முதல் வேதாளனின் கதை

1974-ம் வருடம் தொடங்கப்பட்ட
முத்து மினி காமிக்ஸில், எட்டாவது வெளியிடாக (இறுதி புத்தகமாகவும்) 1977-ல் வெளிவந்த புத்தகம்,
இந்த முதல்
வேதாளனின் கதை.
முகமூடி வேதாளன் என்றதுமே அவரது மனைவி டயானா,
இரட்டைக் குழந்தைகள்,ரெக்ஸ்,குரன்,
ஹீரோ, டெவில்,
பந்தர் இனக் குள்ளர்கள், ஈடன்
தீவு, கபாலக் குகை, முத்திரை மோதிரம், தங்க மணல் கடற்கரை, இரட்டைத் துப்பாக்கி, என
நீண்டுச் செல்லும் கற்பனைப்
பாத்திரங்கள் தான் நம் நினைவுகளுக்கு வரக்
கூடும், ஆனால்? இந்தக் கதையில் தான் முதல் வேதாளர் உருவான விதத்தை அழகாக
விவரித்துள்ளனர்,
400 வருடங்களுக்கு முன்னர்,
சிங் கடற்கொள்ளையர்களால் தாக்கப் பட்டு,
உயிர் பிழைக்க பங்கல்லா கடற்கரையில் கரை ஒதுங்கும் மனிதனை மீட்டு. அவரின் உயிரை
காப்பாற்றுகின்றனர் பந்தர் இனக் குள்ளர்கள். ஆனால்? அவர்களோ வசாகா என்னும் கொடிய
இனத்தவரிடம் அடிமைகளாக காலம்,காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
தாங்கள் காப்பாற்றிய
மனிதன் தான் தங்களை மீட்க வந்த ரட்சகனாக கருதுகின்றனர் பந்தர் இனக் குள்ளர்கள்.
அவரும்,வசாகா இனத்தவரின் பூதக் கடவுளாக (வேதாளராக) தன்னை உருமாற்றிக் கொண்டு,
பந்தர் இனக் குள்ளர்களை ஒன்று திரட்டி,
வசாகா இனத்தவரிடம் அடிமைப் பட்டவர்களை மீட்டு வருகிறார்.

இந்தக் கதை இந்திரஜால்( தமிழில்) காமிக்ஸிலும் வெளிவந்துள்ளது.

முத்து மினி காமிக்ஸில் வெளிவந்துள்ள முதல் வேதாளனின் கதையை யாரும் மறுபதிப்பு செய்யாத காரணத்தினால்? புத்தகம் (காமிக்ஸ்) சேகரிக்கும் பலர். ஆர்வமாகத் தேடிக் கொண்டிருக்கும். சில அறிய(காமிக்ஸ்) புத்தகங்களில் இந்த முதல் வேதாளனின் கதை புத்தகமும் ஒன்றாக திகழ்கிறது. இன்றும் வேதாளர் கதைகள் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருந்தாலும். தமிழில் இவரை யாரும் கண்டு கொள்ளாததுதான் வியப்பைத் தருகிறது.
விற்பனையாகிறது.
என்னிடம் அதிர்ஷ்டவசமாக அந்த புத்தகம் உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteவந்து அள்ளி போக நேரமில்லை நண்பா! வரேன் ஒரு நாள்! ஹி! ஹி! ஹி !
Deleteதாங்களும் ஒரு அதிர்ஷ்டசாலி தான். இந்த புத்தகத்திற்காக பலர் பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ReplyDeleteஅறிய தகவல் நண்பரே ...
ReplyDeleteஉண்மையாகவே இதுவரை அறியாத புத்தகம். விஜயன் சார் இதை ரீ-பிரிண்ட் செய்யலாம்.
லார்கோ அட்டை படம் உங்கள் கை வண்ணமோ ?
Deleteஆமாம் நண்பரே.. தற்போது வெளிவந்துள்ள லார்கோ அட்டைப் படத்திற்கு ஒரிஜினல் அட்டை படத்தையே உபயோகித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதற்காக. சும்மா ஒரு டிரையல்.
Deleteஎனக்கு பிடித்த கதைகளில் வேதாளருக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் உண்டு. பழய நிகழ்வுகளை கிளரும் அற்புத பதிவு. என்னிடம் இந்த புத்தகம் இருந்தாலும் இறுதி 3 பக்கங்கள் இல்லை
ReplyDeletelargo and lucky luke pondycherryel kidikirada.
ReplyDeleteகிடைக்கிறது நண்பரே..
Deleteadress please
Deleteஜி முத்து மினி முழு கதை வரிசை வேண்டுமே!தங்கள் பதிவு மிக பயனுள்ள தகவலாக அமைந்தது!
ReplyDeleteவணக்கம் சைமன் அவர்களே..
ReplyDeleteஇதோ தாங்கள் கேட்ட வரிசை. முத்து மினி காமிக்ஸ்.
1. வாயு வேக வாசு (1974) 2. புதையல் தீவு மர்மம் (1975)
3. படகு வீடு மர்மம் (1975) 4. சூரப்புலி சுந்தர் (1975)
5. காந்த மலை மர்மம் (1975) 6. இன்ஸ்பெக்டர் விக்ரம் (1976)
7. தபால் தலை மர்மம் (1976) 8. முதல் வேதாளனின் கதை (1977)
பொக்கிஷம் :)
ReplyDeleteஅருமையான விசயம்..missing lot of books...:(
ReplyDelete