Friday, October 25, 2013

மாலைமதி காமிக்ஸ் லிஸ்ட்


வார இதழ்களும், மாத முழுநீள  நாவல்களும் வெளியிட்டு வந்த குமுதம் நிறுவனத்தினர், தங்களது நிறுவனத்தில் ஒன்றான மாலைமதியில்உள்ளூரில்(லோக்கல்) உருவான சித்திரக்கதைகளை
மட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்தபோது, சற்று மாறுதலுக்காக

1975- ம் வருடத்தில் மேலை நாட்டுச் சித்திரக்கதைளை மாலைமதி AFI காமிக்ஸ் என்று அறிமுகப்படுத்தி வெளியிட்டனர்.  பிலிப் காரிகன், 
ரிப் கிர்பி, ஜானி ஹாஸார்ட், சிஸ்கோ கிட் போன்ற சித்திரக்கதை நாயகர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிட்டனர். முதலில் மாதம் ஒரு முறையாகவும். பிறகு மாதம் இரு முறையாகவும் வெளிவரத் தொடங்கியது.  இதற்க்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் 
1.10. 1976-ம் வருடத்துடன் நடிகர் கடத்தப்பட்டார் என்ற இதழுடன் தங்களது காமிக்ஸ் சகாப்தத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் மாலைமதியில் முழு நீள நாவல்களை மட்டும் வெளியிடத் தொடங்கினர்.  1975 முதல் 1976 வரை வெளிவந்துள்ள
மாலைமதி (AFI) சித்திரக்கதைகளின் தலைப்புக்களும், அதன் முகப்பு அட்டை படங்களும்.  

1.குகையில் ஒரு பெண்(சிஸ்கோ) 
2.மோசடி விடாதே(சிஸ்கோ) 
3.மொராக்கோ மர்மம்(காரிகன்) 
4.கொலைகார கோமாளி(சிஸ்கோ)  
5.ராக்கெட் ராட்சஸன்(காரிகன்) 
6.வேஷக்காரி(ரிப் கிர்பி)  
7.தோற்பதற்காகவே சூதாடிய மோசக்காரி(ரிப் கிர்பி)
8.அப்பாவித் திருடன்(சிஸ்கோ) 
9.கருப்பு முத்து(ரிப் கிர்பி) 
10.இரட்டை முகம்(ஜானி ஹாஸார்ட்)
11.ஒற்றைக் கண்ணாடி(சிஸ்கோ) 
12.மரண வலை(காரிகன்)  
13.பாதி நோட்டு(ரிப் கிர்பி) 
14.பெண் வெறியன் உஷார் (சிஸ்கோ)
15.நம்பிக்கைத் துரோகி டாக்டர் செவென்(காரிகன்)
16. நாலுகால் போக்கிரி(ரிப் கிர்பி)
17.கொள்ளைக்காரன் தீவு(காரிகன்)
18. இரண்டாவது தாடி(ரிப் கிர்பி)  
19.கடத்தல் மன்னர்கள்(காரிகன்) 
20.மர்மப் புதையல்(சிஸ்கோ)
21.காணாமற் போன கவர்ச்சி நட்சத்திரம்(ரிப் கிர்பி)
22.திருடர்களுக்குள் திடீர் ரகளை(ஜானி ஹாஸார்ட்)
23.சுட்டவன் யார்?(ரிப் கிர்பி) 
24.மூழ்கிய கப்பலில்(காரிகன்)
25.ரத்தப் பூ பூத்த சிகரத்தில்(ஜானி ஹாஸார்ட்)
26. நடிகர் கடத்தப்பட்டார்(ஜானி) பின் குறிப்பு...
மாலைமதி சித்திரக்கதைகளில், உள்ளூரில் உருவாக்கப்பட்ட சித்திரக் கதைகளைப் பற்றிய விபரங்கள் இங்கே குறிப்பிடப்படவில்லை. அயல்நாட்டுச் சித்திரக்கதைகளின் குறிப்புகள் மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.    

33 comments:

 1. வாவ்... அருமையான பதிவு! ”தமிழ் காமிக்ஸ் டிக்‌ஷ்னரி” சார் நீங்க! சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. ஏன் சார் இந்த கொலைவெறி? பாராட்டுக்கு நன்றி!

   Delete
 2. சிறப்பான பணி! வெறும் பட்டியலோடு நிறுத்திவிடாமல் அதற்கான அட்டைப் படங்களையும் அளித்திருக்கும் உங்கள் முயற்சியும் உழைப்பும் காமிக்ஸ் உலகில் உங்களுக்கென தனித்த அடையாளத்தைக் கொடுக்கிறது. பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி சிஸ்டர்... ஆனால் என்னை விட சிறப்பான பணி செய்தவர்கள், செய்து வருபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

   Delete
  2. aanaalum unga muyarchigal attakaasam thalaivare!

   Delete
 3. சூப்பர் சார்.. உங்களைப்பார்த்தா பெருமையாவும் இருக்கு பொறாமையாவும் இருக்கு.. கலக்குங்க..

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைத்தது. உண்மையிலியே எனக்குப் பெருமைதான்.

   Delete
 4. ஸ்கேன் பண்ண வாய்ப்பிருந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை வாழ்த்தும் !!

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. அனைத்து மாலைமதி காமிக்ஸ்களையும் ஒருசேர ஒரே இடத்தில் பட்டியலுடன் பார்க்கும் வாய்ப்பு இன்று தான் கிட்டியது, நண்பரே.

  கலக்கல் பதிவு... அப்படியே லோக்கல் கதை பட்டியல்களையும் சேர்ப்பித்தால் பதிவு பூர்த்தி பெறும் :)

  ReplyDelete
  Replies
  1. முழுமையான லோக்கல் கதை வரிசைப்பட்டியல் கிடைத்ததும். அதையும் வலையேற்றி விட்டால் போச்சு...

   Delete
 7. நல்ல பதிவு, கலீல்!!! "நடிகர் கடத்தப்பட்டார்" கதை ராணி காமிக்ஸில் அதே அட்டை ஓவியத்துடன், "குள்ள நரியில் ஒரு கள்ள நரி" என்று வந்தது! அந்த அட்டையும் சரி, தலைப்பும் சரி இன்றும் மனதில் நிற்கிறது! அதே போல சுட்டவன் யார் & குகையில் ஒரு பெண் இவற்றின் அட்டைகளையும் ராணி காமிக்ஸில் பார்த்த ஞாபகம்! :) மாலைமதி காமிக்ஸில், ராக்கெட் ராட்சசன் மட்டும் என்னிடம் இருக்கிறது (என்பதாய் ஞாபகம்!).

  ReplyDelete
  Replies
  1. நன்றி கார்த்திக்! தாங்கள் கூறுவதும் உண்மைதான். மாலைமதியில் வெளிவந்துள்ள சில கதைகள் ராணி காமிக்ஸ், திகில் காமிக்ஸ், முத்து காமிக்ஸிலும் வெளிவந்துள்ளது. மாலைமதி காமிக்ஸில் வெளிவந்துள்ள ராக்கெட் ராட்சஸன் புத்தகம் உங்களிடம் உள்ளதா? ராக்கெட் ராட்சஸன் ஜாக்கிரதை!:)

   Delete
 8. பொறமைப்படுவதுடன் ஒரு நீண்ட பெருமூச்சு....
  போங்கப்பா..
  Super khaleel Hai..

  ReplyDelete
 9. எல்லோரும் உங்கள பாராட்டுவதை பார்த்தால் எனக்கு ஜலத்ோஷம் பிடிக்கும் போல இருக்கு. அவ்ளோ ஐஸ்....:) வாழ்த்துக்கள் நண்பரே. தொடரட்டும் உங்கள் சேவை.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாளா செம ஜலதோஷம் தான் கோகுல். இன்று பரவாயில்லைதான் ஹி ஹி :)

   Delete
 10. 'மாலைமதி' என்பது நாவலாக மட்டுமே பரிட்சயமென்பதால், இதன் காமிக்ஸ் பரிணாமங்கள் எனக்கு அரசல் புரசலாக காதில் விழுந்த சங்கதி மட்டுமே! தமிழில் இப்படியெல்லாம்கூட முயற்சி நடந்திருக்கிறதா என ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு வரலாற்று(!) பதிவு!

  என் கண்ணுக்கும், கருத்துக்கும் இது ஒரு வித்தியாசமான விருந்து. நன்றி கலீல் அவர்களே! :)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கு நன்றி விஜய்! உங்களைப் போன்ற நண்பர்களுக்கும், எனது சிறிய பங்களிப்பு சென்றடைவது
   பெரும் மகிழ்ச்சியே.

   Delete
  2. இன்று காலை மீண்டும் ஒரு முறை படித்தேன்...
   உண்மையிலேயே ஒரு அருமையான பதிவு.

   Delete
 11. Replies
  1. உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் நன்றி ஜான் சார் :)

   Delete
  2. intha anaiththu booksgalum oru naal veliyil varum naale namma pon naalaaga irukkum ji! oru kai parkkalam ready ji!

   Delete
 12. இன்று காலை மீண்டும் ஒரு முறை படித்தேன்...
  உண்மையிலேயே ஒரு அருமையான பதிவு.

  ReplyDelete
 13. வாவ் ....சூப்பர் சார் .....

  நான் ஒரே ஒரு மாலை மதி காமிக்ஸ் மட்டுமே பார்த்தும் ,வைத்தும் இருந்தேன் .அதையும் ஒரு நண்பர்க்கு கொடுத்து விட்டேன் .முழு மாலை மதி காமிக்ஸ்களின் அட்டை படத்தை இப்பொழுது தான் பார்கிறேன் .நன்றி சார் .

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி பரணிதரன் அவர்களே!

   Delete
 14. வழக்கம் போல் ஆச்சர்யபடுத்தி விட்டீர்கள் கலீல். உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி தகவல்கள் எப்பிடி கிடைக்குது ? ஆச்சர்யம் தான் .

  ReplyDelete