வேதாள மாயாத்மா
சித்திரக்கதைகளில் வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவியை அறியாதவர்கள்
இருப்பது கடினமே! 1936 - ம் ஆண்டில் லீ ஃ பாக் என்பவரால் வேதாளர் உருவாக்கப்பட்டவர்.
உலகம் முழுவதும் உள்ள பல சித்திரக்கதை நாயகர்களுக்கு
மத்தியில் இன்றும் அளவிட முடியாத வாசகர்களை பெற்றுள்ளார். 25 க்கும் மேற்பட்ட மொழிகளில்
இவரின் சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளன. தமிழில் இந்திரஜால் காமிக்ஸ், வித்யார்த்தி
மித்ரம் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் குமுதம், மாலைமலர், இன்னும்
சில நாளேடுகளில் தொடராகவும் வெளிவந்துள்ளார். 1975 – ம் ஆண்டில் வித்யார்த்தி மித்ரம்
காமிக்ஸில் வெளிவந்த வேதாளரின் கதைகளில் ஒன்றான
கப்பல் கில்லாடிகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். படித்து விட்டு உங்கள் எண்ணங்களை மறவாமல்
தெரியப்படுத்துங்கள். நன்றி!
வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸில் வெளிவந்துள்ள கப்பல் கில்லாடிகள்
( 1975 - ம் வருடம் செப்டம்பர் மாதத்தில், வேதாளர் கதைகளில் இரண்டாவது கதையாகவும் ) , முத்து காமிக்ஸில் விசித்திரக் கடற்கொள்ளையர் ( 1977 - ம் வருடம் அக்டோபர் மாத இதழாக 67 - வது வெளியீடாகவும் )
ராணி காமிக்ஸில் கடல் கோட்டை ( 1994 - ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 244 வது இதழாகவும் வெளிவந்துள்ளது ) என்ற தலைப்புகளில் வெளிவந்துள்ளன. அதன் முகப்பு அட்டை படங்கள் கீழே உள்ளன.

ஜனவரி 2015 - ல் வெளிவரப்போகும் மின்னும் மரணம் கம்ப்ளீட் சாகா,
11 இதழைக் கொண்டு வெளிவருகிறது. 500 வண்ணப் பக்கங்களுடன் 925 விலையில் ( கூரியர் சேர்த்து) வெளிவருகிறது! முன் பதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. முன் பதிவு செய்யாத நண்பர்கள் விரைவாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!
நன்றி நண்பரே .....படித்து விட்டு வருகிறேன் .
ReplyDeleteசிறப்பான தெளிவான ஸ்கேன்கள் கண்ணுக்கு விருந்தாக உள்ளன.நான் பிறப்பதற்கு முன்பு வெளிவந்த சித்திரக் கதையை ரசிக்கும் அனுபவத்தை அளித்த கலீல் சாருக்கு நன்றிகள் பல.
ReplyDeleteமுத்து காமிக்ஸ் அட்டைப்படம் சிறப்பாக உள்ளது.மின்னும் மரணம் இந்த மாதம் முன்பதிவு செய்து விடுவேன்.
மாயாவி பற்றிய தகவல்கள் எனக்கு புதிது. நன்றி சார்.,
நன்றி திருமாவளவன் சார். இதைப் போன்று நிறைய பேர் பார்த்திடாத, படித்திடாத கதைகளை வலையேற்றத்தான் முயன்று வருகிறேன். உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவோடு இம்முயற்சிகள் தொடரும்.
Deleteவணக்கம் நண்பரே,
ReplyDeleteஎனது காமிக்ஸ் உலகின் என்றும் கம்பீரமாக வலம் வரும் வேதளரை
பற்றி நீங்கள் 2010 ம் வருடம் வலைத்தளத்தில் பதிவு செய்யும்போது
முதல் படமாக வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸின் இந்த 'கப்பல் கில்லாடிகள்' அட்டைபடத்தை வெளியிடிருந்தது பசுமையாக நினைவு
வருகிறது நண்பரே...!
கிட்டத்தட்ட 39 வருடங்களுக்கு முன் வந்த 'கப்பல் கில்லாடிகள்' காமிக்ஸ்ஐ நேற்று வந்ததுபோலவே அவ்வளவு தெளிவாக ஸ்கேனில்
பார்த்தவுடன் உற்சாகம் ஒருநிமிடம் மூச்சைப் அடைத்ததுவிட்டது
நண்பரே..!
இந்த பதிவின் சுவை கூட்ட...முத்துகாமிக்ஸ்ல் 1977 ம் வருடம் அக்டோபர்
மாத இதழாக 67-வது வெளியீடாகவும்,ராணிகாமிக்ஸ்ல் 1994 ம் வருடம்
ஆகஸ்ட் 2வது இதழாக 244-வது வெளியீடாகவும் வெளிவந்தன என்ற கூடுதல் தகவல்களை கொடுத்ததால் கொஞ்சம் சுவை கூடும்...!!!
PHANTOM THE LEGEND-பிளாக்கில் முத்துகாமிக்ஸ்,ராணிகாமிக்ஸ்
இந்த கதை பற்றிய விவரம் ஸ்கேன்கள் வந்திருந்தாலும் மிகமிக
அறிய இதழான வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸில் வெளிவந்த வேதாளரின் கதைகளில் முழு பதிவுகள் பார்ப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சி தான் நண்பரே...!
உங்கள் பதிவு முழுமை பெற இந்த பதிவின் அட்டைபடங்களின் உள்
ஸ்கேன்களையும் போட்டால் நன்றாகஇருக்கும் என்பதால் உங்கள் இன்பாக்ஸில் உள்அட்டை ஸ்கேன்களை அனுப்பியுள்ளேன் நண்பரே...
முடிந்தால் அப்டேட் செய்யுங்கள்...!!!
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே!
Deleteமாயாவி சிவா சார், நீங்கள் கூறும் இரண்டு பக்கங்களும் என்னிடமே உள்ளன. தேவையில்லாத பக்கங்களாக தெரிந்ததால் அதை அப்லோட் செய்யவில்லை. ஆனால்,
Deleteநீங்கள் கூறும் கருத்தும் நியாயமாக உள்ளதால் அந்த இரண்டு பக்கங்களையும் இன்று சேர்த்து விடுகிறேன். உங்கள் கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி சார்.
தமிழ்நாட்டில் காமிக்ஸ் வியாபாரம் சூடாக நடப்பதை கேரளாவில்உள்ள பதிப்பகத்தினர் 1975-ல் வெளியிடவை, வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ்....என்ற விவரங்கள் உள்அட்டையில் காமிக்ஸ் பிரியர்கள்தெரிந்து கொள்ளும்படி பதிவிட்டதற்கு நன்றிகள் நண்பரே...!
Deleteவித்யார்த்தி மித்ரம் நிறுவனத்தினர் மருத்துவதுறைக்கு வேண்டியஉபகரணங்களை விற்பனை செய்துவந்தவர்கள் என்ற குறிப்பையும்பின்அட்டையில் பார்க்கலாம்... (முத்துகாமிக்ஸ் மலையாளத்தில் அப்போது வெளியிட்டதன் விளைவோ....?)
கதை நன்றாக இருந்தது சார் ...இது....மற்றும் ராணி காமிக்ஸில் படித்தால் சுமாராக தோன்றும் மாயாவி முத்து காமிக்ஸில் "வேதாளர் " ஆக படிக்கும் போது சும்மா பட்டையை கிளப்புகிறார் :-)
ReplyDeleteஉண்மைதான் பரணி சார். முத்து காமிக்ஸில் வெளிவந்த வேதாளர் கதைகள் அனைத்து ( விண்வெளி வீரன் எங்கே? இது மட்டும் மிக சுமாரான கதை) கதைகளும் மிக அற்புதமான கதைகள். அதுவும் முகமூடி வேதாளன், ஜும்போ, சூனியக்காரியின் சாம்ராஜ்யம், கீழ்த்திசை சூனியம் போன்ற கதைகள் மறக்க இயலாத கதைகள்.
Deleteநண்பர் கலீல் .....,உங்களுடைய முயற்சிக்கு நன்றிகள் .நான் சின்ன வயதில் படித்தது .மீண்டும் இதை பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை .மிகவும் மகிழ்வோடு எனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்
ReplyDelete
ReplyDeleteநன்றி மாதவன் சார். நான் ரசித்த சில விஷயங்களை. உங்களைப் போன்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதே ஒரு தனி சுகம்தான்.