பதிவாய் சில நினைவுகள்

புத்தக( nbs )திருவிழாவில் கலந்துகொள்வதற்காக. கார்த்திகேயன்,(காமிக்ஸ் கலாட்டா நாயகர்) பிரபாவதி(சித்திரக் கதை ஆய்வாளர்), நான்(கலீல்) ராஜகணேஷ்(வில்லர் ஃபேன்),செந்தில் குமார்(காமிக்ஸ் ரசிகன்) ஆகிய அனைவரும் ஒரு குழுவாக புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, மாலை 4 மணியளவில் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து சேர்ந்தோம். ஒரு வழியாக ஸ்டால் எண்-343 கண்டுபிடித்து வந்து சேர்ந்தால்? அங்கே எங்களுக்கு முன்னால் ஒரு பெரும் படையே, வரப்போகும் எடிட்டர் திரு,விஜயன் அவர்களையும், அவரது தந்தையரையும் சந்திப்பதற்காக நின்று கொண்டிருப்பதை கண்டோம். சிறிது நேரத்திற்குப் பின்னர் எடிட்டர் அவர்களும், அவரது தந்தையரும் வந்த உடன். சுற்றி நின்றிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் ஒளி வீசத் தொடங்கி.. அடங்கியதும், எடிட்டரின் தந்தை நெவர் பிஃபோர் ஸ்பெஷல் புத்தகத்தை வெளியிட அவரது பேரன் திரு,விக்ரம் அவர்கள் பெற்றுக்கொள்ள, அந்த மகிழ்ச்சியான தருணத்தை சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த கேமரா மூலமாகவும், செல்போன் மூ லமாகவும் படம் பிடிக்கத் தொடங...