2018 அட்டவணையும் சில கருத்துக்களும்
அட்டவணை.
டியுராங்கோ பலரின் எதிர்பார்ப்பில் இருக்கும் நாயகர், புதியவர் ட்ரெண்ட்டை வரவேற்பதில் தவறில்லை. லார்கோ, ஷெல்டன், ரிப்போட்டர் ஜானி, ஜில் ஜோர்டான் போன்றோரும் எதிர்பார்ப்பு நாயகர்கள்தான். மாடஸ்டி ப்ளைஸி, லேடி எஸ்க்கு ஒரு ஸ்லாட் ஒதுக்கியது போல் ஜூலியாவுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். ராபின் & மார்ட்டீனுக்கு இன்னொரு வாய்ப்பும் கூடுதலாக வழங்கிருக்கலாம். டெக்ஸ் வில்லர் சென்ற வருட கதைகளில் சில கதைகளில் முத்திரை பதிக்க தவறி விட்டார், அந்தக்குறையை இந்த வருடத்தில் போக்கிடுவார் என்றே தோன்றுகிறது. 70 வது ஆண்டு மலர் சிறப்புமிக்க ஆண்டாக தோன்றுமின்றே தோன்றுகிறது. அதுவுமில்லாமல் சந்தாதாரர்களுக்கு கொடுக்கும் இலவச 6 டெக்ஸ் கதைகளையும் மொத்தமாக ஒரே இதழாக தர முயற்சித்திருக்கலாம். பாதுகாக்கவும் வசதியாக இருக்கும், அந்த தொகுப்பையே டெக்ஸ் சிறுகதை தொகுப்பு என்ற பெயரில். 150 விலையில் கடைகளிலும் விற்பனை செய்யவும் ஏதுவாகவும் இருக்கும்.டைகர் ரசிகர்களுக்கான ஒரே திருப்தி தோட்டா தலை நகரம் (வண்ண மறுபதிப்பு) மட்டுமே.
தோர்கல் கதை ஒரு நெடுந்தொடர் என்பது பலருக்கு தெரியும், அதனாலேயே அதை நிறைய பேர் வாங்குவதும் இல்லை, அப்படியே சிலர் வாங்கினாலும் படிப்பதும் இல்லை கமான்சே கதை போன்று இதுவும் தொடர்ந்து வருமா? இல்லை விற்பனையில்லை என்ற காரணத்தினால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விடுமா என்ற சந்தேகத்தினாலேயே பலர் தோர்கல் புத்தகத்தை வாங்குவதும் இல்லை படிப்பதும் இல்லை. இந்த சூழ்நிலையில் இவருக்கு நான்கு கதைகளை போட்டு ஸ்பெஷல் ஆல்பம் வெளியிட்டால் விற்பனையாகுமா என்றால் கேள்விக்குறியே? இரண்டு கதைகளோடு நிறுத்திக் கொண்டு வேறு ஏதாவது நாயகரின் இரு கதைகளை இணைத்து போடலாம். கார்ட்டூன் நாயகர்களில் லக்கிலுக்,சிக்பில் கதைகள் எப்பவுமே சோடை போகாத நாயகர்கள்தான், அதற்காக சமீபத்தில் வெளிவந்த லக்கிலூக்கின் மேடையில் ஒரு மன்மதன் தேவையற்றது, அதற்கு வேறு ஏதாவது லக்கிலூக் கதை சேர்த்திருக்கலாம்.
கார்ட்டூன் கதைகளில் பலர் கண்டதும் பீதியடைவது ஸ்மர்ப்,ரிண்டின்கேண் கதைளைத்தான் இதை தெரிந்தும் இவர்களை தொடர்வது இன்னும் பீதியைக் கெளப்புகிறது. மற்ற மறுபதிப்பு கதைகள் ஓகேதான் அதுவும் சாகாஸ வீரர் ரோஜரின் மர்மக்கத்தி கிளாசிக் கதை. இன்னொரு கிளாசிக் மறுபதிப்பு என்றால் அது பவளச்சிலை மர்மம்தான் இதிலும் ஒரு அதிருப்திதான், ( டெக்ஸ் வண்ண மறுபதிப்பென்றாலே அதிருப்திதான் நிலவும் போல) பவளச்சிலை மர்மம் கதைகளில் சித்திரங்களும் சரி, கதையும் சரி பட்டாசு ரகம் அதைப்போய் நிலவொளியில் நரபலி சைஸில் கொண்டு வருவதை ஜீரணிக்கவே முடியவில்லை வழக்கமாய் வெளிவரும் வண்ண டெக்ஸ் சைஸிலோ அல்லது பெரிய சைஸிலோ இக்கதை வெளிவந்தால் பட்டாசாகவே இருக்கும்.
மும்மூர்த்திகளின் மறுபதிப்பு கதைகள் வளவளன்னு நீண்டுச் செல்வது பலருக்கு அதிருப்தியையே ஏற்படுத்துகிறது. ஒன்று ஒன்றாக போட்டு வருவதற்கு பதிலாக இரண்டு, மூன்று கதைகளாக சேர்த்து போட்டு
சீக்கிரமாக முடித்து விடப் பார்க்கலாம்.
இறுதியாக வெளிவரப்போகும் இரத்தப்படலம் மெகா வண்ண இதழை A4 சைஸில் வெளியிட முயற்சிக்கலாம், இந்த சைஸில் வெளிவந்தால் நாவல் படிக்கும் எண்ணம் வராமலிருக்கும் :) 

இம்மாதம் (நவம்பர்) வெளிவந்துள்ள கதைகள் -
அடுத்த மாதம் வெளீவரப்போகும் கதைகள் -
இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் :(
2018 அட்டவணையின் PDF தேவைப்படுவோர்கள் கீழே உள்ள லிங்கிற்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும். நன்றி
https://drive.google.com/open?id=1Xa9NSwzQEadov9oL8fVMwUiWJNaEnZzPNA
அருமையான பதிவு நண்பரே!
ReplyDeleteகதைத் தேர்வுகள் குறித்த உங்களுடைய கருத்திலும், ஆதங்கத்திலும் நியாயம் தெறிக்கிறது!
நன்றி நண்பரே!
DeleteNice review
ReplyDeleteநன்றி ப்ரோ!
Deleteநன்றாக அலசியிருக்கிறீர்கள்.. மகிழ்ச்சி தோழர்..
ReplyDeleteநன்றி ஜி!
DeleteI appreciate your enthusiasm about comics bro,
ReplyDeletethank you bro!
Deleteஅலசல் நன்று ண்ணா
ReplyDeleteநன்றி ப்ரோ
Deleteஅலசல் சிறப்பு, தோர்கல் கதை நல்லத்தானே இருக்கு.
ReplyDeleteகமான்சே இல்லாதது மிகுந்த வருத்தம்.
ரின்டின்கேன், ஸ்மார்ப் தேவையில்லை.
இளவரசி கதை இரண்டு வெளியிட்டு இருக்கலாம்.
தோர்கல் கதை சிறப்பாகத்தான் உள்ளது ப்ரோ! அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், விற்பனை என்று வரும் போது ஒரு தொடர்கதை ஒரு ஸ்பெஷல் இதழுக்கு தாக்குப் பிடிக்குமா என்பதே எனது கேள்வி?
Deleteதொர்கல் மிக அருமையான தொடர்,நெடுங்காலம் தொடர வேண்டும்!
ReplyDeleteதோர்கல் கதை தொடர்ந்து வர வேண்டுமென்பதே எனது ஆசையும்தான் ஜி
DeleteSema ji .. liked your post
ReplyDeletethanks ji
Deleteஅருமையான அலசல்...எனக்கும் சில சந்தேகங்கள் இருக்க தான் செய்கிறது. .ஜுலியா மேஜிக் விண்ட் போன்றோர் தனியாக சாதிக்க முடியாத போது ஈரோட்டில் இத்தாலி,லயன் 300 இதழ் போன்று டெக்ஸ் உடன் களம் இறக்கலாமே...ஏன் செய்வது இல்லை?
ReplyDeleteசமீபத்தில் படித்த கதைகளில் தோர்கல் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்.அவரது கதைகள் சீராக வந்தால் சூப்பர் .இன்னும் கொஞ்சம் அதிக ஸ்டாட் ஒதிக்கினால் சூப்பராக இருக்கும்.
டெக்ஸ் மறுபதிப்பில் 112 பக்கம் 120 ரூபாய் க்கு நரபலி சைஸில் வர வாய்ப்பு இல்லை.இது ஏதோ தொழில் நுட்ப கோளராக தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ....
கார்ட்டுனில் நீங்கள் ஆசை பட்டது போல் ஸ்மர்ப்,ரின்டின் போன்றவற்றை நீக்கி விட்டு அலிபாபா,சுஸ்கி விஸ்கியை தரலாம்.
டெக்ஸ் கலர் மொத்தம் 180 ரூபாய் வருகிறது.அதை 150 க்கு கேட்கிறீர்கள்.ஆசிரியர் தருவாரா என்ற கேள்வி எழுகிறது.(தொடரும். .நேரம் இருந்தால்)நன்றி வணக்கம்..