ராணி காமிக்ஸ் (COMPLETE) அட்டைப்படங்கள் - (1 - 500)

சிறுவயதில் நாம் வாசித்த காமிக்ஸ்களில் ராணி காமிக்ஸுக்கு எப்போதுமே நம் மனதில் அதற்கென ஓர் தனி இடமுண்டு! எண்ணற்ற நாயக, நாயகியர்கள் அறிமுகப்படுத்தியது, மாதந்தவறாமல் (இறுதிவரை) மாதத்திற்கு இரண்டு புத்தகங்களை வெளியிட்டது என பல மறக்க முடியாத விஷயங்களை அவர்கள் செய்திருந்தாலும், ஆரம்பத்தில் காட்டிய ஆர்வத்தையும், அக்கறையையும் தொடர்ந்து காட்டியிருந்தால், இன்னும் அவர்களது காமிக்ஸ் சாம்ராஜ்யம் சரியாமலேயே இருந்திருக்கும்! அவர்கள் வெளியிட்ட மொத்த எண்ணிக்கையான 500 புத்தகங்களின் அட்டைப்படங்களையும் ( 1984 முதல் 2005) கீழே தொகுத்து கண்களுக்க விருந்தளிக்க எண்ணியுள்ளேன்! இடமிருந்து வலமாக வரிசையாக பார்த்து செல்லவும்! இப்பதிவு பலருடைய குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்கும் என்றே நம்புகிறேன்! ஓய்வு நேரத்தில் இதைப் பார்த்து விட்டு உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்தினால், பட்ட சிரமத்திற்கு மகிழ்வடைவேன்! நன்றி! ...