Friday, November 1, 2013

2014 அட்டவணையும்- சில கருத்துக்களும்.


மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள 2014 அட்டவணை பலருக்கு ஏமாற்றத்தையே தரக் கூடியதாக அமைந்துள்ளது.
2014- ல் வெளிவருவதாக சொன்ன திகில் நகரில் டெக்ஸ்,
மர்ம மனிதன் மார்ட்டீன், சி.ஐ.டி ராபின், டேஞ்சர் டயபாலிக், ஜெஸ்லாங் போன்ற கதைகளுக்கு இந்த வருடமும் கல்தா கொடுக்கப் பட்டுள்ளது. கார்ஸனின் கடந்த காலம் கதை வெளிவந்து சில வருடங்கள் தான் ஆகிறது. அதுவும் கருப்பு, வெள்ளையில் வெளிவந்த இதழ் அனேகம் பேரிடமும் இருக்கக் கூடியது, அதை திரும்பவும் கருப்பு வெள்ளையில்   (வண்ணத்தில் போடாமல்) போடுவது ஏனென்று புரியவில்லை. 
அதே போல் பூம் பூம் படலம், நிழல் 1 நிஜம் 2 கதையும் சமிபத்தில் வெளிவந்த கதைதான், இதற்கு பதில் மினி லயனில் வெளிவந்துள்ள புரட்சித்தீ, பயங்கரப் பயணம், நீலப்பேய் மர்மம், ராஜா ராணி ஜாக்கி, விண்வெளியில் ஒரு எலி, மாயத்தீவில் அலிபாபா, வெள்ளைப் பிசாசு, நடுக்கடலில் எலிகள், ஒரு நாணயப் போராட்டம், கொள்ளைக்கார கார் போன்று கிடைக்காத அரிய கதைகளை வண்ணத்தில் மறுபதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருந்திருக்கும், 
கமான்சே கதையையும், ப்ளுகோட்ஸ் பட்டாளத்தின் கதையையும்  ஒன்றாக குறைத்திருக்கலாம், அதற்கு பதில் மேலே உள்ள கதை நாயகர்களுக்கு  வாய்ப்புகள் வழங்கியிருக்கலாம். மற்றும் கிராபிக் நாவல்களுக்கு நாம் இன்னும் பழகவே இல்லை, ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷலில் வெளிவந்துள்ள எமனின் திசை மேற்கை தவிர மற்ற கதைகள் எல்லாம் சொதப்பல்தான், அதற்குள் கிராபிக் நாவலுக்கென தனியாக கிராபிக் நாவல் சன்ஷைன் ஆரம்பிப்பது இன்னும் சொதப்பலாகத்தான் முடியக்கூடுமே, அதற்கு பதில் வருடத்திற்கு ஒரு கிராபிக் நாவல் என்னும் முயற்ச்சியோடு இதை விட்டு,விட்டு வெளிவந்துள்ள, வெளிவராத பல நாயகர்களின் கதைளில் இன்னும் கூடுதலாக தீவிரம் காட்ட முயற்சிக்கலாம்,  அதே போல் இப்பொழுதுதான் 50, 100 என்று விலையில் வாசகர்கள் செட்டாகி வரும் நேரத்தில் திடுப்பென விலையை 60. 120 என்று ஏற்றுவது விற்பனையின் விகிதத்தையும், புதிய வாசகர்களின் வரவையும் தடாலடியாக குறைக்கக் கூடும். அதற்கு பதில் filler pages, வலையின் மறுபக்கம், மியாவி, கார்பீல்ட்  என எதுவும் இல்லாமல் (உதாரணத்திற்கு தற்போது வெளிவந்துள்ள 
 ஒரு சிப்பாயின் சுவடுகள்) கதைகளை மட்டும் வெளியிட்டு 100 ரூபாய் விலையிலேயே புத்தகத்தை வெளியிட முயற்சிக்கலாம்.. அல்லது 
இது போல வேறு முயற்சிகள் இருந்தாலும் எடுக்கலாம். மாதந்தோறும் இரண்டு வண்ண கதைகள் (புதியது அல்லது மறுபதிப்பு) 100 ரூபாயில் ஒன்றும், கருப்பு வெள்ளை 50 ரூபாயில் ஒன்றும் மட்டும் வெளியிடலாம், அதிக கதைகள் அதிக விலைகள் பலரின் பர்ஸ்களை பதம் பார்ப்பது நிச்சயமே, அதே போல் மறு பதிப்பு கதைகள், கார்ட்டூன் கதைகள் மட்டும் சன்ஷைன் லைப்ரரியிலும், ஆக்‌ஷன் கதைகளான டெக்ஸ், டைகர் போன்ற நாயகர்களின் கதைகள் லயன், முத்துவில் மட்டும் தொடர்ந்து வெளிவந்தால் சில குழப்பங்களை தவிர்க்கலாம். நண்பர்களே இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்களும் இங்கு பகிரலாமே?         

32 comments:

 1. வந்தோம்ல ஃபர்ஸ்டு... படித்தபின் கருத்திடுகிறேன் நண்பரே..

  ReplyDelete
 2. 2014 ஒரிஜினல் அட்டவணையைவிட உங்கள் ஸ்கேன் அழகாகவும், பளிச்சென்றும் இருக்கிறது!

  நிறையபேர் சொல்லத்தயங்கும் ஒரு காமிக்ஸ் ரசிகனின் உண்மையான யோசிக்கவேண்டிய கருத்துகள்!!!

  ReplyDelete
  Replies
  1. அப்படியே உங்க கருத்தையும் சொல்லியிருக்கலாம். ம்

   Delete
 3. I also agree with you. There is no need for separate 'Sunshine graphic novel'. It will confuse scheme of things. It will be better to publish new stories under Lion or Muthu comics and reprints under Sunshine library. Also it is advisable to republish very old stories like Puratchi thee instead of recent ones like Boom boom padalam.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய கருத்தை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சார்.

   Delete
 4. அலங்காரமில்லாத உண்மை ...!

  ReplyDelete
 5. I second all the points mentioned in your post above. Hope Editor will consider and change his mind. Fingers crossed.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! மாற்றங்கள் நிகழ்ந்தால் நல்லது தான்...

   Delete
 6. கலீல்-ன் கருத்துகளை ஆணித்தரமாக ஆதரிக்கிறேன்..!!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நன்றி! நன்றி! நண்பரே...

   Delete
 7. உண்மைதான் நண்பரே..!

  ReplyDelete
 8. I second your thoughts. Please post the same points in our lion blog.

  ReplyDelete
  Replies
  1. எடி ப்ளாக்கில் சாட் பண்ணலாமே தவிர, நம்முடைய கருத்துக்களை அங்கு பகிர்ந்து கொள்ள முடியாது கிரி. அதுமில்லாமல் அவர் பேச்சையே அவர் (எடி) கேட்க மாட்டார், இதில் நம்முடைய பேச்சையா கேட்க போறார்? நம்முடைய குறைகளை இந்த மாதிரி இடங்களில் பகிர்ந்து கொண்டால் தான் உண்டு...

   Delete
 9. முற்றிலும் உண்மை நண்பரே..
  அத்துடன் நமது ஆசிரியரின் அற்புதமான மொழிப்பெயர்ப்பையும்,அழகான தமிழ்நடையையும் ரசிக்க விடாமல் செய்துவிட்ட மிகவும் சுமாரன அச்சுத்தரத்தை பற்றி குறிப்பிட்டிருந்தால் மிகவும் உபயோகமாயிருந்திருக்கும்.

  ReplyDelete
 10. முற்றிலும் உண்மை நண்பரே..
  அத்துடன் நமது ஆசிரியரின் அற்புதமான மொழிப்பெயர்ப்பையும்,அழகான தமிழ்நடையையும் ரசிக்க விடாமல் செய்துவிட்ட மிகவும் சுமாரன அச்சுத்தரத்தை பற்றி குறிப்பிட்டிருந்தால் மிகவும் உபயோகமாயிருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பல புத்தகங்களில் அச்சுத்தரம் சரியில்லையென பல நண்பர்கள் எடுத்துக் கூறிதான் வருகிறார்கள். இருந்தும் அந்த தவறுகள் தொடர்ந்த வண்ணமாகத்தான் உள்ளது. அதுவும் தற்போது தீபாவளி டெக்ஸ் மலரில் வந்துள்ள காகிதம் ரொம்ப மட்டம் அதனாலே டெக்ஸ் கதையே படிக்க திருப்தி இல்லாமாலே உள்ளது.

   Delete
 11. சார் .....
  உங்கள் பதிவின் அனைத்து கருத்துகளையும் அப்படியே வரிக்கு வரி ஆதரிக்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! இந்த பதிவின் மூலமாக ஏதாவது மாற்றம் நிகழ்ந்தால் சந்தோஷமே...

   Delete
 12. உங்கள் கருத்து நியாயமானது ! சிப்பாயின் சுவடுகளில் printing தரம் சுமார்தான் ! விரைவில் தரம் உயரும் என எதிர்பார்ப்போம் ! என் போன்றோரிடம் கார்சன் கடந்த காலம் இல்லை ஆகவே எந்நிலையிலும் colour or b&w வரவேற்கிறோம்!

  ReplyDelete
 13. Tex willer கதைகள் including கார்சன் கடந்த காலம் colourல் printing தரம் குறைந்து வருவதை விட b&w வருவதே மேல் !

  ReplyDelete
  Replies
  1. வண்ணத்தில் தான் தரம் குறையவில்லை நண்பரே! இம்மாதம் வெளிவந்துள்ள தீபாவளி மலர் டெக்ஸ் இதழ் ( b&w ) கூட பிரிண்டிங் தரம் குறைந்துள்ளதே?

   Delete
 14. Jஎன்ன கலீல் சார் இப்படி சொல்லிவிட்டீர்கள்..
  சமீபத்தில் வந்த கலர் புத்தகங்களில் அனைத்து மிகவும் மங்கலாகவும் மோசமான கலர்களிலும் இம்சைபடுத்துவதை நீங்கள் சுட்டி காட்டமாட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. அதான்! நீங்களே சுட்டி காட்டி விட்டீர்களே பாஷா பாய்... :)

   Delete
 15. நியாயமான கருத்துக்கள்! பெரும்பாலானவைகளுக்கு நானும் உடன்படுகிறேன்.
  கூடவே ஒரு சந்தேகமும்:
  * உங்களின் இக்கருத்துக்கள் எடிட்டரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டிருக்கிறதா? ஒரு ஈ-மெயிலாவது?

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே! இதை விட நிறைய கேள்விகள் நேரிலேயே கேட்டு விட்டோம். ஆனால் அப்போது மட்டும் சில விஷயங்களுக்கு ஒத்து போகிறார். ஆனால் அதையும் நடைமுறை படுத்த மாட்டார். அவ்ருக்கு எது பிடிக்கிறதோ அதைதான் நடைமுறைக்கு கொண்டு வராரே தவிர! வாசகர்களுக்கு எந்தந்த விஷயங்கள் பிடிக்கிறதோ அதையெல்லாம் நடைமுறை படுத்த மாட்டார். சங்க காலத்து தமிழ், சமஸ்கிருத வார்த்தைகள் சிலது நமக்கே புரிய மாட்டேன்கிறது. இதில் அடுத்து வர்ர தலைமுறைக்கு எப்படி புரிய போகுது. இந்த மாதிரி நிறைய விஷயங்கள் மாறவே மாறாது. என்னை விடுங்கள் இங்கே வந்து கருத்து கூரியவர்களின் கருத்தையும் பாருங்கள். அவர்க்ளின் ஆதங்கமும் உங்களுக்கு புரியும். இதே போல் கருத்து கூறாமல் நிறைய பேர் ஒதுங்கி உள்ளனர்.

   Delete
 16. true ji! i accept all ur comments! we need new blood and rare books re-publishing!

  ReplyDelete
 17. காமிக்ஸ் மறுபதிப்பு க்ளாசிக்ஸ் லிஸ்ட் எதாவது நீங்கள் போஸ்ட் செய்து உள்ளீர்களா ?

  ReplyDelete

2018 அட்டவணையும் சில கருத்துக்களும்

2018 அட்டவணையில் பட்டாசுகளும், புஸ்வானங்களுமாய் நிறைந்துள்ளது  பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிருப்தியையும் தந்துள்ளது  இந்த  அ...