கேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)கேட்கும் தொலைவில் கடல் இருந்தும் கடல் பயணியாக நானில்லை. இதனாலேயோ கழுகு கப்பலில் ( cormoran - நீர்க்காகம்) புவி சுற்றும் ஒரு முரட்டு பிடிவாத கேப்டனின் சாகசங்கள் என் மனதை மிகவும் கவர்ந்து விட்டன.
     
முதன் முதலில் கருப்பு வெள்ளை என இரு வண்ணங்களில் தான் நான் அவரை அறிந்தேன். அவ்விரு வண்ண  சித்திரங்களில் உள்ள சாகசங்கள் என் மனதில் அப்போது பல நிறங்களில் நிரவி கிடந்தது. நான் போகாத இடங்களுக்கு கழுகு என்னை அழைத்து சென்றது போலிருந்தது. எரிமலை, நச்சரவங்கள் சூழ்ந்த சதுப்பு நிலக்காடு, உடல் உறைய வைக்கும் பனி, எரிய வைக்கும் பாலைவனம், உறைய போகும் கடலில் நேரத்துடனான பந்தயம், உயிரை குடிக்கும் முட்புதர்கள் என எத்தனை இடங்கள். மூளை மழுங்க வைக்கும் வகுப்பறைகளிலும், உறவினர் வெறுப்பேற்றும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் முகத்தில் புன்னகையுடன் கழுகு கப்பலின் குழுவினரில் ஒருவனாக பயணித்தது போன்ற அனுபவத்தை இச்சிரத்திரக்கதைகள் மூலமாக உணரச் செய்தது.

பொதுவாக புத்தகங்கள் எல்லாம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக மட்டும் இருக்கும். ஆனால் பிரின்ஸ் கதைகளில் சமூக உணர்வு, தியாகம், விட்டுக் கொடுத்தல், மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை இவைகளையே அதிகமாக கலந்து இருப்பார் கதாசிரியர் க்ரெக்.  பிரின்ஸ் கதைகளை நான் விரும்பி படிக்க 
இதுவும் ஒரு காரணம்.

பிரின்ஸ் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களான பார்னே, ஜின், வாங் ஓ, மூக் மாஞ்சு, லோபோ, எலிஜாண்டோ மற்றும் கரடிக்குட்டிகளும் கூட, மறக்க முடியாத கதாப்பாத்திரங்களாகவே நினைவில் நிற்கின்றன். அந்தளவுக்கு ஓவியர் ஹெர்மனின் பங்களிப்பும் அபாரமானது.

பெல்ஜியத்தில் உருவான இவரது சாகஸக்கதைகள் 
1966 லே உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழ் வாசகர்களுக்கு 
அறிமுகமானது என்னவோ 1986 இல்தான். தமிழில் வெளிவந்துள்ளன, வெளிவந்துள்ள, வெளிவராத இவரது கதைகளின் தொகுப்பை பற்றி கீழே காணலாம்!

பிரெஞ்சு மொழியில் வெளிவந்துள்ள பிரின்ஸ் கதைகளின் 
(19 இதழ்கள் ) விவரங்கள்!


 

தமிழில் வெளிவந்துள்ள பிரின்ஸ் கதைகளின் விபரங்கள்!
திகில் காமிக்ஸில் வெளிவந்துள்ள கதைகள்!

1.பனிமண்டலக் கோட்டை (வெ.எண் - 11, வருடம் 1986)
2.பயங்கரப் புயல் (வெ.எண் -16. வருடம் - 1987)
3. திகில் கோடைமலர் (வெ.எண் - 17. வருடம் - 1987)
மரண வைரங்கள் என்ற கதை இந்த இதழில் வெளிவந்ததுள்ளது.4. சைத்தான் துறைமுகம் (வெ.எண் 
- 22 வருடம் - 1988}


.  
5. பற்றி எறியும் பாலைவனம் (வெ.எண் - 27 வருடம் - 1988} 
6. நதியில் ஒரு நாடகம் (வெ.எண் - 36 வருடம் - 1988}

7. நரகத்தின் எல்லையில் (வெ.எண் - 41 வருடம் - 1989}


8. கொலைகாரக் கானகம் (வெ.எண் - 43 வருடம் - 1989}


9. சாகஸ வீரன் பிரின்ஸ் (வெ.எண் - 47 வருடம் - 1990}
பொடியனைக் காணோம், வினை வேடிக்கையாகிறது 
ஆகிய இருகதைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளது


.10. டிராகுலா கோட்டை (வெ.எண் - 48. வருடம் - 1990)
   இந்த இதழில் ஒரு டைரியின் கதை என்ற சிறுகதை 
   இடம் பெற்றுள்ளது.

11. கொலைகாரக் கோமாளி (வெ.எண் - 49. வருடம்- 1990)
   இச்சித்திரக்கதை புத்தகத்தில் விளையாட்டு வினையாகும் 
   என்கிற சிறுகதை வெளிவந்துள்ளது..
12.எரிமலைத் தீவில் பிரின்ஸ் (வெ.எண் - 52. வருடம் - 1991)
13. காணாமல் போன கழுகு (வெ.எண் - 54. வருடம் - 1991)

14. சைத்தான் ஜெனரல் (வெ.எண் - 58. வருடம் - 1993)

 லயன் காமிக்ஸில் வெளிவந்துள்ள பிரின்ஸ் கதைகளின் விவரங்கள்!
1. 1987 இல் வெளி வந்த லயன் சூப்பர் ஸ்பெஷல் (வெ.எண்- 42) 
  இதழில் விசித்திரப் பாடம் என்ற சிறுகதை வெளிவந்துள்ளது.
2. ஒரு திகில் பயணம் (வெ.எண் - 101. வருடம் - 1994)
3. பிரின்ஸ் இன் ஆப்பிரிக்கா (வெ.எண் - 107. வருடம் -1994)4. லயன் டாப் டென் ஸ்பெஷல் (வெ.எண் - 112. வருடம் - 1995)      இந்த இதழில் 
நியுயார்க்கில் பார்னே என்ற சித்திரக்கதை          வெளிவந்துள்ளது.5. மேகக் கோட்டை மர்மம் (வெ.எண் - 125. வருடம்- 1996)          இச்சித்திரக்கதையில் இருளின் சாம்ராஜ்யம் என்ற 

  சிறுகதை வெளிவந்துள்ளது.

6. புரட்சித்தலைவன் பிரின்ஸ் (வெ.எண் - 137. வருடம் - 1998)  7.  கானகத்தில் கலவரம் (வெ.எண் - 142. வருடம் - 1998)             இச்சித்திரக்கதை புத்தகத்தில் உலகம் சுற்றும் கழுகு 
     என்கிற சிறுகதை வெளிவந்ததுள்ளது.
  8.  கானகத்தில் களேபரம் ( வெ.எண் - 210. வருடம் - 2012)  .


9. பரலோகப் பாதை பச்சை (வெ.எண் - 213. வருடம் 2012)
 
  1986 இல் ஆரம்பித்த இவரது கதைகள் முதலில் கருப்பு       வெள்ளையில் வெளிவந்த இதழ்கள் தற்போது வண்ணத்தில்   மறுபதிப்பாகவும் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதைப்
  பற்றிய விவரங்கள்:
  1. 2007 இல் திரு. ராகுலன் என்பவர் திகில் காமிக்ஸில்
    வெளிவந்த பனிமண்டக் கோட்டை என்கிற தலைப்பில்            வெளிவந்த புத்தகத்தை பனிமலைக் கோட்டை என்கிற
    தலைப்பில் ஸ்டார் காமிக்ஸில் வண்ண மறுபதிப்பு
    புத்தகமாக வெளியிட்டுள்ளார். 2. பற்றி எறியும் பாலைவனம் & நரகத்தின் எல்லையில் 
   ஆகிய இரு கதைகளை (வெ.எண் - 5. வருடம் - 2013)  
   சன்ஷைன் லைப்ரரியில் வண்ணத்தில்  மறுபதிப்பு 
   கதைகளாக வெளியிடப்படுள்ளது.


    3. பயங்கரப் புயல் (வெ.எண் - 11. வருடம் - 2014) 
     மறுபதிப்பாக வண்ணத்தில் வெளிவந்துள்ளது!
     4.  சைத்தான் துறைமுகம் (வெ.எண் - 254. வருடம் - 2015)           மறுபதிப்பாக வண்ணத்தில் வெளிவந்ததுள்ளது.  5.   லயன் 32 வது ஆண்டு மலர் (வெ.எண் - 278. வருடம் 2016) நேற்றும் நாளையும், படகில் ஒரு போலீஸ்காரன், வினை வேடிக்கையாகிறது, பார்னேயின் பணால், பொடியனைக் காணோம் ஆகிய வெளிவந்த சிறுகதைகளும், இதற்கு முன்பு வெளிவராத சிறுகதையான பணயக் கைதி ஆகிய சிறுகதையும் இணைந்து இந்த இதழில் வெளிவந்துள்ளன.
 6. கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் இதழில் நதியில் ஒரு நாடகம் & கொலைகாரக் கானகம் ஆகிய இருகதைகள் மறுபதிப்பு கதைகளாக வண்ணத்தில் வெளிவந்துள்ளது.
(வெ.எண் - 312. வருடம் - 2018)


7. எரிமலைத்தீவில் பிரின்ஸ் (பிரின்ஸின் கதை வரிசையில் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது)  (வெ.எண் - 330. வருடம் - 2018)

8. மரண வைரங்கள் ( பிரின்ஸ் கதை வரிசையில் கடைசியாக வெளிவந்த மறுபதிப்பு கதை) வெ.எண் - 351 . வருடம் - 2019)


இன்னும் வண்ணத்தில் மறுபதிப்பே காணாத இதழ் என்று பார்த்தால்? இன்னும் ஆறு கதைகள் பாக்கியிருக்கு அதன் விவரங்கள்:

1.சைத்தான் ஜெனரல் (திகில் காமிக்ஸ்)
2.ஒரு திகில் பயணம் (லயன் காமிக்ஸ்)
3.புரட்சித் தலைவன் பிரின்ஸ் (லயன் காமிக்ஸ்)
4.நியுயார்க்கில் பார்னே (லயன் டாப் 10 ஸ்பெஷல்)
5.காணமல் போன கழுகு (திகில் காமிக்ஸ்)
6.பிரின்ஸ் இன் ஆப்பிரிக்கா (லயன் காமிக்ஸ்)

இதுவரை வெளிவராத கதைகள் என்று பார்த்தால், ஒரு 
முழுநீளக் கதையும், இரண்டு சிறுகதைகளும்தான் மிச்சம் உள்ளன. அது தமிழில் வெளிவருமா என்பது மில்லியன் 
டாலர் கேள்விதான்? எஞ்சியிருக்கும் வெளிவராத 
கதைகளின் விவரங்கள் கீழே!


2008 இல் பதினைந்தாவது கதையாக வெளிவந்த இந்த இதழில் மொத்தம் முன்று கதைகள் உள்ளது. இதில் இரண்டு கதைகள் வெளிவராத கதைகள், ஒரு கதையை மட்டும் கானகத்தில் கலவரம் (லயன் காமிக்ஸ்) என்ற இதழில் 
உலகம் சுற்றும் கழுகு என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. 

கேப்டன் பிரின்ஸ் கதை வரிசையில் பதினாறாவதாக வெளிவந்துள்ள கதை.2017 ஏப்ரலில் வெளிவந்துள்ளது இது தமிழில் வெளிவரவில்லை. கேப்டன் பிரின்ஸ் கதைகளின் தொகுப்பு அவ்வளவுதான் இனிமேல் படைப்பாளிகள்  புதிதாக உருவாக்கினால் தான் பிரின்ஸ் கதைகளே.
பிரின்ஸ் கதைகளைப் பற்றிய முழு விவரங்களையும் (எனக்குத் தெரிந்தவரை) இதில் தொகுத்துள்ளேன். ஏதேனும் பிழை  இருப்பின் தெரியப்படுத்துங்கள். நன்றி!

                 
Comments

 1. Excellent post. I asked you to cover this topic just 1 week before. It shows your passion and knowledge in comics.

  ReplyDelete
 2. அருமையான தொகுப்புகள் .. அண்ணா
  😍😍😍

  எனக்கு பிடித்து என்னை கவர்ந்ததும்
  என் வாழ்வில் கலந்ததும் பிரின்ஸ் னன் குணாதியங்களை கண்டே ! ! 😍 😍

  சிறுவயதில் திகிலில் மிகபிடித்த கதைகளாக இருந்தது பிரின்ஸ் அண்ட் கோ வே...

  மை பேவரைட்ஸ் :
  கொலைகாரக் கானகம்
  மரணவைரங்கள்
  பிரின்ஸ் இன் ஆப்பிரிக்கா
  சைத்தான் ஜெனரல்
  பனிமண்டலக்கோட்டை


  பிரின்ஸ் பத்தியான தகவல்களை இங்கு தொகுத்து கொள்ளலாம் ன்னு நினைக்கும்படி டைட்டில் எண்களையும் வெளிவந்த காலங்களையும் (குறிப்பான தேதிகளிருந்தாலே போதும்) குறிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சகோ
   அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்!

   Delete

Post a Comment

Popular posts from this blog

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

ராணி காமிக்ஸ் லிஸ்ட்

இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)