பதிவாய் சில நினைவுகள்
புத்தக(nbs)திருவிழாவில் கலந்துகொள்வதற்காக.
கார்த்திகேயன்,(காமிக்ஸ் கலாட்டா நாயகர்)
பிரபாவதி(சித்திரக் கதை ஆய்வாளர்), நான்(கலீல்)
ராஜகணேஷ்(வில்லர் ஃபேன்),செந்தில் குமார்(காமிக்ஸ் ரசிகன்) ஆகிய அனைவரும் ஒரு குழுவாக புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, மாலை 4 மணியளவில் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து சேர்ந்தோம்.
ஒரு வழியாக ஸ்டால் எண்-343 கண்டுபிடித்து வந்து சேர்ந்தால்? அங்கே எங்களுக்கு முன்னால் ஒரு பெரும் படையே, வரப்போகும் எடிட்டர் திரு,விஜயன் அவர்களையும், அவரது தந்தையரையும் சந்திப்பதற்காக நின்று கொண்டிருப்பதை கண்டோம். சிறிது நேரத்திற்குப் பின்னர் எடிட்டர் அவர்களும், அவரது தந்தையரும் வந்த உடன். சுற்றி நின்றிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் ஒளி வீசத் தொடங்கி.. அடங்கியதும், எடிட்டரின் தந்தை நெவர் பிஃபோர் ஸ்பெஷல் புத்தகத்தை வெளியிட அவரது பேரன் திரு,விக்ரம் அவர்கள் பெற்றுக்கொள்ள, அந்த மகிழ்ச்சியான தருணத்தை சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த கேமரா மூலமாகவும், செல்போன் மூலமாகவும் படம் பிடிக்கத் தொடங்கினர்-

அதன் பிறகு எடிட்டர் அவர்களையும், அவரது தந்தையரையும் முற்றுகையிட்டு தங்கள் கேள்விக்கணைகளை தொடுக்கத் தொடங்கினர்.எடிட்டரும்,அவரது தந்தையரும் அனைவருக்கும் சளைக்காமல் பதிலளிக்கவும்,கையெழுத்திடவும் தொடங்கினர். பின்னர் வந்திருந்த நண்பர்கள் அனைவரும் ஒருவரை,ஒருவர் தங்கள் நிஜப் பெயர்களையும், புனைப் பெயர்களையும் கூறிக் கொண்டும். தங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டும், ஒருவரை, ஒருவர் படம் பிடிக்கத் தொடங்கினர். இரவு 9 மணியாகியும் அங்கிருந்து விலகிச் செல்ல மணம் இல்லாமலே ஒவ்வொருவரும் இறுதியாக விலகிச் செல்ல தொடங்கினோம். எங்கள் அனைவருக்கும் அது ஒரு மறக்க முடியாத இனிய பயணமாக அமைந்து விட்டது. அங்கு இருந்த நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளேன்.
கார்த்திகேயன், நான்(கலீல்),எடிட்டர் திரு விஜயன் அவ்ர்கள்,அவர் அப்பா திரு,சவுந்திர பாண்டியன் அவர்கள், ராஜகணேஷ், திரு.விக்ரம்..
ராஜகணேஷ்,திரு,ராதாகிருஷ்ணன்,செந்தில்குமார்,
இரா.தி.முருகன், கலீல்,வேலு,கார்த்திகேயன்.
உதய்குமார்,கோபாலகிருஷ்ணன், கலீல்,கிங்விஸ்வா,ஸ்ரீராம்
கார்த்திகேயன்,பாலாஜி சுந்தர்,கோபால கிருஷ்ணன்,கலீல்
ரமேஷ், லக்கி லிமட்& கார்த்திகேயன்
வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் எடிட்டரின் தந்தை.
திரு,ராதாகிருஷ்ணன் அவர்கள்
ஆர்வமாய் புத்தகங்களை வாங்கும் வாசகர்கள்
ராஜ் முத்துக்குமார், லக்கிலிமட்
ஆயிரத்தில் ஒருவர் (திரு எடிட்டர் அவர்கள்)

எடிட்டர் & கோகுலகிருஷ்ணன்
உதய்குமார் &ராஜ கணேஷ் & கலீல்
எடிட்டர் & குட்டி
வாசர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்த எடிட்டர்
அழகான பதிவு... நேரில் வர முடியாதவர்களின் குறை தீர்ந்திருக்கும்....
ReplyDeleteசூப்பர்! நன்றி தலைவரே!
ReplyDeleteநன்றிகள் பல! மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!
ReplyDeleteநல்ல தொகுப்பு நண்பரே!
ReplyDeleteநன்றி நண்பரே- தாங்களும் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..
Deleteமனதில் நீங்கா இடம் பெற்று விட்ட சந்திப்பு
ReplyDeleteஉங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.. அனைவருக்கும் அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்து விட்டது.
Deleteஅனைத்து நண்பர்களின் முகங்களையும் காட்டியதற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteமுதலையை நேரில் கண்டு வியந்தது ஒரு மறக்கவியலா அனுபவம்! அழகாக உரைத்தமை மிக நன்று!
ReplyDeleteநீங்கள் தான் முதலைப்பட்டாளம் என்ற விஷயம், வீட்டிற்கு வந்த உடன் தான் தெரிந்தது.
ReplyDeleteஅடுத்த முறை கண்டிப்பாக சந்தித்து பேசவேண்டும்.. புகைப்படங்கள் அனைத்தும் அருமை
நன்றி நண்பரே.. முடிந்தளவு அனைத்து நண்பர்களையும் சந்தித்து பேச வேண்டும் என்ற ஆவலில் தான் கண்காட்சிக்கு வந்தேன். ஆனால் உங்களைப் போன்ற நிறைய நண்பர்களை தவற விட்டு விட்டேன். அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திக்கலாம்..
Deleteநன்று. உங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
ReplyDeleteஎனக்கும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி தான். ஆனால் நேரில் சரியாக பேச முடியாமல் போய் விட்டது..
DeleteNanbarkalai arimuga paduthiyatharku nandri. Nan 8.45 ku vanthathal ungalai santhithu pesa mudiyamal poi vitathu.
ReplyDeleteநான் இரவு 9 மணி வரை ஸ்டாலில் தான் இருந்தேன் நண்பரே. ஆனால் உங்களை நான் நேரில் சந்தித்தது இல்லை என்பதால் உங்கள் முகம் எனக்கு தெரியாது. அதனால் உங்களை சந்திக்க முடியாமல் போய் விட்டது.
Deleteநண்பர் கலீல், அருமை! தங்களின் காமிக்ஸ் ஆவல் என்னை புல்லரிக்க வைக்கிறது! கடந்த முறை பெங்களூர் வந்தீர்கள் (ஒரு பெரிய பை நிறைய நண்பருக்காக புத்தகம் அள்ளிச்சென்றது), தற்போது சென்னை! ஓயாத வேலை நடுவிலும் காமிக்ஸ்காக நீங்கள் செலவிடுவது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது!
ReplyDeletesuper sir photos very nice thanks
ReplyDeleteஅருமையான பதிவு, அருமையான படங்கள்.
ReplyDeleteமகிழ்ச்சியான தருணங்கள். படங்களுக்கு நன்றி அலிகேட்டர்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றி! நன்றி! நன்றி!
ReplyDeletei am senthil 4m panruti. can i meet u at pondycheery. tell ur mobile mo. my no 9976992600
ReplyDeleteசென்னையில் ஒரு நாள் :D
ReplyDelete