கானக வீரன் டார்ஜான் - 2



மேலை நாடுகளில் புகழ் பெற்ற சித்திரக்கதைகளில் டார்ஜான் கதைகளும் ஒன்றாகும். தமிழில் ரத்னா காமிக்ஸ், வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ்,
ரத்ன பாலா, என ஒரு சில இதழ்களில் டார்ஜான் கதைகள் வெளிவந்திருந்தாலும் ஏனோ டார்ஜான் கதைகள் தமிழில் 
அவ்வளவாக பிரபலமாகவில்லை. தமிழில் வெளிவந்துள்ள டார்ஜான் கதைகளில் ஒன்றை ஏற்கனவே இங்கே தொகுத்துள்ளேன். 

இரண்டாவதாக வைரக் கடத்தல்காரர்களை இன்று தொகுத்துள்ளேன், படித்து விட்டு உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள், மற்றும் கண்மணி காமிக்ஸில் வெளிவந்திருந்த எம்ஜியார் சித்திரக்கதைகள் விரைவில்  புத்தகங்களாக ( மறுபதிப்பாக ) வெளிவரப்போவதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். புத்தக வடிவில் வருவது எனக்கும் மகிழ்ச்சியே.  
அதனால் தான் எம்ஜியார் (கண்மணி) காமிக்ஸின் மூன்றாவது இதழை இங்கே தொகுக்கப்படவில்லை. நன்றி…      




































  பின் குறிப்பு -


இம்மாதம் (ஆகஸ்ட்) வெளிவந்துள்ள லயன் மேக்னம் ஸ்பெஷல் பல தரப்பட்ட வாசகர்களையும் ( சில குறைகளைத் தவிர்த்து) திருப்தி படுத்தியிருக்கும் என்றே நினைக்கிறேன். அந்தளவுக்கு புத்தகத்திற்கும், பேக்கிங்கும் நிறைய மெனக்கெட்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
வழக்கம் போல டெக்ஸ் கதை அதிரடியிலும்,காமெடியிலும், 
வண்ணத்திலும் கலக்கியுள்ளது. மற்றும் நீண்ட இடைவெளிக்குப்
பிறகு வந்துள்ள மார்ட்டின்& ராபின் கதைகள் மனதுக்கு ஒருவித சந்தோஷத்தை அளிக்கின்றன. ராபின் கதை வண்ணம் மட்டும் சற்று

டல்லாக இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி டைலன் டாக், டைகர், லக்கிலுக்,ரிண்டின் கேன், ஜூலியா என நீண்ட பட்டாளத்துடன் L,M,S வெளிவந்து காமிக்ஸ் வாசகர்களுக்கு நீண்ட ஒரு மகிழ்ச்சியை தந்துள்ளது. இருந்தும் ரிண்டின் கேன் & லக்கிலுக் ஆகிய இரு  கதைகளையும் தூக்கிவிட்டு, அதற்கு பதில் மார்ஷல் டைகர் கதையில் மிச்சம் உள்ள இரு கதைகளையும் போட்டிருந்தால், உண்மையிலேயே தல, தளபதி ஸ்பெஷலாக மாறியிருக்கும் இந்த L,M,S இதழ்...

மற்றும் சென்ற மாதம் வெளிவந்த இரத்த படலத்தின் ஒன் ஷாட் ஸ்டோரிகளில் ஒன்றான விரியனின் விரோதி (மங்கூஸ்)
 பட்டையக் கெளப்பியது போல். அடுத்த மாதம் வரவிருக்கும் காலனின் கைக்கூலியும் ( ஸ்டீவ் ரோலாண்ட்) மிகுந்த ஆவலைக் கிளப்பியுள்ளது.      










Comments

  1. கானக வீரன் டார்ஜான் - 2 சூப்பர் கருத்துக்கள் விரைவில்....

    ReplyDelete
  2. அருமை நண்பரே .....வாழ்த்துக்கள் ....நன்றிகள்

    ReplyDelete
  3. அருமை நண்பரே மிக்க நன்றி! அட்டகாசமான பதிவு!

    ReplyDelete
  4. சூப்பர்!!உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. நன்றி திருமாவளவன் சார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்