Posts

Showing posts from May, 2011

இரகசிய உளவாளி பிலிப் காரிகன்

Image
1934-ம் வருடம் டேனியல் ஹம்மட் என்பவர் பிலிப் காரிகன் என்கிற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். பல தலை சிறந்த உளவாளிகளில் இவரும் ஒருவர். இரு நபர்களுக்கான நேருக்கு நேர் சண்டையிலும், துப்பாக்கி சண்டையிலும் சிறந்து விளங்குபவர். இவரது மனைவியின் பெயர் வில்டா காரிகன். ஆரம்ப காலங்களில் இரகசிய உளவாளி X-9 என்கிற பெயரில் பெயரிடப்படாத ஒரு உளவு நிறுவனத்திற்காக வேலை பார்த்துள்ளார். 1940-க்கு பிறகு இரகசிய உளவாளி X-9 என்ற பெயரை மாற்றி பிலிப் காரிகனாக அழைக்கப்பட்டுள்ளார்.அதன் பிறகு F.B.I. உளவாளியாக மாறி பல சிக்கலான விசித்திரமான பலவழக்குகளை தனது திறமையால் வெற்றி கண்டுள்ளார். 1975-ம் வருடம் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு பிலிப் காரிகன் அறிமுகமானார். முத்து காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மேகலா காமிக்ஸ் ராணி காமிக்ஸ் மற்றும் தினத்தந்தி நாளேடுகளில் (தொடர்) மூலமாகவும் பிலிப் காரிகனின் சித்திரக் கதைகள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழில்வந்துள்ள காரிகனின் கதைகளின் தலைப்புகள் மேகலா காமிக்ஸ் 1) எங்கே அந்த வைரம் 2) கழுகு பார்வை 3) ஆயுதப் புதையல் 4) மனித குண்டு 5) மாய விமானம்