2014 அட்டவணையும்- சில கருத்துக்களும்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள 2014 அட்டவணை பலருக்கு ஏமாற்றத்தையே தரக் கூடியதாக அமைந்துள்ளது. 2014- ல் வெளிவருவதாக சொன்ன திகில் நகரில் டெக்ஸ், மர்ம மனிதன் மார்ட்டீன், சி.ஐ.டி ராபின், டேஞ்சர் டயபாலிக் , ஜெஸ்லாங் போன்ற கதைகளுக்கு இந்த வருடமும் கல்தா கொடுக்கப் பட்டுள்ளது. கார்ஸனின் கடந்த காலம் கதை வெளிவந்து சில வருடங்கள் தான் ஆகிறது. அதுவும் கருப்பு, வெள்ளையில் வெளிவந்த இதழ் அனேகம் பேரிடமும் இருக்கக் கூடியது, அதை திரும்பவும் கருப்பு வெள்ளையில் (வண்ணத்தில் போடாமல்) போடுவது ஏனென்று புரியவில்லை. அதே போல் பூம் பூம் படலம், நிழல் 1 நிஜம் 2 கதையும் சமிபத்தில் வெளிவந்த கதைதான், இதற்கு பதில் மினி லயனில் வெளிவந்துள்ள புரட்சித்தீ, பயங்கரப் பயணம், நீலப்பேய் மர்மம், ராஜா ராணி ஜாக்கி, விண்வெளியில் ஒரு எலி, மாயத்தீவில் அலிபாபா, வெள்ளைப் பிசாசு, நடுக்கடலில் எலிகள், ஒரு நாணயப் போராட்டம், கொள்ளைக்கார கார் போன்று கிடைக்காத அரிய கதைகளை வண்ணத்தில் மறுபதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருந்திருக்கும், கமான்சே க...