விண்வெளிப் பிசாசு - A Super Hero Spider Adventure
1986- வருடம் திகில் காமிக்ஸில் தொடராக (18-பாகம்) வெளிவந்தது, அப்போதைய காலகட்டத்தில் வாசகர்களிடம் மிகுந்த
வரவேற்பைப் பெற்ற சித்திரக் கதையாகும், இச்சித்திரக் கதையை முழுப் புத்தகமாக
வெளியிட்டால்? சிறப்பாக இருக்கும்-
வேற்றுக் கிரகத்திலிருந்து பூமியை நோட்டமிட வந்திருந்த விண்வெளிப்
பிசாசு ஒன்று, தற்செயலாக நீதிக் காவலன் ஸ்பைடர், விசித்திரன் என்கிற எத்தனோடு
மோதிக் கொள்ளும் காட்சியைக் காண நேர்கிறது, அதில் ஆர்வம் கொண்ட விண்வெளிப் பிசாசு.
இருவரையும் தனது விண்கலத்திற்கு கடத்திச் சென்று, இருவருடைய மனத்திரை மூலமாக.
பூமியில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது.
நினைத்த நேரத்தில், நினைத்த உருவத்திற்கு மாறும். அற்புத ஆற்றல்
படைத்த அந்தப் பிசாசு. மேலும் பூமியில் வாழ்ந்த முன்னால் கொடியவர்களான ஜெஸ்ஸி
ஜேம்ஸ்- பில்லி- ஜெங்கிஸ்கான்- ஹெர்குலஸ்- அல்-லூபரியான் போன்றவர்களின்
வரலாறுகளையும் தெரிந்து கொண்டு- அவர்களைப் போன்ற தோற்றத்தில் தன்னை உருமாற்றிக் கொண்டு பூமியில் அட்டகாசம்
புரியத் தொடங்குகிறது.
ஒவ்வொரு கொடியவர்களின் உருவத்தில் தோன்றும் போதெல்லாம் விண்வெளிப்
பிசாசின் அட்டகாசங்களை முறியடித்து, அதன் திட்டங்களை தோல்வியுறச் செய்கிறான் ஸ்பைடர். பூமியில்
தனது ஆதிக்கத்தை தொடர்ந்து முறியடித்து வரும் ஸ்பைடரை, தனது அற்புத ஆற்றல் படைத்த
கதிர் வீச்சீனால், ஸ்பைடரை ராட்சஸ அளவிற்கு வளரச் செய்து தனது அடிமையாக்கிக்
கொள்கிறது விண்வெளிப் பிசாசு-
விண்வெளிப் பிசாசின் பிடியிலிருந்து பூமியை ஸ்பைடர் மீட்டானா?
இச்சித்திரக் கதையை உருவாக்கியவர்கள்- ஜெர்ரி சீகல்& ரிக் பன்.
// இச் சித்திரக் கதையை முழுப் புத்தகமாக வெளியிட்டால்? சிறப்பாக இருக்கும்- //
ReplyDeleteஎன்னுடைய ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் நண்பரே :))
.
மிக மிக அருமையான கதை அது நண்பர்களே! சில ஆதிக்க சக்திகள் சூப்பர் பவரை தொடர்ந்து மறுத்தே வந்து எம்மை கடுப்பெற்றுகிரார்கள். வாழ்க சூப்பர் ஸ்டார்!
ReplyDeleteமுதலை பட்டாளத்தாரே,
ReplyDeleteஅருமையான நினைவூற்றல். உண்மையில் என்னிடம் உள்ள திகில் காமிக்ஸ் கலெக்ஷன் ஓட்டையில், இத்தொடரை முழுவதும் இன்று வரை படித்ததில்லை. ஆங்கிலத்தில் உள்ளதையாவது படிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.
அப்புறம் உங்கள் அபிமான காமிக் நிறுவனத்தின் நியூ லுக் ஸ்பெஷல் பற்றி பதிவு ஒன்றும் இல்லையா ? :P
நண்பர் ரபீக் ராஜா அவர்களே ..
Deleteநமது ஆசிரியர் உள்பட நிறைய பேர் புத்தகம் வந்த உடனே அதை பதிவாக உடனே போட்டு விடுகிறார்கள். பிறகு நாமும் ஏன் அதை செய்ய வேண்டும் என்று நியூ லுக் பற்றி போட வில்லை ..
good post friend . This is apt book to republish in comics classic.Have read this story in bit and pieces . Hope editor gives the joy of reading it a full volume
ReplyDeleteSpider in color. Seeing first time. Thanks for sharing..
ReplyDeleteஅற்புதமான கதை நண்பரே.காமிக்ஸ் க்ளாசிக்ஸ் ல் நாம் கோர வேண்டிய ஸ்பைடரின் முதல் கதை இதுதான் என்பது எனது எண்ணம்.அனைவரும் கோருவார்கள் என நினைக்கிறேன்,ஆசிரியர் வண்ணத்தில் விட மாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருக்கிறார் ,பின் அட்டையில் விட்ட கதையின் ஸ்கேனில் வண்ணத்தில் அற்புதமாயிருக்கிறது.ஸ்பைடர் இக்கதையில் மிக அழகாக வரையப்பட்டிருப்பார் .
ReplyDeleteபழைய நினைவுகள் என்றும் அழிவதில்லை. அறிய பதிப்பிற்கு நன்றி...
ReplyDeleteஅருமையான பகிர்வு... பாராட்டுக்கள்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…
nanber bruno averkalay, thikil comics list i thaganl veliyeda mudima? please.
ReplyDeleteNanbaray ungalal mudiyem.please.
ReplyDelete2009 ம் வருடமே திகில் & மினி லயன் லிஸ்ட் போட்டு விட்டேன் நண்பரே .. தங்களுக்கு தெரியவில்லை என்றால் திகில் சித்திரக் கதைகள் பட்டியல் என்று தேடுங்கள் . கிடைக்கும்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletenanbaray,kandupidithu vitten. very very THANKS.
ReplyDelete