ஜான் சில்வர் - விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய இரகசிய உளவாளி .

பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஓர் அங்கமான Q  பிரிவில் பணி புரியும்
ஒரு ரகசிய உளவாளி ஜான் சில்வர். அவரது இயற்பெயர் ஜான் ஹவாக்.
ஜான் சில்வர் ஒரு தலைசிறந்த உளவாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தாலும்,
அவரது ஒரே இலட்சியம், தான் ஒரு தலைசிறந்த விமானியாக, புகழ்பெற
வேண்டும் என்பதே ஆகும்.

       
ஜான் சில்வர் முதன்முறையாக டெல்டா-10 என்ற விமானத்தை இயக்கியபோது, விமானத்தில் பயணம் செய்த ஹர்ஸ், காலின்ஸ் ஆகிய இரண்டு உளவாளிகளின் கவனக்குறைவினால், விமானம் பயங்கர  விபத்துக்குள்ளாகியது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஜான் சில்வர்,  நடந்த
விபத்தின் உண்மையை உணர்த்த தன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய லைசன்ஸையும், வேலையையும் இழந்தார். அதன்பிறகு ஒரு துப்பறிவாளராக மாறி, நடந்தவற்றைக் கண்டுபிடித்தார். ஜான் சில்வரிடம் இருந்த அசாத்திய திறமைகளை அறிந்த 'Q' என்ற உளவு அமைப்பினர், ஜான் சில்வரின் பைலட் லைசன்சை திரும்பப் பெற்றுத்தருவதாகக் கூறி, தங்களது கடினமான பணிகளை வெற்றிகரமாகச் சாதித்துக்கொண்டனர்.



ஒவ்வொரு முறையும் தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை
அறியாமல் 'Q' நிறுவனதின் தலைசிறந்த உளவாளிகளில் தானும் ஒருவராகப்
பணிபுரிந்து வருகிறார்.

1981- ஆம் வருடத்தில் முத்து காமிக்ஸ் மூலமாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு ஜான் சில்வர் அறிமுகமானார். அதன்பிறகு பாபா காமிக்ஸ்,
மேத்தா காமிக்ஸ், ராணி காமிக்ஸ் மூலமாகவும் வெளிப்பட்டுள்ளார்.

தமிழில் வெளிவந்துள்ள ஜான் சில்வரின் சித்திரக்கதைளின் தலைப்புகள்:

 

முத்து காமிக்ஸ்
1. விபரீத விளையாட்டு -1981
2. ரவுடிக்கும்பல் -1981
3. ஆகாயக்கல்லறை + மரண ஒத்திகை -1989
4. இரத்தப்பாதை -1989
5. யுத்த வியாபாரி-1990
6. மனித வேட்டை-1990
7. கொலை வள்ளல்-1994
                                                                ராணி காமிக்ஸ்
1. இரகசியத் தீவு-
பாபா காமிக்ஸ்
1. ராணுவ வேட்டை-1983
Add caption
மேத்தா காமிக்ஸ்

1. இரத்த விளையாட்டு-1984
2. கொலைக் கழகம்-1984
3. மரணக் கயிறு-1984
4. மனித வேட்டை-1984
5. பயங்கரத் தீவு-1984
6. விசித்திரப் பந்தயம்
7. மரணத்தின் நிழலில்-1984
8. நவீனக் கொள்ளையர் -1984
9. பொற்சிலை மர்மம்
10. சுரங்கவெடி மர்மம்-1985
11. இரும்புக் கை-1985
12. மரணக்களம்
13. கல் நெஞ்சன்-1985
14. ஆழ்கடல் திருடன்
15. வைரக் கொள்ளை
16. மர்மத் தீவு
17. மரண வைரம்-1986
18. பழி தீர்க்கும் உளவாளி -1986
19. போலி சுல்தான்
20. மைக்ரோ பிலிம் மர்மம்-1986
21. ரகசிய ஃபைல்-1986
22. கடத்தல் மர்மம்-1986
23. இரத்தக் கறைகள்-1986




Comments

  1. சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஜான் ஹவாக்கின் முழு தமிழ் அகராதியையும் இங்கே தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து, நன்றி முதலை பட்டாளத்தார்களே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ் லிஸ்ட்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்