தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்
தமிழ் காமிக்ஸ் பற்றிய கருத்துக்கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் நிறைந்திருக்கும். மேலைநாடுகளில் 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட காமிக்ஸ் (சித்திரக்கதை) புத்தகங்களின் பதிப்பக உரிமைகளைப் பெற்று, குமுதம், கல்கி, ராணி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன் ஆகிய நாளிதழ்களில் முதன்முதலாக தமிழில் தொடர்கதைகளாகச் சித்திரக்கதைகள் வெளிவரத் தொடங்கின. அதன் பின்னர் 1965-ம் வருடத்திற்குப் பின் ஃபால்கன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், வித்தயார்த்தி மித்ரம் ஆகிய புத்தக நிறுவனங்கள் முழுநீள சித்திரக்கதைகளாக வெளியிட்டுள்ளனர்.


தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1965-ம் வருடம் முதல் வெளிவந்துகொண்டிருந்தாலும், 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரை தான் காமிக்ஸ்களுக்குப் பொற்காலமாக விளங்கியது.
இந்த காலகட்டத்தில் தான் புற்றீசல் போல ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன. லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், திகில் காமிக்ஸ், முத்து மினி காமிக்ஸ், வாசு காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் காமிக்ஸ், சக்தி காமிக்ஸ், ரேகா காமிக்ஸ், பிரியா காமிக்ஸ்,ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ், மலர் காமிக்ஸ், காக்ஸ்டன் காமிக்ஸ், ரத்னா காமிக்ஸ், சோலை காமிக்ஸ், எழில் காமிக்ஸ், கஸ்தூரி காமிக்ஸ், சூர்யா காமிக்ஸ், பிரியதர்ஷினி காமிக்ஸ், ஸ்டார் காமிக்ஸ், ஐஸ்பெர்க் காமிக்ஸ், பார்வதி காமிக்ஸ், அணில் அண்ணா காமிக்ஸ், மதி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், தேசமலர் காமிக்ஸ், முயல் காமிக்ஸ், அமர்சித்ரா காமிக்ஸ், லஷ்மி காமிக்ஸ், ராஜா காமிக்ஸ், லீலா காமிக்ஸ், ஸ்வீட்பேபி காமிக்ஸ், பாபா காமிக்ஸ், மாயாவி காமிக்ஸ் இன்னும் பல தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து காமிக்ஸ் வாசகர்களுக்குக் கொண்டாட்டமாக இருந்த காலம்.
துப்பறியும் கதைகள், கௌபாய் கதைகள், காமெடி கதைகள், விண்வெளிக் கதைகள், திகில் கதைகள், மாயாஜாலக்கதைகள், சாகசக்கதைகள், க்ரைம் கதைகள், யுத்தக்கதைகள் எனப் பலவித கதைகள் காமிக்ஸ் புத்தகங்களாக வெளிவந்ததால் எதை வாங்குவது எதைப் படிப்பது என்று வாசகர்கள் திக்குமுக்காடிய காலகட்டமும் கூட.
அப்போதைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவாக இருந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்த காரணத்தினால், படிக்கும் வாசகர்களும் அதிகமாகிக்கொண்டே இருந்தனர். நிறைய வாசகர்கள் படித்த இதழ்களைச் சேகரிக்கவும் தொடங்கினர். ( இன்றும் நிறைய வாசகர்கள் பழைய காமிக்ஸ் புத்தகங்களை பொக்கிஷம் போல் சேமித்து வைத்துள்ளனர். நிறைய புதிய வாசகர்கள் பழைய புத்தகங்களைத் தேடிக்கொண்டும் அதிக விலைகொடுத்து வாங்கிக்கொண்டும் இருக்கின்றனர்.)
தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் எட்டாத உயரத்தில் இருந்த நிலை மாறி 1995 –ஆம் வருடத்திற்குப் பிறகு இதன் நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. புயலில் சிக்கிக் காணாமல் போன மாதிரி நிறைய புத்தக நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. லயன் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ் இந்த இரண்டு புத்தகங்கள் மட்டும் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதுவும் வருடத்திற்கு ஆறு புத்தகங்கள் வருவதே அபூர்வமாக உள்ளநிலையில் உள்ளது.
இந்த நிலைக்கு காமிக்ஸ் புத்தகங்கள் குறைந்தது, வாசகர்கள் குறைந்தது, விற்பனை மந்தமான காரணங்களை ஆராய்ந்தால்? இன்டர்நெட், செல்போன்,வீடியோ கேம்கள், கார்ட்டூன் சேனல்கள், மக்கள் ஆங்கில மோகத்திற்குத் தாவியது, புதிய வாசகர்கள் இல்லாதது, என பலவித குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் இவை மட்டும் புத்தகங்கள் குறைந்துபோக காரணங்கள் அல்ல. புத்தகப் பதிப்பாளர்களிடம் சரியான திட்டமிடுதல் இல்லாதது மாதந்தோறும் புத்தகமே வெளிவராதது, விளம்பரங்கள் எதுவும் இல்லாதது, சரியான தேதிகளில் புத்தகம் கடைகளில் கிடைக்காதது, புதிய முயற்சிகள் இல்லாதது, நிறைய வாசகர்கள் புத்தகமே சரியாக கிடைக்காத ஏமாற்றத்தினால் படிப்பதையே நிறுத்திவிட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் விற்பனை மந்தமானதே தவிர, புதிய வாசகர்கள் இல்லாத காரணத்தினால் மட்டுமல்ல என்பதை புத்தகப் பதிப்பாளர்கள் உணர வேண்டும்.
உதாரணத்திற்கு 2009 ஆம் வருடம் சென்னையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதில் யாருமே எதிர்பார்க்காத விதமாக அனைத்து புத்தகங்களும் விற்றுத்தீர்ந்தன. சிறுவர்களும் பெரியவர்களும் வயது வித்தியாசமின்றி தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிச் (அள்ளிச்) சென்றனர்.
லயன் காமிக்ஸ் நிறுவனத்தார் (பிரகாஷ் பப்ளிஷர்ஸ்) முதன்முறையாக 420 பக்கங்களுடன் லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல் என்ற புத்தகத்தை 100/- ரூபாய் விலையில் வெளியிட்டனர். வெளிவந்த உடனே அவர்களே எதிர்பாராத விதமாக அனைத்து இதழ்களும் விற்றுத்தீர்ந்து சாதனைப் படைத்துள்ளது. அதன் பின்னர் கௌபாய் ஸ்பெஷல், லயன் ஜாலி ஸ்பெஷல் என்ற புத்தகத்தை அதே 100/- ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளனர். இதுவும் விற்றுத்தீர்ந்ததும் அதிரடியாக 840 பக்கங்களுடன் 200/- ரூபாய் விலையில் கலெக்டர்ஸ் ஸ்பெஷல் (இரத்தப்படலம்1-18) என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்தினர். புத்தகம் வெளிவருவதற்கு முன்பே 800-க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். கலெக்டர்ஸ் ஸ்பெஷல் புத்தகம் வெளிவந்து கடைகளுக்குச் செல்லாமலே விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். புதிய வாசகர்கள் யாவரும் இல்லாமலா? இவைகள் சாத்தியமானது? இதை புத்தகப் பதிப்பாளர்கள் சிந்தித்து மீண்டும் புதிய முயற்சிகளோடும், தரமான கதைகளாகவும் மாதம் தவறாமல் புத்தகத்தை வெளியிட்டு சரியான தேதிகளில் கடைகளில் கிடைக்குமாறு செய்தால்? புத்தகத்திற்கென்று கூடுதல் கவனம் செலுத்தினால்? இந்தத் துறையில் மீண்டும் பழையபடி முத்திரைப் பதிக்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவோ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தாலும், தமிழ் காமிக்ஸ் புத்தகத்திற்கு என்றென்றும் தனி மவுசு உண்டென்பதைப் பதிப்பாளர்கள் உணர வேண்டும். முன்பு போல் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் நிறைய வெளிவராதா? என்று ஏங்கிக்கொண்டிருக்கும் வாசகர்கள் இன்னும் ஏராளமானவர்கள் உள்ளனர். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் என்றும் நசிந்துவிடாமல் இன்னும் ஏராளமான புதிய புத்தகங்கள் முன்புபோல் வெளிவரவேண்டும் என்பதே அனைவரது ஆவலாகவும் உள்ளது. மீண்டும் மலரவேண்டும் காமிக்ஸ் பொற்காலம்.
ஹாய் ப்ருனோ,
ReplyDeleteஎங்களை போன்ற வாசகர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கவலைகளை திரட்டி பதிவிட்டுள்ளீர்கள்.. தமிழ் காமிக்ஸின் தகவல்கள் + படங்கள் பயனுள்ளதாகவும் இனிமையாகவும் இருந்தது. நம்ம புரட்சி தலைவர் கூட காமிக்ஸ் ஹீரோவாக வலம்வந்தாரா? அவரது படங்கள் கூட இருக்கின்றனவே.. அறிய ஆவலாக உள்ளது.
புதுப்பொலிவுடன் அறிய தகவல் தந்த நண்பருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..
ReplyDeleteஆம் நண்பரே புரட்சித்தலைவரை ஹீரோவாக கொண்டு மொத்தம் ஏழு புத்தகங்கள் திரு முல்லை தங்கராசன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
ReplyDeleteThank you for publishing MGR related comics. Do you have that MGR comics with you. I am a MGR blogger. It will be a great news for MGR fans and Devotees around the world to see this rare opportunity. Thank you.
Deletei appreciate your effort, your this particular article is a reflection of my view
ReplyDeletewell said friend. In old days there were lot of comics ,but less money to buy it . Now it is vice versa. Festivals like Diwali means double delight as there will a spacial issue .We will start to save money from the day of advertisement. The joy of seeing a book in Book shop and rushing to home to get the money & buying it and opening the book with coin[To remove the pin] and going thru the book in the book shop itself is in comparable .Good old days .hmm will it happen again :(
ReplyDeleteSuper Bruno.
ReplyDeleteநிச்சையமாக உண்மையிலும் உண்மை. இந்திய வாசகர்களுக்கு இந்த நிலமை இதை விட மோசமான நிலமை இலங்கை வாசகர்களுக்கு. புத்தகங்களை அனுப்புவதே கிடையாது இலங்கைக்கு.!
ReplyDeleteபுரட்சித் தலைவர் தோன்றும் காமிக்ஸ் அருமை. புதுத் தகவல் மிக்க நன்றி. :)
ReplyDeleteவாவ் எத்துனை காமிக்ஸ் வெளிவந்தது என்பதை மிக அழகாக வரிசைபடுத்தி கொடுத்துள்ளீர்கள்
ReplyDeleteமேலும் காணக்கிடைக்காத புத்தகங்களின் அட்டை படங்கள் மிக்க நன்றி
how u got all this comics boss?
ReplyDeleteஇவைகள் கிடைக்க கூடிய இடங்களை தெரிவியுங்கள். 9443259244 நன்றி
ReplyDelete