கழுதையின் அடிச்சுவட்டிலே - ரிப் கெர்பி

எனக்குப் பிடித்த சித்திரக்கதை நாயகர்களில் ரிப் கெர்பியும் ஒருவர். ஆரம்ப காலங்களில் முத்து காமிக்ஸ், மாலைமதி, இந்திரஜால் காமிக்ஸில் ரிப் கெர்பி கதைகள் வெளிவரும் போது, நான் ரிப் கெர்பி கதைகளை படித்ததில்லை. 1990 களில் லயன் காமிக்ஸில் வெளிவந்த பொக்கிஷம் தேடிய பிசாசு, ஆப்ரேஷன் அலாவுதீன், மரண மாளிகை போன்ற கதைகள் வெளிவரும் போதுதான் முதன்முதலாக படிக்க ஆரம்பித்தது. அப்போது படித்ததுமே எனக்கே ரிப் கெர்பி & காரிகன் கதைகள் அவ்வளவாக பிடிக்கவில்லை. பின்னாளில் தான் இவருடைய மிக யதார்த்தமான, அலட்டல், ஆர்ப்பாட்டமில்லாத இவருடைய துப்பறியும் பாணி மிகவும் பிடித்ததுப் போனது. பிறகு தான் இவருடைய கதைகள் அனைத்தையும் தேடிப் படிக்கவும், சேகரிக்கவும் ஆரம்பித்தேன்! இன்னமும் அந்த தேடல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! ரிப் கெர்பி கதைகள் தற்போது தமிழில் வெளிவராதது வருத்தமே! இனி வரும் காலங்களிலாவது இவரது கதைகள் தொடர்ந்தால் சந்தோஷமே! !