முதல் வேதாளனின் கதை

1974-ம் வருடம் தொடங்கப்பட்ட முத்து மினி காமிக்ஸில், எட்டாவது வெளியிடாக (இறுதி புத்தகமாகவும்) 1977-ல் வெளிவந்த புத்தகம் , இந்த முதல் வேதாளனின் கதை. முகமூடி வேதாளன் என்றதுமே அவரது மனைவி டயானா, இரட்டைக் குழந்தைகள்,ரெக்ஸ்,குரன், ஹீரோ, டெவில், பந்தர் இனக் குள்ளர்கள், ஈடன் தீவு, கபாலக் குகை, முத்திரை மோதிரம், தங்க மணல் கடற்கரை, இரட்டைத் துப்பாக்கி, என நீண்டுச் செல்லும் கற்பனைப் பாத்திரங்கள் தான் நம் நினைவுகளுக்கு வரக் கூடும், ஆனால்? இந்தக் கதையில் தான் முதல் வேதாளர் உருவான விதத்தை அழகாக விவரித்துள்ளனர், 400 வருடங்களுக்கு முன்னர், சிங் கடற்கொள்ளையர்களால் தாக்கப் பட்டு, உயிர் பிழைக்க பங்கல்லா கடற்கரையில் கரை ஒதுங்கும் மனிதனை மீட்டு. அவரின் உயிரை காப்பாற்றுகின்றனர் பந்தர் இனக் குள்ளர்கள். ஆனால்? அவர்களோ வசாகா என்னும் கொடிய இனத்தவரிடம் அடிமைகளாக காலம்,காலமாக வாழ்ந்து வருகின்றனர். ...