பைகோ கிளாசிக்ஸ்!

 


பைகோ பிரசுரம் : பூந்தளிர், பூந்தளிர் அமர் சித்திரக்கதைகள் ஆகிய இதழ்களை வெளியிட்டதோடு இல்லாமல், உலக நாடுகளில் உள்ள பழம்பெரும் இலக்கியங்களைச் சித்திரக்கதையாக வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தது! சமூகத்தில் விஞ்ஞானக் கருத்துக்களை விளையாட்டாக விளக்கும் புதுமையும் புரட்சியுமான, இந்தியாவிலேயே முதன்முதலாகப் படங்கள் மூலம் அறிவியல் விஷயங்களைப் போதிக்கும் சைஃபன் என்ற மாதமிருமுறை பத்திரிக்கையை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் வெளியிட்டு வருகிறது. இவற்றுக்குக் குழந்தைகளிடையே கிடைத்த வரவேற்புதான் பைகோ கிளாசிக் உருவானதற்கான காரணத்தை விளக்குகிறது

சைஃபன் காமிக்ஸ் (உதாரணப் படங்கள்)

        

ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட இவ்விதழ் 1987 செப்டம்பர் மாதம் முதல் தமிழில் வெளியானது. இதழ்களில் தொடர்கதைகளாக வந்தவற்றைத் தொகுத்து வெளியிடும் மரபினைப் போல், சித்திரக்கதை வடிவம் தமிழுக்கு அறிமுகமான பின்பு, தமிழில் வெளியான புனை கதைகள் சித்திரக்கதைகளாக மாற்றம் பெறத் தொடங்கின. சான்றாக தமிழ்வாணன் எழுதிய கதைகளையும் சுஜாதா எழுதிய நைலான் கயிறு உள்ளிட்ட கதைகளையும், தேவனின் துப்பறியும் சாம்பு கதையினையும் குறிப்பிடலாம்! அந்த வகையில் உலக இலக்கியங்களின் காட்சி வடிவமாக பைகோ கிளாசிக்ஸ் தமிழில் வெளியிடப்பட்டது. இதில் மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயர், ஹெச் ஜி வெல்ஸின்கால இயந்திரம்ஷேக்ஸ்பியர் எழுதிய பன்னிரண்டாவது இரவு உள்ளிட்ட கதைகள் சித்திரக்கதைகளாக வெளிவந்துள்ளன. நீண்ட புதினங்களின் சுருக்கமாக இச்சித்திரக்கதைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. உலக இலக்கியங்களை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலம், அவர்களிடையே மூலநூலை வாசிக்கும் ஆர்வம் ஏற்படும் என்ற எண்ணம் கொண்டிருந்தன. எதிர்காலத்தில் மூலநூலை வாசிக்கும் போது காட்சி வழியாக வாசித்த அனுபவம் சிறுவயது நினைவுகளைத் தூண்டும் என்பது இவ்விதழின் பயனாகக் கருதப்பட்டது. தமிழ் சூழலில்பைகோ பிரசுரத்தின்அனைத்து இதழ்களும் சிறுவர் இதழியல் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தின எனலாம். எனினும் தொண்ணுறுகளில் சிறுவர் இதழ்களுக்கான வரவேற்பு குறையத் தொடங்கிய நிலையில் பெருப்பான்மையான சிறுவர் இதழ்கள் நின்று போயின! அதில் பைகோ பிரசுரமும் அடங்கும்!
(கட்டுரை உபயம் நன்றி சு.பிரபாவதி)

1987 முதல் 1989 வரை வெளிவந்த பைகோ கிளாசிக் புத்தகங்களின் பட்டியலை கீழே தொகுக்கப்பட்டு, அதன் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



































பின் குறிப்பு -
பைகோ கிளாசிக் முகப்பு அட்டைகள் 21 ம், பைகோ கிளாசிக் பட்டியலில் 22 பெயர்களும் இடம் பெற்றிருக்கும். பைகோ கிளாசிக் 21 புத்தகங்களை மட்டுமே வெளியிட்டதாக நான் நம்புகிறேன். 22 வதாக வெளிவந்ததாக சொல்லப்படும் அண்டங்களின் போர் வெறும் விளம்பரத்தோடு நின்று போனதாகவே  எண்ணுகிறேன். ஒருவேளை அப்புத்தகம் வெளிவந்து நம்பகமான தகவல் (ஆதாரம்) கிடைக்கப்பெற்றால் அதனை ஒருநாள் இங்கே பதிவு செய்து கொள்ளலாம்!

மேலும், இப்பதிவை குறித்த ஏதேனும் வினாக்கள் இருந்தால் தெரியப் படுத்துங்கள் ! நன்றி



Comments

  1. நல்ல கலெக்க்ஷன்... ஆனால் உலக இலக்கியங்களை காமிக்ஸாக மாற்றம் காணும் போது ..நிறைய எடிட் செய்துள்ளதால்.. படிக்கும் போது கதை தொடர்ச்சி இருக்காது..

    ReplyDelete
    Replies
    1. ம்ம் உண்மைதான் ஜி

      Delete
  2. இதில் சில புத்தகங்கள் மட்டுமே வாசிக்க கிடைத்தது.... அருமையான கதைகளை தொகுத்து வெளியிட்டிருந்தார்கள் முழுமையாக கிடைக்கப்பெற்றிருப்பின் நன்றாக இருந்திருக்கும்.... ஆவணப்பதிவு மிக்க நன்றி}

    ReplyDelete
  3. பைக்கோ கிளாஸிக்ஸ் புத்தகங்களை மீட்டு எடுக்கலாமா?

    இதில் என் பங்களிப்பு ஏதும் இருக்காது ரசிப்பது அதனை பரப்புவது மட்டுமே எனது பணி.

    இவற்றுள் பன்னிரண்டு புத்தகங்கள் மட்டுமே திரும்ப திரும்ப பகிரப்பட்டு வருகிறது.

    உலக இலக்கியங்களை காமிக்ஸாக மாற்றம் காணும் போது நிறைய எடிட் செய்துள்ளதால்.. படிக்கும் போது கதை தொடர்ச்சி இருக்காது என்பது உண்மையென்றாலுமே, சிறுவர்களுக்கு கதை சொல்லுவதுவதற்கும் அவர்களை படிக்க வைப்பதறதுக்கும் இதுவே சரியான ஆயுதம் என்பது என் கருத்து.

    எனவே, இந்த இருப்பதோரு புத்தகங்களை பகிருமாறு
    அன்புடனும்
    ஆசையுடனும்
    ஆவலுடனும் பணிவுடனும்
    விருப்பத்துடனும்

    மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  4. ஏன் எல்லா பைகோ காமிக்சுகளும் இப்போது இல்லை அழிந்துவிட்டனவா?

    ReplyDelete
  5. இந்த அகதைகளில் எல்லாம் கிடைத்தால் சிறப்பு.

    ReplyDelete
  6. காமிக்ஸ் தொடர்பான தேடலில் பயனுள்ள பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

vagam comics list (வகம் காமிக்ஸ்)

முத்து காமிக்ஸ் லிஸ்ட்

லயன் காமிக்ஸ் லிஸ்ட்