மரண வைரங்கள் - கேப்டன் பிரின்ஸ் சாகசம்


1986-ம் வருடம் திகில் கோடை மலரில் வெளிவந்த சித்திரக் கதை இது.  கதாசிரியர் மற்றும் ஒவியர் ஹர்மான் மற்றும் க்ரேக் இருவரின் கூட்டு முயற்சியில் உருவான பல சித்திரக் கதைகள் வெற்றி பெற்றுள்ளன.  அந்த வரிசையில் வெளிவந்த சித்திரக் கதைகளில் இதுவும் ஒன்று.
 இனி கதை

மரயாளி என்ற பகுதியை சேர்ந்த ராபர்ட் கோரல்ஸ் அந்த பகுதியின் மிகப் பெரிய பண்ணை அதிபராக இருப்பவர்.  தமது நிலங்களில் விளையும் காபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர்.  ராபர்ட்டின் மகன்களில் இருவரான ஜாய், ஜோஸ் ஆகிய இருவரும் தங்களது பண்ணை நிலங்களில் ஏராளமான பச்சை நிறக் கற்கள் (வைரங்கள்) கிடைப்பதாக கருதி பண்ணை நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெடி வைத்து அழிக்க முயல்கின்றனர்  
 மகன்களில் விரோதப் போக்கை தடுப்பதற்காகவும் பண்ணையின் அழிவைத் தடுப்பதற்காகவும் பிரின்ஸ் குழுவினரின் உதவியை நாடுகிறார் ராபர்ட்.  இதற்கிடையில் டூக்ஸே என்னும் கொடியவன் பண்ணையின் அழிவை தான் தடுப்பதாக கூறிக் கொண்டு மோரல்ஸ் குடும்பத்தினருடன் அடாவடியாக பேரம் பேசுகிறான். பேரத்தினால் கோபமடையும் மோரல்ஸ் குடும்பத்தினர் டூக்ஸே-வை அடித்து துரத்துகின்றனர்.  

 தப்பி ஒடிய டூக்ஸே மோரல்ஸ் குடும்பத்தை பழிவாங்குவதற்காக தனது அடியாட்களுடன் காத்திருக்கிறான்.  இதற்கிடையில் ஜாய் ஜோஸ்-ஐ சந்தித்து பண்ணையின் அழிவை தடுப்பதற்காக பிரின்ஸ் தலைமையில் ஒருகுழுவாக (ஐந்து நபர்) ஆபத்துகள்  நிறைந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்களின் வருகையை எதிர்பார்த்திருக்கும் டூக்ஸே, தந்திரமாக பிரின்ஸ் குழுவினரை பார்வையை பறிக்கும் மணல் பகுதியினுள் முடக்கி கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல நினைக்கிறான்.  
 காந்த துகள்கள் மணலில் ஏராளமாக கலந்திருப்பதால் வெயிலின் கடுமை அதிகமாக அதிகமாக பார்ப்பவர்களின் கண்கள் செயலிழந்து பிறகு உயிரை பறிக்கும் தன்மை பெற்ற மணல்பகுதி அது.  மணலின் கொடுமை தாங்கிக் கொள்ள முடியாமல் தப்பி வருவர்களை சுட்டுக் கொல்ல தனது அடியாட்களுடன் காத்திருக்கிறான் டூக்ஸே.  
                                    
 உயிரை பலிவாங்கும் மணல், கொடியவன் டூக்ஸே, ஆகிய இரு பேராபத்திலிருந்தும் பிரின்ஸ் குழுவினர் உயிருடன் மீண்டனரா? ராபர்ட்டின் மகன்களிடமிருந்து பண்ணை நிலங்களின் அழிவை தடுத்தனரா என்பதே கதை.







Comments

  1. சிறந்த பதிவு. வாழ்த்துக்கள். மேலும் பல வித்தியாசமான பதிவுகளை எதிர்நோக்கும் உங்கள் வாசகி

    ReplyDelete
  2. சூப்பர் அண்ணாச்சி. நிறைய நாளைக்குப் பின்னர் அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்