமுறைகள், மற்றும் அப்பாவிகளின் பாத்திரப்படைப்புகள் அற்புதமாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்டது போலவே கதையம்சம் நிறைந்த நிறைவான கதை

    ReplyDelete
  2. It was one of my favorite story in Lion comics . Also for the first time , a big issue is divided in to two issue started with this one .

    ReplyDelete
  3. ப்ரூனோ நண்பரே,

    லயன் காமிக்ஸில் என் மனதை கவர்ந்த சொற்ப டெக்ஸ் கதைகளில், கார்சனின் கடந்த காலமும் ஒன்று. வழக்கமான டமால் டுமீல் கதைகளில் இருந்து விலகி, பிரதான கதாபாத்திரத்தின் துணை கதாபாத்திரத்தை பற்றிய இந்த கதையமைப்பை யார் தான் விரும்ப மாட்டார். நினைவுகூறுதல் அருமை.

    @Arun: Also imagine that each of that individual two issue editions, itself was already double sized ;)

    ReplyDelete
  4. It's a classic story.One of the few stories that I love.

    ReplyDelete
  5. வாங்கத் தவறி பிறகு இன்னும் கிடைக்காமல் இருக்கும் கதை இது. பதிவு, இந்த புத்தகத்தைப் படிக்கும் உணர்வை கொடுத்தது. நன்றி.

    ReplyDelete
  6. வாவ் மிக சிறந்த தொய்வில்லாத கதை இது

    இதுபோல தொடருங்கள் உங்கள் சேவைகளை :))
    .

    ReplyDelete
  7. சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. intha kathaiyin 2nd partukkaga wait panni panni valkaye veruthu ponathu innum en nenjil nizhal adugirathu! marakka mudiyatha padaippu!

    ReplyDelete
  9. ஜானி நண்பரே,

    முதல் பாகமும், இரண்டாம் பாகமும் சரியாக அடுத்த அடுத்த மாதங்களில் அல்லவா வெளிவந்தது. அது லயன் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம் என்பதால். ஒரு வேளை 30 நாட்களை தான் அப்படி சொன்னீர்களோ ? :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்