லயன் தீபாவளி மலர் ஒரு கண்ணோட்டம்

1. தீபாவளி மலர் 1. இரும்பு மனிதன் (ஆர்ச்சி) 2. துப்பறியும் கம்ப்யூட்டர் (துப்பறியும் கம்ப்யூட்டர் ஜானி) லயனில் வெளிவந்த முதல் மலர், பெரிய சைஸில், இரு வண்ணத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற இதழ், வெளிவந்த வருடம் – 1984. 2. தீபாவளிமலர் 1. தலைவாங்கிக் குரங்கு (டெக்ஸ் வில்லர்) இந்த இதழ் மூலமாகத்தான் டெக்ஸ் வில்லர் அறிமுகமானார். கிட், டைகர், கார்ஸன் ஆகிய மூவரும் இல்லாமலும், அதிக துப்பாக்கி வெடிச்சத்தம் இல்லாமலும், அழகான துப்பறியும் கதையாக அமைந்திருந்தது. வெளிவந்த வருடம் – 1985. 3. தீபாவளி மலர் பாக்கெட் சைஸில், ...