துப்பறியும் வீரர் ரிப் கிர்பி




                                                                       
ப்ளாஷ் கார்டன், ஜங்கிள் ஜிம், பிலிப் காரிகன் போன்ற பிரபல சித்திரக் கதை நாயகர்களை உருவாக்கிய அலெக்ஸ் ரேமாண்ட். ரிப் கிர்பி எண்ணும் சித்திரக் கதை பாத்திரத்தை 1946-ம் ஆண்டு உருவாக்கினார். 
தனியார் துப்பறிவாளரான ரிப் கிர்பி, பல சவாலான வழக்குகளை, தனது அபார துப்பறியும் திறமையால் வெற்றி கண்டுள்ளார். நேரடிச் சண்டையிலும், துப்பாக்கி சுடுவதிலும் சிறந்து விளங்குபவர். கோல்ப் விளையாடுவது இவரது பிடித்தமான விளையாட்டாகும்.  
இவரது உதவியாளர் டெஸ்மாண்ட், ரிப் கிர்பியின் வலதுகரமாக உடன் இருந்து வருபவர். சிறந்த சமையல் கலை நிபுணராகவும் பணி புரிபவர். ரிப் கிர்பியின் உற்ற தோழி ஹனி டோரியன் ஆவார்.      
 1974 – வருடம் முத்து காமிக்ஸ் மூலமாக, தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு ரிப் கிர்பி அறிமுகமானார். அதன் பிறகு மாலை மதி, இந்திரஜால், லயன், ராணி, மினி லயன், போன்றவற்றிலும் ரிப் கிர்பியின் சித்திரக் கதைகள் வெளி வந்துள்ளன. 
தமிழில் வெளிவந்துள்ள ரிப் கிர்பியின் சித்திரக் கதைகளின்  தலைப்புக்கள்!  முத்து காமிக்ஸ் – 
1.புதையல் வேட்டை 2.ரோஜா மாளிகை இரகசியம் 3.கொலை வழக்கு மர்மம்  4.பகல் கொள்ளை 5.மூன்று தூண் மர்மம் 6.பட்லர் படுகொலை 7.கள்ள நோட்டுக் கும்பல் 8.கடல் ராணி 9.விசித்திர குரங்கு 10.பிரமிட் ரகசியம் 11.கற்கோட்டைப் புதையல் 12.காணாமல் போன வாரிசுகள் 13.சூரிய சாம்ராஜ்யம் 14.யார் அந்தக் கொலையாளி 15.கையெழுத்து மோசடி 16.மரணக் குகை 17.நாலுகால் திருடன் 18.வழிப்பறிக் கொள்ளை 19.வாரிசு யார்? 20.ரெயின்போ விடுதி 
மாலை மதி காமிக்ஸ்-  
1.சுட்டவன் யார்? 2.இரண்டாவது தாடி 3.தோற்பதற்காகவே சூதாடிய மோசக்காரி 4.நாலுகால் போக்கிரி 5.கருப்பு முத்து 6.வேஷக்காரி 7.பாதி நோட்டு 8.காணாமற் போன கவர்ச்சி நட்சத்திரம் 
இந்திரஜால் காமிக்ஸ்- 
1.பழங்கலை நகரில் பகல் மயக்கம்  2.மாயமா? மர்மமா? 3.தங்கத் தாயத்து 4.கழுதையின் அடிச்சுவட்டிலே 5.அபேஸ் அல்பி 6.மர்ம மாளிகை 7.வாழும்பா பொக்கிஷம் 8.புதையல் தீவில் புரட்டு வேலை 9.மெழுகுப் பொறி 10.எறி மீன் விளைத்த புதையல் 11.கன்னி மாயக் கன்னி    
ராணி காமிக்ஸ் – 
1.வாராயோ வைர நெக்லஸ்  2.பூதம் காத்த புதையல்
மினி லயன் காமிக்ஸ்- 
1.காசில்லா கோடிஸ்வரன்  2.மாயஜால மோசடி
லயன் காமிக்ஸ்- 
 
1.பொக்கிஷம் தேடிய பிசாசு 2.opreation அலாவுதீன் 3.மரண மாளிகை 4.பாலைவன சொர்க்கம் 5.கானகக் கோட்டை 6.பலி கேட்ட புதையல் 7.வேங்கை வேட்டை 8.மரண மயக்கம் 9.ஒரு வெறியனைத் தேடி 10.வைரச் சிலை மர்மம் 11.இரத்தக் கரம் 12.கம்ப்யூட்டர் கொலைகள் 13.பனியில் ஒரு நாடகம் 14.தேவதையைத் தேடி 15.மன்மதனை மன்னிப்போம் 16.மாயமாய் போன மணாளன் 17.ப்ளாக் மெயில்  
18.கருப்பு விதவை 19.கன்னித்தீவில் ஒரு காரிகை  
இவைகள் தவிர தினமணிக் கதிர், குமுதம், தினத்தந்தி போன்ற நாளிதழ்களிலும் ரிப் கிர்பியின் சித்திரக் கதைகள் 
தொடர்கதைகளாக வெளிவந்துள்ளன.     

Comments

  1. அழகான பதிவு.

    ReplyDelete
  2. காசில்லா கோடீஸ்வரன் - என்னை மிகவும் கவர்ந்த கதை ரிப் கதைகளில் ஒன்று!

    ReplyDelete

  3. அமைதியான ஆர்பாட்டமில்லாத துப்பறிவாளர் ரிப் கிர்பி. முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ்-.ல் மட்டுமே படித்துள்ளேன்.

    மாலைமதி-ல் வந்துள்ள வேஷக்காரி அட்டைப்படம் படு சூப்பர். நீங்கள் ஸ்கேன் செய்து வெளியிட்டுள்ள விதமும் அருமை.

    விலாவாரியாக கொடுத்த தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ரிப் கிர்பியின் கதைகளில் சைடுவாத்தியமாக வந்து கொண்டிருந்த டெஸ்ஸுக்கு சோலாவாக கலங்க வைக்கும் காசில்லா கோடீஸ்வரனே எனது பேவரைட். நல்ல வேலைளயாக இன்றும் கைவசம் இருக்கிறது. :D

    ReplyDelete
  5. தகவல் களஞ்சியமையா நீர். வாழ்த்துக்கள்

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஹீரோ மாதிரி "ஹி ஹி எங்கயோ படித்த நியாபகம்" என்று தான் சொல்ல முடிகிறது.

    ReplyDelete
  6. சிறுவயதில் எனக்கு மாண்ட்ரேக், வேதாளர் பிடித்த அளவுக்கு ரிப்கிர்பி கதைகள் அவ்வளவாக பிடிப்பதில்லை.ஆனால் இப்போது அன்றைய ரிப்கிர்பி கதைகளைப் படிக்காமல் போனதை எண்ணி மிக வருந்துகின்றேன்...கிர்பியின் புத்திசாலித்தனத்தைவிட டெஸ்மாண்டின் முணுமுணுக்கும் மெல்லிய நகைச்சுவை வசனங்கள் என் மனதை அள்ளுபவை...

    ReplyDelete
  7. உங்களிடம் இல்லாத பழைய காமிக்ஸே கிடையாத போலிருக்கிறதே...ரொம்ப ரொம்ப பொறாமையாக இருக்கு...எதுக்கும் எல்லாப் புத்தகங்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்க..என் கண்ணே படும் போலிருக்கு.அவ்வளவு பளிச்...

    ReplyDelete
  8. மிக நல்ல பதிவு.!! எனக்கு ஏனோ முத்து காமிக்ஸில் வந்ததைவிட ,,மாலை மதியில் வந்த இவரது கதைகள் நன்றாக இருந்ததாக ஒரு எண்ணம், இன்னும் ஏராலமான கதைகள் தமிழில் வராதவைகள் உள்ளன!

    ReplyDelete
  9. ரிப் கிர்பியின் கதைகளில்,நான் முதன் முதலில் படித்ததது "புதையல் வேட்டை "கால்சட்டை போடும் வயதில்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்